லண்டனைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பன்னாட்டு தமிழ் ஊடகவியலாளர்கள் வலையமைப்பான சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தமது 2014ம்ஆண்டிற்கான மாநாட்டினை `இலங்கைத் தீவின் போருக்கு பிந்திய காலத்தில் ஊடகங்களின் நிலை’ என்றதலைப்பில் நடாத்தவிருக் கின்றது. ஒக்ரோபர் பதினோராம்திகதி காலை ஓன்பது முப்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை முழுநாள் நிகழ்வாக வெஸ்ற் லண்டன் பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் (West London University, Main auditorium, St Mary’s Road, Ealing, London, W5 5RF) நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் இலங்கை, இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா என பல நாடுகளிலிருந்து ஊடகத்துறையினரும், கல்வியாளர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
`பயங்கரவாதத்திற்கு ஏதிரான போர்’ எனக்குறிப்பிடப்படும் ஒரு யுகத்தில், இலங்கைத்தீவின் போருக்கு பின்னரான காலத்தில், ஜனநாயகத்தை ஏற்படுத்துதல் தொடர்பான கருத்துப் பரிமாறாலாக இம் மாநாடு அமையவிருக்கிறது. இவ்விடயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது, சர்வதேச மனிதவுரிமை நியமங்களை இலங்கைத்தீவில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
பேச்சாளர்கள்
அருள்மொழி: தமிழ்நாட்டின் பிரபல சட்டத்தரணி, தமிழ்ப்பேச்சாளர், திராவிடர் கழகச் செயற்பாட்டாளர்
நிர்மானுசன் பாலசுந்தரம்: சுயாதீன ஊடகவியலாளர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்
இராசநாயகம் பாரதி : தினக்குரல் ஞாயிறு வெளியீட்டின் ஆசிரியர் மற்றும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர்.
யூட் லால் பெர்னான்டோ: ஊடகவியலார். அயர்லாந்து ரிறினிற்றிக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினால் இலங்கை இனப்படுகொலையினை விசாரிக்க வைப்பதில் முன்னின்று பணியாற்றியவர்.
வினோதினி கணபதிப்பிள்ளை: தமிழ் கார்டியன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். தற்போது லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறையில் ஆய்வு மாணவராகவுள்ளார்.
குருபரன் குமாரவடிவேல்: யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரியாளர். யாழ் சிவில் சமூக அமையத்தில் முன்னணிச் செயற்பாட்டாளர். தற்போது லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆய்வு மாணவராக உள்ளார்.
ருனே ஒட்டசன்: நோர்வே பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை பேராசிரியர். துறைசார் வல்லுனர்
பாக்கியசோதி சரவணமுத்து: இலங்கை மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் பணிப்பாளரும், இலங்கைத் தீவு விடயத்தில் சர்வதேசத்தரப்புகளால் நம்பிக்கையுடன் அணுகப்படுபவர்.
இப்ராஹ்ம் ஷோ : நொதம்ரியா பல்கலைக்கழக விரிவுரையாளர். சர்வதேச சமாதனத்திற்கான ஆய்வு அமைப்பின் செயலாளர் நாயகம். ஊடகவியலாளர்.
ஜே. எஸ். திசைநாயகம்: அவர் எழுதிய அரசியல் கட்டுரைக்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் சிறைப்படுத்தப்பட்டு, இருபது வருட தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் சர்வதேச அழுத்தங்களால் விடுதலை செய்யப்பட்ட சுயாதீன செய்தியாளர். தற்போது வோசிங்கரனிலிருந்து பணியாற்றி வரும் இவரது கட்டுரைகளை உலகின் முன்னணி ஊடகங்கள் பிரசுரித்து வருகின்றன.
அனுமதிச் சீட்டுகளுக்கு முற்பதிவு செய்ய வேண்டியது அவசியம். குறித்த இருக்கைகளே உள்ளமையால் முதல்வருபவர்க்கு முதலிடம் வழங்குவது என்ற வகையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும்.
கட்டணம்: தனி நபர் ஒருவருக்கு பதினைந்து பவுண்ஸ். மாணவர்களுக்கு பத்து பவுண்ஸ். மதிய உணவும், சிற்றுண்டிகளும் வழங்கப்படும்.
[highlight color=’white’ backcolor=’#ff0000′] மேலதிக விபரங்கள் [/highlight]