எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் ?

1721

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களின அதிருப்பதியை தேடிக்கொண்டார். இந்நிகழ்வை தமிழ் அரசியலில் ஏற்பட்ட சுனாமிப் பேரவலம் என தமிழ் அரசியலில் மிகுந்த ஈடுபாடுடைய செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். இனப்படுகொலையாளன் என தமிழ்த்தரப்பால் அழைக்கப்படும் மகிந்த இராஜபக்சவினை ஏற்றுக்கொண்டு அவருக்கு மதிப்பளிக்க தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் கட்சி முன்வந்தமை தமிழ்த் தேசியஅரசியலில் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது என்பதனை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. குறிப்பாக குறியீட்டு அரசியலின் (symbolic politics) அடிப்படையில் பார்த்தால், சிறுபான்மையினரான தமிழர்கள், பெரும்பான்மையினாரன சிங்களவர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொள்வதனை வெளிப்படையாக அறிவிக்கும் நிகழ்வாகவே இதனைப் பார்க்க முடியும். தவிரவும், திட்டமிட்ட இந்நகர்வின் மூலம் தமிழ்த் தேசிய அரசியலில், `இனப்படுகொலை’, `சுயநிர்ண்ய உரிமை’ போன்றசொற்கள் வலுவிழந்தவையாக ஆக்கப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் தமிழ் மிதவாதிகளிடமிருந்தும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீவிரஆதரவாளர்களிடமிருந்தும் வரும் கருத்துகளையும் நாம் கிரகிக்க வேண்டியுள்ளது. இக்கருத்துகள் இரண்டுவகையானவை. ஒரு சாரார், மாகாண சபை முதலமைச்சர்கள் ஜனாதிபதியின் முன் பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லைஎனினும், இந்நடைமுறை வழமையாக்கப்பட்டுள்ளதால், அதனையே விக்கினேஸ்வரன் பின்பற்றியிருக்கிறார் என வாதிடுகிறார்கள். அவ்வாறான நடைமுறையை பின்பற்றபடாதவிடத்து, வட மாகாண சபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுவிடும் என அவர்கள் அச்சப்படுகிறார்கள். அதாவது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், தவிர்க்கமுடியாத நிலையில், வேறு வழியின்றி கூட்டமைப்பு இவ்வாறுநடந்துகொள்வதாக அவர்கள் இந்நடவடிக்கையைநியாயப்படுத்துகிறார்கள்.இன்னொரு சாராரோசர்வதேச நாடுகளின் இராசதந்திரிகளின் ஆலோசனைக்கு அமையவே இந்த முடிவு எடுக்ப்பட்டதனால் இதனை ஒரு `இராச தந்திர` நகர்வு எனஆறுதலடைகிறார்கள். அத்துடன் நின்று விடாதுசர்வதேசம் இப்போது `எங்கள்` பக்கம் இருப்பதால் இது தொலை நோக்கில் பல சாதகமான விளைவுகளைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கிறார்கள்.

பதவிப்பிரமாண நிகழ்வில் விக்னேஸ்வரன் தனது முழுக்குடும்பத்துடன், திருமணவழி சம்பந்திகள் சமேதம் வந்து சிறப்பித்தன் மூலம், முதலாவது கருத்திற்கு விளக்கம் சொல்வதற்கு அவசியமில்லாமல் செய்து விட்டார். விக்கினேஸ்வரனும் அவரது குடும்பத்தினரும் வழங்கிய நிழல்ப்பட அனுசரணைக்கு சிறிலங்கா தவகல் திணைக்களத்தினர் அவருக்கு என்றென்றும் நன்றியுடைவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இலங்கைத்தீவில் இனரீதியான ஒடுக்குமுறைகள் இல்லை என பரப்புரை செய்வதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. ஆகவே அதனைத் தவிர்த்து, இரண்டாவது கருத்துக்கு வருவோம். இது மேற்குலகத்தின் இலங்கைத் தீவுதொடர்பான அணுகுமுறையுடன் தொடர்புடையது என்பதனால் இவ்விடயத்தில் மாத்திரம் இக்கட்டுரை கவனம் செலுத்தியுள்ளது.

vicki-and-sampanth-1சிறிலங்கா அரசாங்கம் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய சந்தேகங்களை அகற்றிக் கொள்ள முடியும் எனவும், அதற்குஇப்பதவியேற்பு வைபவத்தினை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறும், கொழும்பில் உள்ள இந்திய, அமெரிக்க இராஜதந்திரிகள் தமக்கு அறிவுறுத்தியதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியதாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் பி.பி.சி தமிழ்ச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். சித்தார்த்தனின் தகவல் இரகசியமான ஒன்றல்ல. ஏனெனில்புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனான சந்திப்புகளில், மேற்குலக சிந்தனை மையங்களின பிரதிநிதிகளும், இராஜதந்திரிகளும் இதனையே தொடர்ச்சியாகத் வலியுறுத்தி வருகிறார்கள். சர்வதேச முரண்பாடுகளுக்கான மையத்தின் (ஐஙூஞ்க்சுஙூஹஞ்கூச்ஙூஹஙீ இசுகூசூகூசூ எசுச்ஞிசி) அண்மைய அறிக்கையிலும் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்விடத்தில் இளம் கல்வியாளர் ஒருவர் சமூகவலைத்தளம் ஒன்றில் எழுப்பிய கேள்வியினை அதன் பொருத்தப்பாடுகருதி இங்கு குறிப்பிடுகிறேன். “திரு. சம்பந்தன் சிங்கக் கொடியை பிடித்தார்,சி.வி. விக்கினேஸ்வரன் மகிந்தவின் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை வேண்டுகிறார்கள் என்பதனை உறுதிப்ப்படுத்த இன்னும் வேறென்னவெல்லாம் செய்ய வேண்டும்? சி.வி. விக்கினேஸ்வரன் குறிப்பிடுவதுபோன்று (சிங்கள மக்கள் மத்தியிலுள்ள) `ஐயப்பாட்டையும் தவறான விளக்கத்தினையும்’ அகற்றுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் இதனைச் செய்ய வேண்டும்’ இவ்வாறு அவரது கேள்வி இருந்தது. இவ்வருட முற்பகுதியில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவையின் மாநாட்டில்,சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் முன்னிலையில்எரிக் சொல்கெய்ம் ஐ நோக்கி இவ்வாறான ஒரு கேள்வியை இக்கட்டுரையாளர் கேட்டிருந்தார். ஆனால் அதற்கான பதில் சரியாக வழங்கப்படவில்லை.

இலங்கைத் தீவில் பேணத்தக்க வகையிலான அமைதியை ஏற்படுத்துவதற்கு இனங்களுக்குஇடையில் நல்லிணக்கம் நிலவவேண்டும என்றஒற்றை இலக்கை நோக்கியே மேற்குலகமும், இந்தியாவும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதற்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவை எனக் கருதும் எச்செயலினையும் அவர்கள் ஊக்கப்படுத்துவதில்லை. `இனங்களுக்குஇடையிலான நல்லிணக்கம்’ என்பது ஒன்றும் தகாதவார்த்தைகள் கிடையாது என்பதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது உலக நீதியின்பாற்பட்டு இனங்களுக்கான தனித்துவம் பேணப்படும் வகையில் அமையுமா, நெருக்குவாரத்தின் அடிப்படையில் ஏற்பட்ட இணைப்பாடாக என்பதுதான் இங்குள்ள பிரச்சனை. வெளித்தரப்பிரைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட தரப்புகளின் மீதுஅழுத்தங்களைப் பாவித்து, அல்லது அவர்களைஏமாற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றன. ஆதலால் அவர்கள் பரிந்துரைக்கும் தீர்வுநீதியின் பாற்பட்டதாக அமைய வேண்டும் என்பது அவசியமில்லை.

மேற்குலக சிந்தனை மையங்கள் குறிப்பிடுவதிலிருந்து பார்த்தால், இப்போதைக்கு, தமிழர்கள் தங்களிடம் ஒரு சுயாட்சி அலகு இருப்பதாக உணரவேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பது தெரிகிறது.இருப்பதை வைத்து முன்னேறுதல் என்ற அடிப்படையில் கோறையான ஒரு அதிகாரப்பரவலாக்க அலகினை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்கள் தமிழர்களுக்கு வழங்கும் ஆலோசனை அல்லது கட்டளை. இவ்வாறான கோறையான `சுயாட்சி’ அலகானது சிறிலங்காவின் ஓற்றையாட்சிக்குள் அமைந்துள்ளது அல்லது தங்களின் மேலாண்மைக்குட்பட்டது என்பதனை சிங்களத் தரப்பு நம்பவேண்டும் என்றும், மற்றயசிறுபான்மை இனங்கள் தங்களுக்கும் இவ்விடயங்களில் வகிபாகம் இருப்பதாக உணரவேண்டும என்றும் எதிர்பார்க்கிறார்கள். எத்தகைய தீர்வு முயற்சியும் சிங்கள மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் எனக்குறிப்பிடுவதன் விளக்கம் இதுதான்.

vicki-and-sampanthகூட்டமைப்பைப் பொறுத்தவரை, அது முற்று முழுதாகவே வெளித்தரப்பின் இழுப்பிற்கு ஏற்ப செயற்படத்தயாராக இருக்கிறது. அதனிடம் வேறெந்தத் தெரிவுகளும் இல்லை என்பது வேறுவிடயம். பொதுவில் வெளித்தரப்பு கீறும் வட்டத்திற்குள் நின்று செயற்படும் கூட்டமைப்பு தேர்தல்காலங்களில் மாத்திரம் விதிவிலக்காக `சுயநிர்ண்ய உரிமை’, `இறைமை’, `தனித்துமான தேசியம்’ போன்றசொல்லாடல்களை பயன்படுத்துகிறது. பிரச்சார மேடைகளில் அதி தீவிர தேசியவாதம் பேசுகிறது. வாக்கு வங்கியினை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்படும் இப்பிரச்சாரங்களை சம்பந்தப்பட்டவர்கள் சகிப்புடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

கூட்டமைப்பினரைப்போல், சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளித்தரப்பின் நெறிப்படுத்தலுக்கு முழுவதுமாக இணங்க முடியாவிட்டாலும், தன்னால் முடிந்தவரை ஒத்துழைத்து வருகிறது. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாத வாக்கு வங்கியை நம்பியிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் எப்போதுமே இவ்வாறு நடந்து கொள்ள முடியாதுமுரண்படும் நிலை ஏற்படலாம். அந்நிலையில் வெளித்தரப்பினர் தங்கள் பக்க நியாயங்களை புரிந்து கொண்டு தங்களது சமஸ்டிக் கோரிக்கையை சாதகமாக அணுகி, தமக்கு உதவுவர் எனக்கூட்டமைப்பும் அதன் நீட்சியாகச் செயற்படும் சிலபுலம்பெயர் அமைப்புகளும் முழுமையாக நம்புகின்றன. சுருக்கமாகச் சொன்னால் இதுதான் இவர்களிடம் உள்ள ஒரேயொரு மூலோபாயம். இறுதியாக மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் சம்பந்தன் இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டார். தாங்கள் இரகசியமாகப் பேணிவந்த `மூலோபாயம்’ பற்றிய விபரங்களைத் தங்களது தலைவர் போட்டுடைத்துவிட்டார் என கூட்டமைப்பின் புலம்பெயர் ஆதரவாயளர்கள் குறைப்பட்டுக் கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் மேற்படி மூலோபாயத்தை நன்கு அறிந்து வைத்துள்ள சிறிலங்கா ஆட்சிமையம் தனது இராஜதந்திர வலிமையை பாவித்து அதனைமுறியடிக்கும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறான நிலையில், தமிழ் மக்கள் எவ்வித அதிகாரமுமற்ற `பதின்மூன்று மைனஸ்’ஐ ஏற்று அதனுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.