கொலைக்களங்களிலிருந்து… அறக்களத்திற்கு…

1622

ஈழவரலாற்றில் கி.மு. 543 ஆம் ஆண்டில் விஐயன் குழுவினர் கரையொதுங்கியது முதல்,அங்கு ஒரு புதுவித மனித சமூகம் உருவாகிற்று. அதுவரை காலமும் அறவழியில் வாழ்ந்துஅமைதி காத்திருந்த மக்கள் வாழ்வு, ஆக்கிரமிப்பு, போர் எனும் புதிய அலைகளால் அமைதியை இழக்கலாயிற்று.

மக்கள் வாழ்வில் அழுகுரல்களும், சுடலைகளும் அதிகரித்திருந்தன. இவையெல்லாவற்றையும் ஓரளவு கால வரிசைப்படுத்திப் பதிவு செய்துள்ள சிங்கள வரலாற்று நூலே மகாவம்சமாகும். இந்த மகாவம்சம் இன்னும் தொடர்ந்து எழுதப்படும் நிலையில் வன்னியில் (வான் தாக்குதல்கள்,கொத்துக் குண்டுகள் என புதிய யுக்திகளினால்)அப்பாவி மக்களை வைகாசி 2009இல் கொன்றுகுவித்த வெற்றி விழாக்களும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுவாக ஒரு மன்னனின் வெற்றி விழாப்பதிவேடுகளில் உண்மையுடன் பொய் புழுகுகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதததாகும்.

அவற்றுள் பொய் எது உண்மை எது என ஆராய்வதும் வரலாற்றாய்வாளரின் மதி நுட்பத்திலேதான் தங்கியுள்ளது. இதில் ஆர்வமற்ற ஒரு சில தமிழ் வரலாற்றாய்வாளர்கள் மகாவம்சம் ஒரு கட்டுக்கதை, சிங்களவர்கள் ஈழத்தில் இடைக்கற்காலம் முதலாகவே (கி.மு. 30,000) வாழ்ந்துவரும் குடியினர் என்பதற்கு மரபணுக்களை துணைக்கொண்டு சில வரலாறுகளை புனைந்து வருகிறார்கள். திகைப்பூட்டும் டிஸ்னிக் கதைகள் போல் இவை அமைந்திருந்தாலும், விஞ்ஞானம் எனும் முலாமிட்டு மக்களை நம்ப வைக்கின்றார்கள்.  மகாவம்சம் ஏறக்குறைய 2500 வருடங்களுக்கு முன் ஈழத்தில் வாழ்ந்திருந்த பூர்வீகக்குடிகள், பின் வந்த குடியேற்றவாசியான சிங்களமக்கள் பற்றி என்ன கூறுகின்றது என்பதைப் புரட்டிப் பார்ப்போமானால், சில உண்மைகளை வெளிக்கொணர்ந்து உங்களையும் ஆராயவைக்கும் என நம்பலாம். மகாவம்சம் விஐயனும், குழுவினரும் ஈழத்தின்கரைகளை அடைந்தபொμது அங்கு வாழ்ந்திருந்த தமிழர், நாகர், இயக்கர் குடிகளை அமானுசர் எனக் குறிப்பிட்டிருந்தது.

இவர்கள் அனைவரும் ஆதி திராவிடராவர்கள். அதாவது வேற்றினக் கலப்பற்ற பூர்வீகக் குடிகள் இவர்கள் தோற்ற அளவில் கவர்ச்சிக் குறைந்தவராயினும், கலாசாரப் பற்றும் சமூக நலன் கருதிய மக்களாகவும் வாழ்ந் திருந்தனர். ஆனால் நாடு கடத்தப்பட்ட விஐயன் குμவினர் வங்கம், கலிங்கம் எனும் நாட்டினராயினும் சில இனக்கலப்புகளுடன் புதிய உருப்பெற்ற திராவிடராக அன்று வளர்ந்திருந்தனர். அதனாலேயே அமானுசர் எனும் இச்சொற்பிரயோகம் ஏற்பட்டதாகலாகும். இனி, விஐயன் ஈழத்தில் இயக்கர் இனப் பெண்ணான குவேனியைத் திருமணம் செய்து, அவளுதவியுடன் காலசேனனின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தான். அதனால் ஈழத்தின் ஆட்சி அதிகாரங்கள் சில இவன் கைக்கெட்டவே, தன்னைப்பட்டம் கட்டி அரசனாக உயர்த்திக் கொள்ள ஆசைப்பட்டான். அப்பொழுது இளவரசியொருத்தியும் அவசியமாக இருந்தது.

இந்நிலையில் குவேனியை அகற்றிவிட்டு, பாண்டிய நாட்டிலிருந்து பாண்டிய இளவரசியையும், அவளது பரிவாரங்களையும் பெற்று அரசனாகி தமிழர் சமூக அங்கீகாரத்துடன் ஆண்டிருந்தான். விஐயன் ஈழத்தின் ஆட்சியாளனாகிவிட்டான் என்ற செய்தி, அவனை நாடு கடத்திய வங்கத்திற்கும் ஒரு புதிய கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத் திருந்தது. அதனால் விஐயன் இனத்துÖய்மையைக் கருத்திற் கொண்டான். இவன் செய்து கொண்ட இயக்கர் தமிழர் திருமணங்கள் ஆட்சியைக் கைப்பற்றி அரசனாக முடி சூடிக் கொள்ளவே என்பதனால், தனக்குப் பின் வாரிசினை வங்கத்திலிருந்து தருவித்தான். அப்பொμது வங்கத்திலிருந்து வந்த அவன் தம்பி மகன் பாண்டு வாசுதேவனும், பின் இவனைத் திரு மணம் செய்ய வந்த புத்தகாசனாகவும் புத்தபிக்கு, பிக்குனி வேடத்தில் திருகோணமலை துறைமுகத்தில் வந்திறங்கினார்கள். இதுஈழத்து மக்களுக்குத் தெரியாமல் செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். பின் புத்தமத வருகையுடன் தொடர்ந்தும் வங்கத்திலிருந்து மட்டுமல்லாமல் ஆரியக்குடிகள் பரவியிருந்த கங்கைப் பகுதிகளிலிருந்தும் பல குடியேற்றங்கள் இடம் பெறலாயின. கங்கைக் குடியேற்றங்கள் கொண்டு வந்த மரபணுக்களே இன்று சிங்கள மக்களிடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ள எம்17 ஆகும். சிங்கள வரிடையே காணப்படும் எம்17 மரபணுவின் பூர்வீக வரலாறு இது வென்பதில் ஐயமில்லை.

இனி, இவ்வாறான குடியேற்றங்களைத்தொடர்ந்து ஈழத்தில் நாகர், இயக்கர், தமிழர் இன அழிப்புக் களங்கள் தொடர்ந்து இன்று வரை நடைபெறும் வரலாற்றினையும் சுருக்கமாகப் பார்ப்போம். தேவநம்பியதீசன் ஆட்சிக்காலத்தில் (கி.மு 247-207) இவனது தம்பியாகிய மகாநாகன் தனக்கோர் அரசாட்சியை மாகமையில் (உருகுணையில்) உருவாக்கியிருந்தான். இவன் தன் ஆட்சியை உறுதிசெய்து கொள்ள கதிர்காமம், சந்தனகாமம் (அம்பாறைப்பிரிவு) ஆகிய பகுதிகளில் ஆண்டிருந்த பாண்டிய சிற்றரசுகளின் உதவியினைப் பெற்றிருந்தான். ஆனால் அவன் பேரனான கோதாபயன் கதிர்காமத்துப் பத்துப்பாண்டிய அரசுகளைக் கொன்று, தனது ஆட்சிஞஉலப்பரப்பினை விரிவாக்கம் செய்திருந்தான்.பின் இக்கொலைகளுக்குப் பாபம் தீர்க்கும் வகையில் ஐம்பது புத்த விகாரைகளைக் கட்டினான் என தாதுவம்சம் (33-34) குறிப்பிடும். இதனை மீன் இலட்சினை பொறித்த போவத்கல கல்வெட்டு குறிப்பிடுவதன் மூலம் வரலாற்றுச் செய்திகள் உறுதியாகியுள்ளன. இந்தக் கொலைக்களமானது விஐயன் அடிஎடுத்துக் கொடுத்த இரண்டாவது கொலைக்களமாகும். இன்னொரு வகையில் கூறுவோமேயானால் தமிழ் இன அழிப்பின் அரசியல் வடிவமாகும்.

இனி, கதிர்காமத்துப் பாண்டிய அரசுகளைக் கொலை செய்த அதே கோதாபயன் வழிவந்த துட்டகைமுனு (கி.மு. 101-77) உருகுணையாட்சிப் பிரிவுடன் திருப்தியடையவில்லை. ஈழத்தினை முழுமையாக ஆண்டால், தானோர் பேரரசனாகலாம் என்று கருதி ரீதியாக ஆண்டிருந்த எல்லாளனை எதிர்த்துப் படை எடுத்தான்.

அப்பொழுது மகாவலி கங்கைக் கரைப்பகுதிகளில் ஆண்டிருந்த முப்பத்திரண்டு தமிழ்ச்சிற்றரசுகளை வென்று முன்னேறினான். இந்த மூன்றாம் கட்ட சிங்கள ஆட்சி விரிவாக்கத்தில் இப்பகுதிகள் அனைத்தும் சிங்களமயமாகின. இத்தகைய சிங்களமயமாக்கப்படும் திட்டங்களினர், தமிழருக்கு ஏற்பட்ட புதுமுக மூடிகளை அடையாளப்படுத்தும் புதிய திராவிட மரபணுக்களின் (எம்.20) சோகம் இவையேயாம். இவ்வாறு இடையில் இடம்பெற்ற கொலைகள் பற்றி நாம் காணத்துயரக்கதைகள் அதிகம். ஆனால் ஈழத்தில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினப் படுகொலைகள் ஐ.நா.சபையென்ற மனித நாகரிகத்தின் முகத்திரைகளைக் கிழித்திருந்தது. ஐ.நா.சபை ஒரு வீண்பொழுது போக்குச்சபையென்று அடையாளப்படுத்த இத்தகைய இனப்படுகொலைகளே சான்றுகளாகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழர்கள் அனுபவித்த கொடூரத் துயரத்திற்கு 2009 வைகாசியில் இடம்பெற்ற வன்னிக் கொலைக்களம் அதிக சான்றுகளைக் கொண்டதாகும். இதனைச் செய்தவர்கள் உருகுணையில் கோதாபயன் துட்டகைமுனு வழிவந்தோர் எனத் தம்மை அடையாளப்படுத்தும் ராஐபக்ஷ குடும்பத்தவரே ஆவார்.

ஆனாலும் சிங்கள இனத்தின் மத்தியில் சுடராக விளங்கக்கூடிய பேரொளியாக ஒருவர் இருக்கிறார். பௌத்தத் துறவிகள் மற்றும் இன வாதத்தால் இருண்டுபோன மக்கள் என எல்லோருமே ஓரணியில் திரண்டு ஞஉற்கையில் ஒருதனி மனிதன் தன் வரலாற்றினை அறிந்துகொண்டு தமிழ் இனப்படுகொலை க்கெதிராகக்குரல் கொடுத்து வருகின்றார். அந்த மாமனிதர்தான் கலாநிதி. விக்ரமபாகு கருணரட்ண. கொலைக்களத்தின் மையத்தில் வாழ்ந்து வரும் அவரிடம் ஆட்சியதிகாரம், ஆயுதங்கள், படைகள், ஆதரவாளர்கள் என எதுவுமே அற்ற ஒரு நீதிமான் இவரது அறக்களத்தின் ஆயுதங்கள் உண்மை, அன்பு, அறம், மனித நேயம் என்பனவே. உலக நாடுகளிடம் கொள்வனவு செய்யமுடியாத ஆயுதங்களே இவை.

தனம்.