கீழுள்ள படங்களைப் பாருங்கள்..
முதல் படம் இந்திய ரிசர்வ் வங்கியின் நுழைவாயில்..
இரண்டாவது படம் அமெரிக்காவின் பெடரல் வங்கியின் நுழைவாயில்..
அடுத்த படம் மிசௌரியிலுள்ள(US) கான்சாசு சிட்டி பெடரல் வங்கியின் நுழைவாயில்..
அடுத்தடுத்த இரண்டு படங்கள் தென்கிழக்கு ஐரோப்பாவின் போன்சியா வங்கியின் நுழைவாயில் மற்றும் செர்மனியிலுள்ள மான்கைன் வங்கியின் நுழைவாயில்..
கடைசியாக உள்ளது சீனாவின் தலைமை வங்கியின் நுழைவாயில்..
கடைசியாக உள்ள படத்தை தவிர்த்து ஏனையப் படங்களிலெல்லாம் ஆணும் பெண்ணுமாக வேறுபட்ட வடிவில் இரு சிலைகள் இருப்பதை கவனியுங்கள்..
எல்லாமே வெவ்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளின் நுழைவாயில்கள்..
இவ்வாறான நளினத்தோடு கூடிய சிலை வடிவங்களை யட்சினிகள் என்பர்..யட்சினி வழிபாடு என்பது வட்டித் தொழில் செய்வோரின் முகாமையான வழிபாட்டு முறை…
வட்டித்தொழிலின் நவீன வடிவங்களான வங்கிகளின் நுழைவாயில்களில் எப்படி இது போன்ற சிலைகள் ஒற்றுமையாக நிறுவப்பட்டுள்ளன பாருங்கள்..
கடைசியில் சீன வங்கியின் நுழைவாயிலில் இருப்பது யாளி என்றழைக்கப்படும் சிங்க உருவம்..தமிழ்நாட்டுப் பழங்கோயில்கள் அனைத்திலும் இவ்வுருவத்தை கண்டிருப்பீர்கள்.. இதுவும் யட்சி உருவம் தான்..
தொல்குடிகள் தங்கள் மண்ணுக்குரிய மரபுகளை உயர்த்திப் பிடிக்கும் போதெல்லாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்லும் நவீனத்துவ சாத்தான்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக கடத்தப்பட்ட தங்கள் மரபுகள் எதையும் விட்டுவிடவில்லை….!
-ஆரல்கதிர் மருகன்