யாழ்ப்பாணத்தில் மற்றொருவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பலாலிப் பகுதியில் குறித்த அரியாலை போதகருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததன் காரணமாக ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 20 நபர்களில் மேலும் 10 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில் ஒருவருக்கு கொரோனா COVID – 19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இன்னும் சில மணித்தியாலங்களில் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்