#சாதிக்கும் வரை கண்ணுக்குத் தெரியாது சாதித்த பின் அரசியலுக்காக அல்லது வாக்குக்காக கண்ணுக்குத் தெரியும் சாதனையாளர்கள்…..
#இந்த விடயத்தில் கைதேர்ந்த ஒரு அரசியல் வாதி என்றால் சிவஞானம் சிறிதரன் மட்டும்தான் அதற்கு அதிக சொந்தக்காரர். வெற்றிகொள்ள எந்த அரசியல் வாதிகளாலும் முடியாது இவரை…
#முகநூலில் வெறுமனே சாதனையாளர்கள் அவர்களின் புகைப்படங்கள் மட்டும் பதியப்படுவதில்லை.இன்னும் எத்தனையோ மக்களின் அவலங்கள் இளைஞர்களின் அவலங்கள் சிறுவர் சிறுமியர் அவலங்கள் இப்படி எத்தனையோ பதிவுகள் பதியப்படும். இவரின் கண்ணுக்கு என்னவோ சாதனையாளர்கள் மட்டும்தான் தெரிகிறார்கள் அதுவும் சாதித்த பின்….
#புகைப்படம் எடுத்து விளம்பரப்படுத்தி வாக்குகளை சேகரிக்க தெரிந்த உங்களுக்கு.
அவர்களின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றித் தெரியாது தெரிந்துகொள்ள முற்படுவதும் இல்லை நீங்கள்.எந்தெந்த விதங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அத்தனை விளம்பரங்களை உங்களால் மட்டும்தான் செய்ய முடிகிறது…
#ஒரு மனிதன் இறப்பதற்கு முன் உதவி செய்ய முடியாது ஆனால் இறப்பு வீட்டில் நீங்கள் முதன்மையானவர்.இப்படித்தான் இருக்கிறது உங்களின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல்ரீதியாக…
#தம்பி சிறிதரன் இதே கிளிநொச்சியில் சாதித்த இந்த இளைஞனைப் போல் இன்னும் தெருவோரமாக எத்தனையோ இளைஞர்கள் கச்சான் விற்பனையில் இருந்து வாழைப்பழம் பனங்கிழங்கு இப்படி தொடர்கிறது ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கை வட்டம் அவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள் தான் அது போன்ற புகைப்படங்களை முகநூலில் பகிரப்படுகிறது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா….
#இந்த இளைஞனின் சாதனைக்கு அவரின் தாயார் மட்டும்தான் சொந்தம் கொண்டாட முடியும் முற்று முழுதாக.நீங்கள் வாழ்த்துவதாக வாக்கை சேகரிக்க முற்படாதீர்கள்…
#உங்களையும் நம்பி ஒரு இளைஞர் கூட்டம் உங்கள் பின்னால்.அவர்களா நாளைய எமது அரசியல் தலைமைகள் என்று எண்ணும்பொழுது இப்பொழுதே எமது மக்களின் அவலங்கள் கண்ணுக்குத் தெரிகிறது அதிகமாக…
#மக்களுக்கான அரசியல்வாதிகள் உருவாகாத வரை இவர் போன்ற அரசியல் தலைமைகளின் கீழ் மக்கள் வாழ்ந்து தான் காலத்தை மட்டுமல்ல தங்களையும் அழித்துக் கொள்ள வேண்டும்.
#சிலர் கூறுவார்கள் பிணம் தின்னி கழுகுகள் என்று.அதன் அர்த்தம் என்னவென்று அறிந்து கொள்ள விரும்புகிறேன் உங்களின் மூலம்….புரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள் எனக்கு…
#எனது கருத்து சரி என்று பட்டால் பகிர்ந்துகொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்..
அன்புடன்
அரசியல் சாணக்கியன்…
#கிளிநொச்சியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு வாகனத்தை கண்டுபிடித்த இளைஞனை நான் வாழ்த்துகிறேன் அவரின் செயற்பாடு மேலும் சிறப்படைய எமது இனம் சார்ந்து.அரசியல்வாதியாக அல்ல நான் அரசியல்வாதியும் அல்ல…..