குழறுபடியே உன் மறுபெயர்தான் கூட்டமைப்போ

1508

சிறிலங்கா பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை ஒரு விடுதலைப்போராட்ட வீரன் எனக்குறிப்பிட்டார். அடுத்தடுத்த தினங்களில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப்பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சிறிதரனின் கருத்தை மறுதலித்தனர். சிறிதரன் அவர்களது கருத்து தமது கட்சியின் கருத்து அல்ல என சம்பந்தனும், அவர் தீவிரவாதக் கருத்துடையவர் என சுமந்திரனும் கூறியிருந்தனர்.

ஆளுக்காள் முரண்பட்ட கருத்துகளைத் தெரவிப்பது கூட்டமைப்பின் வாடிக்கையாகி விட்டது. மாவை ஒன்றைச் சொல்லுவார் விக்கி இன்னொன்றைச் சொல்லுவார. சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கிப்பிடித்து காளியின் கொடி அது என்று மற்றவர்களுக்கு காதில் பூச்சுத்துவார், மாவை அதற்காக மன்னிப்புக் கேட்பார். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்ச் சங்க மாநாட்டிலும் இந்த முரண்பாடு வெளிப்பட்டது.
இம் மாநாட்டில் தாயகத்திலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனந்தி சசிதரன், சுமந்திரன், மாவைசேனாதிராசா, யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரன் ஆகியோர்கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டின் ஒரு அங்கமாக அமெரிக்க தமிழர் நடிவடிக்கை குழுவின் வருடாந்த மாநாடும் இடம் பெற்றது. இம்மாநாட்டில் முதன்மைப் பேச்சாளராக கÚஐந்திரகுமாரும், சிறப்பு பேச்சாளராக குருபரனும் உரையாற்றினர். கÚஐந்திரகுமார் தனது உரையில் ” இனப்பிரச்சனை என்பது தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்படும் பிரச்சனை. தேசத்தை பாதுகாத்து அதற்கு அங்கிகாரம் பெறுவதே தீர்வாக அமையவேண்டும் ஒரு சிலர் தமிழ் மக்களுக்கு அதிகாரம் இல்லாததுதான் பிரச்சனை என கூற பார்க்கின்றனர். இதனால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கூறுகின்றனர். இது தவறானது நாம் தெளிவாக பிரச்சனைகளை அடையாளம் காணவேண்டும். பிழையாக அடையாளம் கண்டால், பிழையான தீர்வையே நாம் சிபார்சு செய்வோம். எமது கட்சி இரு தேசங்கள் ஒரு நாடு என்பதையே தீர்வாகமுன்வைத்துள்ளது. இத் தீர்வை விமர்சிப்பவர்கள் எங்களுடைய தீர்வை எப்படி அடைவீர்கள் என கேட்கின்றனர். அதற்கு என்னுடைய பதில்பூகோள அரசியலை பயன்படுத்துவோம் என்பதே. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் பிராந்திய சக்தியான இந்தியாவும் தமது இலக்கினை அடையமுடியாது என்ற நிலையினை நாம் உருவாக்கவேண்டும். இந்த பூகோள அரசியலை சரியாக பயன்படுத்துவதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் எமக்குள்ள மிகப்பெரிய சொத்து தமிழ் நாடு. அதே போல மேற்குலகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர் மக்கள் தமிழ்த்தேசத்தின் நீட்சி. அதன் ஒரு அங்கம் அவர்கள் தமிழர் தேசத்தின் ஆதரவாளர்கள் அல்ல மாறாக பங்காளிகள். தமிழர்விவகாரம் தொடர்பான சர்வதேச அரசியலாக வளர்வதில் மிகப்பெரும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இப் பணியின் முக்கியத்துவத்தை உணர்து அதனை ஆற்றுவதற்கு அவர்கள் முன் வரவேண்டும். இன்று ஒரு ஆபத்து உள்ளது. தமிழர் அரசியலை கையாள்வதில் முக்கியத்துவத்தை உணராமல் சர்வதேச சமூகத்தின் தேவைக்கே ஏற்ப செயற்படும் போக்கே அவ் ஆபத்தாகும் சர்வதேச சமூகம் விரும்புவதை தான் செய்ய வேண்டுமென்றால்நாம் நமது தேசநலன்களை அடைய முடியாது.எங்களுடைய அரசியலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு சர்வதேச அரசியலில் தமிழர் அரசியலின் முக்கியத்துவத்தைவிளங்கிக் கொண்டு அதனுடன் – லொபி பண்ணதயாராகவேண்டும்” எனக்குறிப்பிட்டார்.

சிறப்புப்பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த குருபரன் உரையாற்றும் போது “தமிழ் மக்கள் மத்தியில் ஐனநாயகம் வளர்வதற்கு இன்று மாற்று தலைமை தேவை இது தோன்றும் போதுதான் தேசம் ஐனநாயக விழுமியங்களுக்கு ஏற்பவளரும். அரசியலில் ஈடுபடும் தரப்புக்களும் பொறுப்புடன் செயற்படும். தலைமைகள் மக்களுக்கு பொறுப்பு சொல்லும் கலாச்சாரம்உருவாகும். ஆனால் துரதிஸ்டவசமாக தாயகத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், தமிழ்ஊடகங்களும் திட்டமிட்டு இவ் வெற்றிடத்தை நீட்டி செல்வதற்கு முயற்சிக்கின்றன. புலம் பெயர் மக்கள் இவ் மாற்றத்தினை கொண்டு வரக்கூடிய வகையில் முன் உதாரணமாக செய்பட முன்வரவேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.

கேள்வி பதில் நேரம் மாவைக்கும் சுமந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டது. அதற்கு அவர்கள்இணங்காதததினால் பின்னர் அந்த அமர்வு இரத்து செய்யப்பட்டது. கஜேந்திரகுமார், குருபரன் ஆகியோருக்கு இம்மாநாட்டில் வழங்கிய முக்கியத்துவம் கூட்டமைப்பினரானமாவைக்கும் சுமந்திரனுக்கும் கலவரப்படுத்தியதால், கÚஐந்திரகுமாரினதும், குருபரரினதும் பேச்சைகேட்பதற்காக எம்மை இங்கு வைத்திருக்கிறீர்கள் என இருவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டனர்.

அன்றிரவு அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஒன்று கூடல் இடம் பெற்றது. சுமந்திரன் மாவைகÚஐந்திரகுமார் ஆகியோர் உரையாற்றினர்.காலையில் உரையாற்றிய கÚஐந்திரகுமாரை இரவும் உரையாற்ற சந்தர்ப்பம் கொடுத்தமைக்காக சுமந்திரன் மீண்டும் நிகழச்சி ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டார். தான் உரையாற்றாமல் வெளியேறப்போவதாகவும் தெரிவித்தார். நீங்கள் விரும்பினால் போகலாம் ஆனால் யோசித்து முடிவெடுங்கள் உங்களைப் பற்றி தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் வளர பார்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டளார்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சுமந்திரன் நிகழச்சியில் பங்குபற்றினார்.

சுமந்திரன் உரையாற்றும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை கொடுத்துள்ளனர் இந்த ஆணையை எவரும் திரிபுபடுத்தக்கூடாது. புலம் பெயர் மக்கள் வடமாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளை அரசுக்கெதிரான வாக்குகள் என கூறப்பாரக்கின்றார்கள், இது தவறானதாகும். கூட்டமைப்பின் கொள்கைகளுக்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். கொள்கையைவிளங்கித்தான் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். நாம் தனி நாட்டு கோரிக்கைக்கு எதிரானவர்கள். பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் அரசியல்தீர்வினை முன்வைத்தோம். மக்கள் அதனைவிளங்கித்தான் எமக்கு வாக்களித்திருக்கின்றனர். எனது கருத்துகளுக்கு நீங்கள் எவரும்கைதட்டமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.ஆனால் ஒரு போதும் எமது அரசியல் நிலைப்பாட்டினை நாம் கைவிடப் போவதில்லை என்றார்.

சுமந்திரன் தனது உரையை முடித்தவுடன் வெளியேறிவிட்டார் அதனைத் தொடர்ந்து மாவை உரையாற்றினார்.

மாவையின் உரை சுமந்திரனின் உரைக்கு மாறாக இருந்தது. மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலேயே வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகள் என்றும் குறிப்பிட்டார். அவரது உரை முடிந்த பின் பார்வையாளர்களில் சிலர்சுமந்திரனின் உரைக்கும் உங்களின் உரைக்கும் முரண்பாடு உள்ளதே என மாவையை கேட்டனர். சுமந்திரன் எனது உரைக்கு மாறாக பேசினாரா ? என அவர்களையே மாவை திருப்பிக்கேட்டார். இறுதியாக அனந்தி சசிதரன்உரையாற்றினார் நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கியவர் அவரை அறிமுகப் படுத்திய போதுமக்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.அனந்தி தனதுரையில் மக்கள் இலட்சியத்திற்காகவே வாக்களித்தனர் எனக் குறிப்பிட்டார்.

கஜேந்திரகுமார், குருபரன், அனந்தி ஆகியோரின் உரைகளுக்கு பார்வையாளர் மத்தியில் கிடைத்த வரவேற்பு சுமந்திரன், மாவை ஆகியோர் உரையாற்றும்போது இருக்கவில்லை.

எழுபரிதி