சமர்க்கள நாயகனே!

99

புறநானுறை புத்தகத்தில் காட்டிடாமல்!
நிஜத்தில் காட்டிய எங்கள் ஆசானே!

புதுமைப் பெண்ணையும் நாம் பாரதியின்
புத்தகத்தில் படித்துச் சுவைத்து சலித்திடவே..

தலைவனுடன் இணைந்து இத்தாவில் பெட்டிச்சமரில் காட்டிய வித்தகனே!

சமர் பல வென்ற வெள்ளையத் தேவனே!
சமர்க்களநாயகனே!

எதிரியின் கோட்டைக்குள் தங்ககம் அமைத்து வாசம் செய்த தீரனே!

மக்கள் மனதிலும் தங்ககம் அமைத்து நிரந்தரமாகக் குடியிருக்கும் இனியவனே!

எதிரியும் புகழும் வல்லோனே!
எங்கள் காலத்துச் செம்பியனே!

நின் காலத்தில்
யாமும் வாழ்ந்தது பெருந்தவப் பயனே!

குறிப்பு–செம்பியன் என்பது சோழரின் இன்னுமோர் பெயர் ஆகும்.

செம்பியரின் / சோழரின் ஈழப் படையெடுப்பின் போது அவர்கள் முதன் முதல் தரையிறங்கி படைகளை இணைத்து படை நடாத்திச் சென்ற வடமராட்சி கிழக்கில் உள்ள ஓர் ஊரை #செம்பியன்பற்று என அழைக்கப்படுகிறது.

– எழுதியது – வயவையூர் அறத்தலைவன்