குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்? வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

484

குழந்தையிடம் ஒரே ஒரு ஆஆ வாங்கிக்கோடா என் செல்லம் என்று செல்லமாக கொஞ்சி, அம்புலி மாமாவை பாரும்மா என் கண்ணுக்குட்டி என சோறு ஊட்டுவது நம் விளையாட்டா ?

நம் முன்னோர்களின் அறிவியலா ?…

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாடும் காரியம் அல்ல, அது அன்பை குழைக்கும் அறிவியல்.

குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.

குழந்தை பிறந்து தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான், உணவு குழலின் விட்டம் விரியத் தொடங்குகிறது. இது முழுமை அடைய ஐந்து வருடம் ஆகிறது.

நிலாவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல் நோக்கி பார்க்கும். அப்போது தொண்டை மற்றும் உணவுக் குழல் விரிவு அடைவதால் உணவு இலகுவாக இரைப்பையை நோக்கி இறங்குகிறது. மேலும், தொண்டைக் குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றன.

இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும், நிலாவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.

முதியோர் இல்லத்தில் நம்மை சேர்க்காமல் இருக்க நீங்கள் போடும் முதல் விதைதான் அம்புலி மாமா பாசக் கதை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

தவறாமல் பகிர்வோம்.

Balasubramani T