வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய சந்திப்பு இடங்களாக இருப்பதில் கோவில்களும் அடங்குகிறது. உண்மையான அருள் வேண்டிக் கும்பிட, உணவு உண்ண, சனங்களைச் சந்தித்துக் கதைக்க, தேர் தீர்த்தக் கடைகளில் சாமான் வாங்க என பல வசதிகள் கோயில்களில் கிடைக்கிறது. கோயில்களுக்கும் பக்தர்களால் நிதி பெருமளவு வசூலாகிறது.

இலண்டன் கோயில்களில் பல அவற்றின் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படும் நிர்வாகத்தால் பரிபாலனம செய்யப்படுகின்றன. இந்தக் கோவில்களுக்கு தேர்தல்கள் என்று வரும்போது போட்டியிருப்பது வழமை தான். ஆனாலும் இவை பொதுச் சொத்தாக இருப்பது ஒரு ஆறுதல் விடயம்.

சில இலண்டன் கோயில்கள் சொந்தக் கோயில்களாகவும் நடக்கின்றது. தெற்கு இலண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயில் தனியார் நிர்வாகம் தான். இங்கு அருச்சனைச் சீட்டு விற்கப்படுவதில்லை. நல்ல பரிபாலனம். கட்டட நிதி அது இது என்று சீட்டு எழுதி கைநீட்டி காசு வாங்காத கோவில் என்று இதற்கு நல்ல பெயர். ஆனால் டூட்டிங்கில் இருக்கும் அம்மன் கோவில் பற்றிய விமர்சனங்கள் அடிக்கடி வருகிறது.

இது ஒரு தனியார் கோவிலாக கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்தக் கோயில் Barrowfen Properties  என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில், பதினைந்து வருடக் குத்தகைக்குப் பெற்று நடாத்தப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இக்கட்டடத்தை சொந்தமாக வாங்க வாய்ப்பு உள்ளது என்று நிதி வசூலிக்கப்பட்டது. கட்டிடம் வாங்கப்படவும் இல்லை வசூலிக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்ற விளக்கமும் இல்லை. பதினைந்து வருடக் குத்தகை இந்த ஆண்டு முற்பகுதியில் முடியப் போகிறது என்று தெரிந்தும். அடாத்தாக இருக்க முடிவு செய்யப்பட்டது. உரிமையாளரான Barrowfen Properties குத்தகைக் கால முடிவில், இக்கட்டிடத்தை இடித்துவிட்;டு, பல்கலைக்கழக மாணவருக்கான விடுதியும், குறைந்த விலை தங்கு விடுதியும் கட்டுவதற்கு Wandsworth கவுன்சிலுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தார். ஆட்களைத் திரட்டிய கோயில் நிர்வாகத்தினர் இது புராதனக் கட்டம் என்றும், அத்தகைய கட்டிடத்தை இடிக்கக்கூடாது என்ற நியதியைக் காட்டி காணி உரிமையாளரின் விண்ணப்பத்தைக் கவுன்சிலால் நிராகரிக்கச் செய்தனர். குத்தகைக்காலம் முடிந்தும் அடுத்த திட்டம் எதுவுமில்லாமல் அடாத்தாக கட்டடத்தில் இருந்து கொண்டு எழும்ப முடியாது என்று கூறி வழக்காடியது. வழக்கை நிராகரித்த நீதிமன்றம் உடன் எழும்புமாறு தீர்ப்பளித்துள்ளது.

தேசியம் விடுதலை என்ற சொல்லை வரைபடங்களை, தேசியத் தலைவர் படத்தை மாவீரர் நினைவுத் தூபியை வைப்பதும் பிறகு எடுப்பதும் புனிதமான விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயற்பாடு அல்லவா? ஈழவிடுதலை என்ற சொல்லை வியாபாரமாக்கி பயன்படுத்தலாமா?

இந்நிலையில், தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதனால், சிறிலங்கா தூதரக அதிகாரி அம்சா முயற்சி எடுத்து கட்டிடத்தை இடிக்க முயல்வதாக, கோவில் நிர்வாகம் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ்நாட்டிலுள்ள சில பரபரப்பு ஊடகங்கள் மூலம் பரப்பி தமிழ மக்களை உசுப்பேத்தும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

“பிரித்தானியாவில் சைவத்திருத்தலம் அழிக்கப்படும் அபாயம் விரைந்து உதவுங்கள்” என்ற கோரிக்கையுடனான மின்னஞ்சல்கள் மேற்படி ஆலய நிர்வாகி நிமலன் சீவரத்தினம் என்பவரால் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னொருபுறத்தில் 2.2 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான காணி ஒன்றினை வாங்குவதற்கான முயற்சிகளும், அதற்கான நிதி சேகரிப்பும் நடைபெறுவதாக அறியக் கிடைக்கிறது.

இந்நிலையில், தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதனால், சிறிலங்கா தூதரக அதிகாரி அம்சா முயற்சி எடுத்து கட்டிடத்தை இடிக்க முயல்வதாக, கோவில் நிர்வாகம் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ்நாட்டிலுள்ள சில பரபரப்பு ஊடகங்கள் மூலம் பரப்பி தமிழ மக்களை உசுப்பேத்தும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்கோவில் நிர்வாகம் என்பது ஐந்து பேர் கொண்ட அறக்கட்டளையாக உள்ளது. இதில் இக்கோவிலை ஆரம்பித்த சீவரத்தினம் அவர்கள் தான் எல்லாமாக இருக்கிறார். பக்தர்கள் வரலாம் கும்பிடலாம், தாராளமாக நிதி கொடுக்கலாம், சீட்டுப் பெற்று அருச்சனை அபிஷேகம் செய்யலாம,; கேள்வி மட்டும் கேட்கக்கூடாது. கேட்டால் கோவிலுக்கு வர தடையுத்தரவு பிறப்பிக்கப்படும். இக்கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுப்பதில் கட்டப்படும் முற்பணம்; திருப்பிக்கொடுக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் பல முன்பும் சொல்லப்பட்டது. ஆலய நிரந்தரத் தலைவர் சீவரத்தினம் ஐயா, அவரது மூத்த மகன் நிமலன் இப்போது நிரந்தரத் தலைவராகி உள்ளார். செயலாளராக அவரது இரண்டாம் மனைவியின் மகன் இருக்கிறார். நிர்வாகசபையில் இவரால் விசா எடுத்துக் கொடுக்கப்பட்ட ஒரு இளம் அர்ச்சகர், தேர் செய்துகொடுத்த சிற்பாசிரியர் என்று ஆக நாலு பேர் உள்ளனர். இந்த நால்வரும் ஐயா சொல்லுகின்ற இடங்களில் கையெழுத்துப் போடுகின்ற பொம்மைகளாகச் செயற்படுகிறார்கள்.

நிரந்தரத் தலைவராக இருந்த நாகேந்திரம் சீவரத்தினம் அவர்களை பிரித்தானிய அறக்கட்டளை ஆணைக்குழு, பதவியிலிருந்து விலக்கச் செய்தமையால் மேற்படி நால்வரைப் போட்டு நிர்வாகத்தை இயக்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பக்தர்களை அங்கத்தவர்களாகச் சேர்த்து, நிர்வாகமாக்கி நடத்தும்படி அறிவுரை சொன்ன அறங்காவலர்கள் விலத்தப்பட்டார்கள். அல்லது தாமாகவே விலகிக்கொண்டார்கள். திரு. கமல் சிங்கம், திரு. குமார் என்பவர்கள் விலத்தப்பட்டவர். கனவான் சிவாஜி மருத்துவர் நடேசலிங்கம் என்போர் ஒதுங்கி விலகிக்கொண்டார்கள்.

இப்போது பொதுமக்கள் பல கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளில் என்னவென்றால்,

  1. 15 வருடங்களாக ஸ்ரோன்லி அம்மன் கோவில் போன்ற பிற கோவில்கள் போல் நல்ல வருமானம் இருந்தும் ஏன் சொந்தமாக காணி வாங்கி கட்டடம் எழும்ப முடியாமல் போனது?
  2. தன் மைத்துனனின் ஈழபதீஸ்வரர் கோவிலை பொறுப்பெடுத்ததை நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, எதிர்த்து வழக்காடி கோவில்ப் பணத்தை ஏன் செலவழிப்பான்? அந்த வழக்கிலும தோற்றுஎஏன் மொக்கையீனப்படுவான்?
  3. ஒட்டியுள்ள உறவுகளை கோயில் உதவி நிதி என்று வழங்கி ஏன் செலவு செய்வான்? யார் யாருக்கு வீடு வாங்கப்பட்டது? சேமிப்பு நிதியில் காசு போடப்பட்டமை தொடர்பாக கணக்கு வெளிப்படுத்தப்பட்டதா? கோயில் பொறுப்பிலிருந்து திரு.சீவரத்தினம் விலக வேண்டும் என்று சொல்லப்பட்ட தீர்ப்புக்கு எதிராக வழக்காட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோவில்ப் பணம் செலவழிக்கும்படி அம்மன்தான் பணித்தாரா?
  4. கோவில் வாங்குவதற்கென முன்பு சேகரிக்கப்பட்ட பணம் எங்கே? குத்தகை முடிவில் அடாத்தாக இருந்து வழக்காடும்படி தெய்வம் பணித்ததா? கீழே உணவு விடுதிக் கடை அமைக்கப்பட்ட போது அதனைத் தடுக்க வழக்காடி ஏன் கோயில்ப்பணத்தை ஆயிரக்கணக்கில் செலவு செய்வான்? இந்த வழக்கும் தோல்வி கண்டது தானே?
  5. தேசியம் விடுதலை என்ற சொல்லை வரைபடங்களை, தேசியத் தலைவர் படத்தை மாவீரர் நினைவுத் தூபியை வைப்பதும் பிறகு எடுப்பதும் புனிதமான விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயற்பாடு அல்லவா? ஈழவிடுதலை என்ற சொல்லை வியாபாரமாக்கி பயன்படுத்தலாமா?

ஆலயத்தை பொது நிர்வாகமாக ஆக்காமல் இன்றும் குடும்பச் சொத்தாக வைத்துக் கொண்டு மக்களிடம் ஏன் நிதி சேகரிக்கிறீர்கள்? இவை பொது மக்களிடமிருந்து வரும் கேள்விகள்.
கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடதென்ற பராசக்தி திரைப்பட வசனம் அறுபதாண்டுகளுக்குப் பிறகும் பொருத்தமாகத்தான் தெரிகிறது.

சாமிமலை (ஒரு பேப்பருக்காக)