இலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணி போராளியான தமிழன்பு என்று அழைக்கப்பட்ட
பா சுபாசினி அவர்கள் உடல்நலக்குறைவால் சாவடைந்துள்ளார். தேச விடுதலைப்போரில் கிளாலிப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் தனது காலை இழந்த இவர் பின்னர் கணனிப்பிரிவுடன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் போரின் கொடூர பக்க விளைவுகளால் மிகவும் கடுமையான வலிகளை சுமந்தபடி லண்டனில் வாழ்ந்து வந்த ஒரு பிள்ளையின் தாயான இவர் நேற்று (22/11/2020) இறைவனடி சேர்ந்தார். இவருக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம் இத்தகவலை முன்னாள் போராளிகள், உற்றார் உறவினர் நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் சுதன்