கேள்விகுறிகளை நிமிர்த்தி ஆச்சரியகுறிகளாக்கிய தலைவர் பிரபாகரன்

205

இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறியபோது இந்தியப்படைகளின் தளபதி எஸ்.சி. சர்தேஷ் பாண்டே அவர்களிடம் தலைவர் பிரபாகரன் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதில் ;

பிரபாகரன் காலந்தவறி ஈழத்தில் பிறந்துவிட்டார்.

உரிய நேரத்தில் அவர் அவதரித்திருந்தால் உலகவரலாற்றில் நெப்போலியனிற்கும், அலெக்ஸ்சாண்டரிற்கும் இடம் கிடைத்திருக்காது.

நந்திக்கடலிற்கான பாதை என்னும் புத்தகத்தை எழுதிய கமல் குணரத்ன ஒரு நேர்காணலில் பின்வருமாறு கூறியிருந்தார்;

எம்மால் கைப்பற்றப்பட்ட 10000 இற்கும் மேற்பட்ட புகைப்படங்களுமே புலிகளின், அதன் தலைவரின் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையுமே பறைசாற்றின.

சிறந்த உயர்ந்த பண்புகளை கொண்ட ஒரு மேன்மையான மனிதனாகவே பிரபாகரனை காணமுடிந்தது.

தேசியத்தலைவர் அவர்களுடன் போரிட்ட இந்திய, சிங்கள இராணுவத்தளபதிகளின் கருத்து இவ்வாறு அமைந்திருக்கின்றது.

ஆனால்,

ஐந்து வயதில் கொழும்பு சென்று சிங்கள நண்பர்களுடன் வாழ்ந்துவிட்டு,தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று , மெதுமெதுவாக தமிழர்களின் அரசியல் தலைமையினை கைப்பற்ற முயலும் சுமந்திரன் போன்றவர்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.

இன்னும் பல யுகங்களிற்கு புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் தாண்டிய அரசியல் சாத்தியமில்லை என்பதே அது.

பல இலட்சம் எம் உறவுகளினதும், ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களினதும் குருதி சிந்திய மண்ணில் இருந்துகொண்டு, அவர்களின் பெயரை பயன்படுத்தி பெற்ற பதவியினை வைத்துக்கொண்டு அவர்களையே விமர்சிக்கும் நன்றி மறந்த அரசியலை விட்டுவிடுங்கள்.

எமது வரலாறு ஒப்பற்ற வீரத்தாலும், கற்பனைக்கப்பாற்பட்ட தியாகத்தையும் எழுதப்பட்டது.

அந்த வரலாற்றை மாற்றவோ, அல்லது அந்த வரலாற்றை எழுதியவர்களை விமர்சிக்கவோ யாருக்கும் தகுதியில்லை.

இது எல்லா அரசியல்வாதிகளிற்கும்,எல்லா அரசியற்கட்சிகளிற்கும் பொருந்தும்..

அன்பரசன் நடராஜா