சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் சுமார் 190 நாடுகளில் கொரோனா பரவி இன்னும் சில தினங்களில் ஒரு மில்லியன் நோயாளர்கள் என்ற எண்ணிக்கையை எட்டவுள்ளது.
இன்றைய (02-04-2020) நிலவரப்படி உலகம் முழுவதும் 941,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,522 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 195,929 பேர் மீண்டுள்ளனர்.
மக்களிடையே போதிய விழிப்புணர்வின்மை, அலட்சியப்போக்கு காரணமாக இன்னும் வேகமாக தொற்றும் வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.