கிளிநொச்சி வீதியெங்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ.சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை கிளிநொச்சியின் வீதியெங்கும் இத் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.
வேண்டாம் சுமந்திரன் எனும் தலைப்பில் தமிழர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரனை தோற்கடிப்போம் என எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களே வீதிகளில் வீசப்பட்டுள்ளன. துண்டுப் பிரசுரத்தின் கீழே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கிளிநொச்சி மக்கள் என உரிமைக் கோரப்பட்டுள்ளது.
மேலும் தமிழரசு,தமிழ்தேச கூட்டமைப்புக்குள் வலுக்கும் சுமந்திரன் எதிர்ப்பு காரணமாக,தக்க நேரத்தில் சுமந்திரனை பழி வாங்க பல்வேறு உள் வீட்டு தரப்பினர் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.