கோர்த்துவிடும் செய்திகள்

773

முற்போக்குப் முகமூடியுடன் ஒரு புறம்போக்கு
காவற்துறைக்கும் உளவுத்துறைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஸ்கொட்லண்ட் யார்ட்டிற்கும் ஸ்கொட்டிஷ் காவற்துறைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு புறம்போக்கு ஒன்று துள்ளிக் கொண்டிருக்கின்றது என்று ஆத்திரப்படுகிறான் என் நண்பர் ஒருவர். சும்மா ஒரு கணனியை வைத்துக் கொண்டு டொக்கு டொக்கு என்று அடித்துவிட்டால் எல்லாம் உண்மையாகிவிடாது. ஆதாரங்கள் வேண்டும். கிளாஸ்க்கோவில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய உளவுத் துறையை அழைத்து வந்தார்கள் என்று புசத்துகிறாதாம் அந்த புறம்போக்கு. உண்மையில் கிளாஸ்க்கோவில் நடந்த கூட்டத்தில் ஸ்கொட்டிஷ் காவற்துறையினர் கலந்து கொண்டனர். இதே மாதிரி இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இராணுவ உளவாளிகளை வேலைக்கு அமர்த்தியது என்றும் ஒரு பொய்யை இந்தப் புறம்போக்கு அவிழ்த்து விட்டதாம். உளவுத்துறையில் வேலை செய்பவர்கள் எல்லாரும் உளவாளிகள் என்பதல்ல. துறைசார் நிபுணத்துவ ஆராய்ச்சியாளர்களும் உளவுத்துறையில் வேலை செய்வது உண்டு. சும்மா “ஊடக வியாபாரிகள். புலிப் பாஸிஸ்ட்டுகள், பல்தேசியக் கம்பனிகள், சுரண்டல்வாதிகள்” போன்ற பததங்களை பாவிப்பதால் மட்டும் ஒருவர் முற்போக்காளராக முடியாது. பாவம் தான் கூட்டும் ஆர்ப்பாட்டங்களுக்கு 32 பேர் மட்டும் வருகிறார்கள் என்ற வயித்தெரிச்சலோ.

மஹிந்தருக்கு வேட்டி கழட்ட வேண்டும் என்ற பயமாம்
மஹிந்த பொதுநலவாய மாநாட்டிற்கு வராமல் விட்டது பற்றி தனது முகநூலில் எழுதிய ஒருவர் “போன தடவை வந்த போது கொடியை கழற்ற வேண்டி இருந்தது. இந்த முறை வேட்டியுடன் கோவணத்தையும் கழற்றா வேண்டி வரலாம் என்று வராமல் விட்டிட்டார்.” என எழுதி இருந்தார்.

புலிக்கொடிக்கதை பொய்க்கதையானது
பிரித்தானியத் தமிழர் பேயவையைச் சேர்ந்தவர்கள் புலிக்கொடி ஏற்ற பிரித்தானியக் காவற்துறை அனுமதிக்காது என்றனர். ஆனால் கிளாஸ்கோவில் புலிக்கொடி ஏற்றிய போது காவற்துறையினர் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். முடிவில் முறைப்படி கொடியேற்றி கட்டுக்கோப்புடன் ஆர்ப்பாட்டம் நடாத்தி, இறுதியில் முறைப்படி கொடி இறக்கியதைப் பாராட்டினார்கள். கடவுள் விட்டாலும் பூசாரி விடமாட்டார் கதைதான். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

சிஐஏயும் றோவும்
அமெரிக்காக்காரன் தான் ஈரானில் செய்தவற்றை நியாயப்படுத்த ஆகஸ் என்னும் பெயரில் ஒரு படம் எடுத்தாலும் எடுத்தான். அதன் பின்பு தமிழ்த்தேசியப் போராட்டட்தைக் கொச்சைப் படுத்த இதியாவில் படங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறாங்களப்பா என்று அங்கலாய்க்கிறார் ஒரு தமிழ்நாட்டு இன உணர்வாளர். பலகாலப் பரப்புரையால் சாதிக்க முடியாததை பாலச்சந்திரனின் படங்கள் செய்துவிட்டன. ஈழவிடுதலைப் போராட்டத்தில் நடந்த அட்டூழியங்களிற்கு அப்படங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது. அதை முறியடிக்க பல பொய்களை உள்ளடக்கி இன்னும் ஒரு தமிழ்ப்படம் வந்துவிட்டது.

தானும் ஒரு தர்ப்பையுடன்…..
எங்க ஊரில் ஒருவர் இருக்கிறார் யாராவது கோவிலில் திருவிழாச் செய்தால் அதைத் தான் செய்வது போல போக்குக் காட்டுவார். இதற்காக தானே தன் கையில் ஒரு தர்ப்பையையும் போட்டுக்கொள்வார். இந்த மாதிரிப் பிரித்தானியாவிலும் நடக்குது பாருங்கோ. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மிகச்சிரமப் பட்டு பேருந்து, உணவுகள். பானங்கள், காவற்துறையுடன் பேச்சு வார்த்தை எல்லாம் செய்து ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்தால் கொஞ்ச்ப் பேர் அங்கு கோட் சூட்டுடன் வந்து தாங்கள்தான் அங்கு முதலாளி மாதிரி சீன் போடுவினம் ஷோ காட்டுவினம். போதாக் குறைக்கு தாம் கொடுத்த அழுத்தத்தால்தான் மஹிந்த பிரித்தானியாவிற்கு வரவில்லை எண்டு கதையும் அளப்பினம்.

-ஊருளவாளி-