குறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்

102

மழை நின்றாலும், தூறல் நின்றபாடில்லை என்று எம்மில் சிலர், தாயகநிலைபற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள். புதிதாக போட்ட றோடும், சொகுசு வண்டியும், தங்குமிடங்களில் நீச்சல் தடாகங்களும், தமிழ் பாராளமன்ற உறுப்பினரின் புதியநல்லாட்சிக்கான ஏகோபித்த ஆதரவும், உங்களை மழைநின்று போனதாகவும்,அங்காங்கே துÖறல்கள் மட்டும் தான் இருப்பதாக நினைக்கவைத்திருக்கும். ஆனால் எதுவுமே மாறவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை. வெளிநாடுகளின் பொருளாதாரமுதலீட்டு அபிலாசைகளை, முதலில் திருப்திப்படுத்துவதற்காக செய்யவேண்டியதுகளை என்னமோ செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவை தமிழரின் அபிலாசைகளைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படுபவை அல்ல.

நாம் அழுது புரண்டு, ஆப்பாட்டம் செய்து,உண்ணாவிரதம் இருந்து, ஏன் உயிரைக்கூட எமது கோரிக்கைகளுக்காக மாய்த்தும் கூட, தமிழரின் தேவைகளை நிவர்த்தி செய்வது மந்த கதியிலேயே நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையான புரிந்துணர்வின் அடிப்படையில்இல்லாது, ஒருகண்துடைப்பு வேலையாகவேநடந்து கொண்டிருக்கின்றது. முன்பு வெளிப்படையாக நடந்த ஆட்கடத்தல்கள், இப்போதும்நடக்கின்றன, ஆனால் எமக்கெனதனித்துவமான ஊடகங்கள் இல்லாமையால் இப்படியானசெய்திகள் காத்திரமான வடிவில் வெளிவருவதில்லை.

அத்தோடு இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளதால், யாரும் அதுபற்றிகுரல் துÖக்கலாக வெளிப்படுத்துவதில்லை. அடக்குமுறைக்குள் அழுந்துபோய், அடுத்தவேளை உணவுக்கும், பாதுகாப்புக்கும் ஏங்கிநிற்கும் மக்கள், இழந்ததுக்கும், காணாமல்போனவர்களுக்கும் என குரல் கொடுப்பதா, அல்லது இருக்கின்ற உறவுகளுக்கும் அந்த நிலைமை ஏற்பாடாமல் பாதுகாப்பதா என அலைந்துலைகிறார்கள். சரி நாங்கள்தான்எமது சொந்த தேசத்திலேயே மனம் விட்டுஎழுதவோ, வாய்விட்டு அழவோ நாதி அற்றுஇருக்கின்றோம் என்றால், அதை எழுதுபவர்கள் கூட இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை என்று மனமாரத்தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல், ஆட்சிமாற்றம், இராணுவக்குறைப்பு என்று கண்துடைப்பு வேலைகளால் சிங்கள இனவாதத்தை மாற்றி விடலாம் என்று தங்களை சமாதானப்படுத்திக் கொண்டு எங்களை ஏமாற்றுகிறார்கள்.

1980ம் ஆண்டில் இருந்து ஆட்கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 1999 ம் ஆண்டுத்தரவின் படி உலகின் காணாமல் போனவர்கள் வரிசையில் இலங்கை 2வது இடத்தில் உள்ளது.அதன்படி 12,000 ம் பேர் அளவில் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு, பின் காணாமல் போகப்பட்டுள்ளனர்.

2012 பி.பி.சி யில் வந்த செய்தியில்[highlight color=”yellow”] [ http://www.bbc.co.uk/news/world-asia-17356575 ] [/highlight]காணமல் போனவர்களுக்காக குரல் கொடுத்தவர்களே,குரல் கொடுத்ததற்காக கடந்தப்பட்டு காணமல்போகப்பட்டார்கள். மற்றும் குரல் கொடுத்ததற்காக வருடங்கணக்கில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். இதனால் காணமல் போனவர்கள் பற்றிய விபங்களை சொல்லவும், அதுபற்றி பேசவும் பொதுமக்கள் பயப்படுகிறார்கள். இது மிகப்பெரிய மன அழுத்தத்திற்குரிய விடையமாகும்.

இது பற்றி International Truth & Justice Project Sri Lanka ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது இத்திட்டம் மனித உரிமைகளுக்காக தென்ஆபிரிக்காவில் இருக்கும் ஓர் அமைப்பிலால் செயல்படுத்தப்படுகிறது. இதன் தலைமை இயக்குனராக ஜஸ்மின் சூக்கா உள்ளார். இதில் 100 க்கு மேற்பட்ட வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களில் உயிர்தப்பியவர்களின் கதைகள்  உள்ளன. அதில் 8 பேர் கடந்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பின் மைத்திரியின் ஆட்சியின் போது கடத்தப்பட்டவர்கள் கண்களை கட்டிக் கொண்டு போகப்படுவதால் அவர்களை வைத்திருக்கும் சித்திரவதைக் முகாங்களை ப்பற்றி அவர்களுக்கு அதிகமாகச் தெரிந்திருக்கவில்லை. பாலியல் வன்முறைகளும், சித்திரவதைகளும் இனத்துவேசத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன.[highlight color=”yellow”] [ www.itjpsl.com/wp-content/uploads/2015/07/Stoptorture_report_TAMIL.pdf ][/highlight]

ராஜபக்ச அரசாங்கத்தில் பெருந்தெருக்கள் மற்றும் வெகஜன ஊடகத்துறைப்பிரதி அமைச்சராகக் கடமையாற்றிய மேர்வின் சில்வா கோத்தாபய ராஜபக்சவே வெள்ளைவான் கலாச்சாரத்திற்குப் பின்னனியில் உள்ளார் என்றார்.[highlight color=”yellow”][ http://lankanewsweb.net/interviews/item/1390-white-van-abduction-was-orchestrated-by-gotabaya-rajapaksa-mervin-silva ][/highlight]

இவ்வறிக்கை அவர்களின் “விசாரணையின் போது 40 சாட்சிகளில் 12 சாட்சிகள் மட்டுமே தாங்கள் சித்திரவதை செய்யப்பட்ட இடங்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்தனர்.அவற்றில் பல சந்தேகத்தின் பெயரின் பிடிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளின் `புனர்வாழ்வு’ மையங்கள் ஆகும்” என்கிறது. புனர்வாழ்வு என்று சிங்களம் சொல்லிய போதே தமிழ்மக்களுக்கு இவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரின் சித்திரவதைதான் செய்வார்கள் என்பது தெரிந்திருந்தது, ஆனால் அது இவர்களுக்கு புரிய 6 ஆண்டுகள் எடுத்தது.

அது போல இலங்கையில் தமிழருக்கு நடப்பது இனப்படுகொலை, அது எந்த அரசு வந்தாலும் குறைப்போவதில்லை என்று சொல்கின்றோம். அது இவர்களுக்கு புரிந்து அறிக்கைவடிவில் வர, இன்னும் எத்தனை ஆட்சிமாற்றமும், ஆண்டுகளும் கழிய வேண்டுமோ, எத்தனை சித்திரவதைக் கூடங்களின் எமது தங்கைகளின் அழுகுரல் கேட்கவேண்டுமோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இவ்வறிக்கையில் `இலங்கைத் தமிழ் சமூகத்தில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டவர்கள் தமது மனோநிலை காரணமாக இந்த விடயம் குறித்து வெளியே எதனையும் தெரிவிக்கமாட்டார்கள் எனக்குற்றமிழைத்தவர்களிற்குத்தெரிந்திருந்தது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இது எமது தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. வல்லுறவுக்கு உட்பட்ட வேதனையை விட, அதிகமான வேதனை, தன்னைச்சார்ந்த உறவுகளாலேயே தான் செய்யாத ஒரு தவறுக் காக ஒதுக்கிவைக்கப்படுவதும், அவளை மண முடிக்கஎமது இளைஞர்கள் முன்வராது இருந்தலும் ஆகும். ஒருசிலர் மட்டும் விதிவிலக்காக உள்ளனர்.

இவ்வறிக்கை திட்டமிட்ட இனவழிப்பு என்று வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இலங்கையின் புனர்வாழ்வுத்திட்டம் குறிந்த சுயாதீனவிசாரணையை மேற்கொள்ள வேண்டும், மேலும் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளார்கள் அனைவரும் குறிப்பிட்ட நாட்டின் புகலிட நடைமுறைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.

[highlight color=”red”]Image Courtsey – http://www.nytimes.com[/highlight]