கழகம் ஒரு குடும்பம்! குடும்பமே கழகம்!! கலகம் தான் கழகம்!!!

1374

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் தடையாக வந்தவர்கள் எல்லாரையும் தூக்கி எறியத்தயங்கவில்லை. தந்தை பெரியார் திருமணம் செய்தவுடன் திராவிடக் கழகத்தில் இருந்து அறிஞர் அண்ணா தலைமையில் பலர் பிரிந்தபோது கருணாநிதி தி.க.விலேயே இருந்தார். பின்னர் அண்ணாவின் திமுகவிற்கு வளரும் செல்வாக்ஹகக் கண்டு அண்ணாவுடன் இணைந்தார். அண்ணா மறைவிற்குப் பின்னர் தான் முதல்வர் பதவிக்கு தடையாக இருந்த இரா நெடுஞ்செழியனை எம்.ஜீ.ஆரின் உதவியுடன் விலக்கினார். பின்னர் அதே எம்.ஜீ.ஆரையும் தூக்கி எறிய கருணாநிதி தயங்கவில்லை.

திருட்டு வீடியோக் கடை நடாத்தியவர்

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு. க. முத்து பெரும் குழடிகாரனாக மாறியபோது அவரையும் குடும்பத்தில் இருந்தே விலக்கி வைத்தார். கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளுவின் மூத்த மகனும் சரித்திரம் படித்த பட்டதாரியுமான மு. க. அழகிரி பெரும் குழப்படிகாரனாக மாறிய போது அவருக்கு மதுரையில் ஒரு ஒலி-ஒளி நாடாக் கடை போட்டுக் கொடுத்து தன்னிடமிருந்து விலக்கி வைத்தார். அழகிரிக்கு மதுரையில் முரசொலி பத்திரிகை விவகாரத்தைப் கவனிக்க அனுப்பப்படுவதாகச் சொல்லப்பட்டது. மதுரைக்குப்போன அழகிரி அங்கு தனது சண்டித்தனத்தாலும் பணத்தாலும் தனக்கு என்று ஒரு பெரும்கும்பலை உருவாக்கினார். இது கருணாநிதியின் கட்சிப்பணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதனால் அழகிரி கட்சியில் வளர்ந்து திமுகவின் தென்மண்டலச் செயலாளரானார். அஞ்சா நெஞ்சன் என்னும் பட்டமும் பெற்றார்.சிலர் அழகிரியை திருட்டு வீடியோக் கடை நடாத்தியவர் என்றும் விமர்சிப்பதும் உண்டு. மதுரைக்கு எப்போதும் ஒரு சண்டியன் தேவை. முன்பு திமுகவின் மதுரைச் சண்டியனாக மதுரைமுத்து என்பவர் இருந்தார்.

தொடரும் பங்கீடு

கட்சியில் தனது செல்வாக்கை பரப்ப முயன்றஅழகிரிக்கு தடையாக இருந்தவர் அவரது தம்பி மு. க. ஸ்டாலின் இவரும் தயாளுவின் மகன். ஆனால் அழகிரிக்கு முன்னரே கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தனக்கென்று திமுகவில் தனியிடம் பெற்றவர். இவரை ஓரம் கட்டி அழகிரிமுன்னுக்கு வர முயன்றார். இதனால் அழகிரியை இந்தியப் பாராளமன்றத்தின் உறுப்பினராக்கி அவருக்கு மைய அரசில் அமைச்சர்ப்பதவியும் பெற்றுக் கொடுத்தார் கருணாநிதி. முரசொலி மாறன் டில்லியிலும் தான் சென்னையிலும் பதவி வகித்தது போல் அழகிரியும் ஸ்டாலினும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளட்டும் எனகருணாநிதி நினைத்தார். ஆனால் ஆங்கிலமோ இந்தியோ தெரியாத அழகிரிக்கு டில்லியில் பதவி வகிப்பது அறவே பிடிக்கவில்லை. கருணாநிதிக்குப் பின்னர் தானே முதலமைச்சராக வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றார்.

தூங்காத நகரில் ஓயாத கொலைகள்

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

மதுரையில் அழகிரி கும்பல் வேண்டுமென்றே நீர்த்தட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டு குழாய்க்கிணறுகளை விற்பனை செய்தார் எனக் குற்றம் சாட்டிய பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த தோழர் லீலாவதி என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அழகிரி-ஸ்டாலின்மோதல் தீவிரமடைந்த போது ஸ்டாலின் ஆதரவாளர் த. கிட்டினன் என்ற திமுக அமைச்சர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக அழகிரி கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். திமுகவின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவரும் அழகிரி ஆதரவாளருமான நில அபகரிப்பு வழக்கில் கைதான பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவருமான `பொட்டு`பீ சுரேஷ்என்பவரும் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டர். கருணாநிதியின் மருமகன் முரசொலிமாறனின் குடும்பத்துப் பத்திரிகையான தினகரனில் அழகிரியிலும் பார்க்க ஸ்டாலினிற்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருப்பதாக கருத்துக் கணிப்பு கூறுவதாகச் செய்தி வெளிவிட்டதனால் மதுரையில் இருந்த தினகரன் பணிமனை அடித்து நொருக்கி கொழுத்தப்பட்டதால் அங்கு வேலை செய்தவர்கள் கொல்லப்பட்டனர்.

கருணாநிதிக்கு கைகொடுக்கும் விடுதலைப் புலிகளே!!!

மு.க.ஸ்ராலின்
மு.க.ஸ்ராலின்

டில்லி பிடிக்காத அழகிரி தனக்கு சென்னைவேண்டும் என அடம்பிடிக்கத் தொடங்கியதில் இருந்து அழகிரி-ஸ்டாலின் மோதல் மீண்டும் பூதாகாரமாக வெடித்தது. இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி சென்னையில் நடப்பதால்யாரும் மர்மமான முறையில் கொல்லப்படவில்லை. கட்சியில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கருணாநிதியிடமே நேரடியாகப் போய் சண்டை போட்டார் அழகிரி. சண்டையோ சண்டை. கருணாநிதி கவலைப்பட்டு அழகிரியையே கட்சியை விட்டு விலக்கும் அளவிற்கு சண்டை இருந்தது.கருணாநிதிதான் திரைக்கதை வசனம் எழுதுவதில் வல்லவராயிற்றே. ஸ்டாலின் இன்னும் மூன்று மாதத்தில் இறந்து விடுவார் என ரெம்ப மனவருத்தப் பட்டு கருணாநிதி கருத்து வெளியிட்டிருந்தார். அவர் கூறியதில் இருந்து ஸ்டாலினை இன்னும் மூன்று மாதங்களுக்குள் போட்டுத் தள்ளி விடுவேன் என அழகிரி கூறியதைத்தான் கருணாநிதி இப்படி சொல்லுகிறார்என மாற்றுக் கட்சிக்காரர்கள் கிண்டலடிக்கின்றனர். கருணாநிதி இத்துடன் நிற்கவில்லை. தனது மகன் ஸ்டாலினிற்குப் பாதுகாப்பு அவசியம் என்பதை அவர் நன்கு உணர்ந்தார். டில்லியிலும் சென்னையிலும் அவர் ஆட்சியில் இல்லை. உடனே அவர் புலிப்புரளியைக் கிளப்பினார். தனது மகன் ஸ்டாலினிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆபத்து உண்டு என டில்லிக்கு கடிதம் எழுதி ஸ்டாலினிற்கு உயர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மீண்டும் 2ஜீ பூதம்

கனிமொழி
கனிமொழி

கருணாநிதியின் பிரச்சனை இத்துடன் முடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் கருணாநிதியின் குடும்பத்தின் 2ஜீ ஊழல் தொடர்பான மேலும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். இதைக் கேட்டு கலங்கிப் போனது கருணாநிதியின் மூன்றாம் (கணக்கு சரியா தெரியாது) மனைவியின் மகள் கனிமொழி மட்டுமல்ல முழுக் குடும்பமுமே. காங்கிரசுக் கட்சி தனது தேவைகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை பயன்படுத்துகிறதா என்ற ஐயம் இங்குவலுவடைகின்றது. இந்திய உளவுத் துறையானசிபிஐ ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் வெளியிட்ட ஆதாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்யப்படும் என அறிவித்தனர். தி.மு.க.வைமிரட்டி காங்கிரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர வைக்க செய்யப்பட்ட வேலைதான் ஆம் ஆத்மிவெளிவிட்ட 2ஜீ ஊழல் தொடர்பானஆதாரம் எனப் பலரும் ஊகிக்கின்றனர். உடனே கனிமொழி காங்கிரசுடன் கூட்டுச் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை என தந்தையிடம் வலியுறுத்தினாராம். அவர் இதை இரு நோக்களுடன் செய்தார். ஒன்று தான் 2ஜீ ஊழலில் இருந்து தப்ப காங்கிரசின் ஆதரவு தேவை என்பதால். மற்றது அழகிரி கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதால் தன்னால் டில்லியில் ஒரு நல்ல அமைச்சுப் பதவியைப் பெற முடியும் என அவர்நம்புகிறார். ஆனால் ஸ்டாலின் காங்கிரசுடன் கூட்டணியை மறுத்து விட்டார். இதனால் கருணாநிதியின் வாரிசுகள் மூன்று முனையில் நின்று மோதிக் கொள்கின்றனர். ஸ்டாலின் காங்கிரசுடன் கூட்டணி இல்லை எனத் தொடர்ந்து முரண்டு பிடித்தால் ஸ்டாலினிற்கு எதிராகவோஅல்லது திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான அவரது மகன் உதயநிதிக்கு எதிராகவோஒரு வருமான வரிச் சுத்துமாத்துக் குற்றம் தயாரிப்பது நிச்சயம் நடக்கும். இந்தியாவில் கட்சிகளின் கூட்டணியை கட்சித் தலைவர்களின் ஊழல் தொடர்பாக சிபிஐயிடம் இருக்கும் கோப்புகள் தான் முடிவு செய்யும்.

தங்கை யாருக்காக

முரசொலி செல்வம்
முரசொலி செல்வம்

முரசொலி மாறனின் தம்பி முரசொலி செல்வத்தை கருணாநிதியின் மகள் செல்வி திருமணம் செய்திருப்பதாலும் தம்மிடம் இருக்கும் பணவலுவாலும் மாறன் குடும்பத்தைச் சேர்ந்த தயாநிதி பாராளமன்ற உறுப்பினராகஇருக்கிறார். ஸ்டாலினும் அழகிரியும் அவ்வப்போது கனிமொழியை தம் பக்கம் இழுக்க முயற்சிப்பது உண்டு. தனது மகளுக்கு அமைச்சுப் பதவியோ அல்லது கட்சியில் தன் சக்களத்தியின் பிள்ளைகளுக்கு இணையான பதவியோ கொடுக்கப்படவில்லை என கனிமொழியின் தாய் ராஜாத்திக்கு பெரும் கவலை. இது தொடர்பாக அவர் கருணாநிதியிடம் சண்டை போடுவதும் உண்டு. அழகிரி கட்சியில்இருந்து விலக்கப்பட்ட பின்னர் அவரதுஆதரவாளர்கள் தம் பிழைப்புக்காக கனிமொழியின் பின்னால் போகத் தொடங்கியது ஸ்டாலினை ஆத்திரப்படுத்தியுள்ளது.

கருணாநிதி குடும்பம் போராளிகள் அமைப்பல்ல

ஒருவருடன் ஒருவர் மோதுபட்டு அழிந்து போக கருணாநிதி குடும்பம் ஒன்றும் கிளர்ச்சிக் குழு அல்ல. முன்னர் முரசொலி பத்திரிகைப் பணிமனையை மதுரையில் எரிபட்டத்தைத் தொடர்ந்து கொலைகார அழகிரி என மாறன்குடும்பத்து சன் தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் விமர்சித்ததைத் தொடர்ந்து கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் பிளவு பட்டுக் கொண்டன. பின்னர் கருணாநிதியின் பேரப் பிள்ளைகள் கருணாநிதியின் மகள் செல்வி (முரசொலி) செல்வம் மருத்துவமனையில் இருந்த போது சந்தித்து எல்லாரையும் ஒற்றுமையாக்கினார்கள். அதன் பின்னர் அவர்கள் தமது இடைவெளிகள் எப்படி இருக்க வேண்டும் எனத்தீர்மானித்துக் கொண்டனர். தாம் பிளவு பட்டு இருப்பதால் இருவரது செல்வமும் தேய்ந்து போகும் என அவர்கள் நன்கு அறிவார்கள். அழகிரியையும் ஸ்டாலினையும் இணைத்து வைக்க அழகிரியின் மனைவியும் கருணாநிதியின் மகள் செல்வியும் கடுமையாக முயற்ச்சிக்கிறார்கள். அழகிரியின் மகன் முதலில் கருணாநிதியையும் ஸ்டாலினையும் தாக்கி டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தாலும் அவரும் இப்போது சித்தப்பாவுடன் உடன்படுவது தனக்கும் நல்லது என நினைக்கிறாராம். திரைப்படத் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரிக்கும் எதிராக கிரனைட் ஊழல் வழக்கு, வீட்டு மனை ஒதுக்கிய வழக்கு போன்றவற்றில் மாட்டுப்பட்டவர். இவரும் மன்னரைச் சார்ந்து ஒழுகுதலை விரும்புகிறார். ஏதாவது ஒரு குடும்ப நிகழ்வின் பின்னர் எல்லாரும் ஒன்றாகலாம். ஆனால் அஞ்சா நெஞ்சன் அழகிரி விட்டுக் கொடுக்க வேண்டும்.