சாரளம்

671

தமிழ் ஈழத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்ற முறையில் நான் நிற்கும் இடத்தில் இருந்து எனக்கு தெரியும் வெளியின் (சாரளம்) ஊடாக, எனது அறிதலை, உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்.

எமது போராடத்தின் வளர்ச்சியில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள், எமக்கு பல விடயங்களை அனுபவரீதியாக உணர்த்தியுள்ளன. ஒரு காலத்தில், அருகில் உள்ள இந்திய அரசு தலையிட்டு எமது பிரச்சனையைத் தலையிட்டு தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இந்திய அரசு, இந்திய அமைதிப்படையை தமிழருக்கு பாதுகாப்புக்கென அனுப்புவதாகச் சொல்லிக் கொண்டு எம்மை அழித்தது தான் கதை. அவர்களது பொருளாதார, அரசியல் அபிலா சைகளையும், அதற்கு எம்மை அவர்கள் பாவித்த விதத்தையும் பாடமாகப்புகட்டியது. அத்தோடு அவர்களின் நோக்கத்தை விடுதலைப்புலிகள் புரிந்து கொண்டு அதை அவர்கள் எங்களுக்கு உணர்த்தினாலும், இந்தியாவின் காந்திதேச முகத்திரையை கிழிப்பதற்கு, எங்கள் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருந்தது. ஒன்றுமே கிடைக்காத ஒன்றுக்கே சிங்கள மேலாண்மை சினந்தெழுந்து ராஜ×வ் காந்தி துவக்கு பிடியால் அடி வேண்ட வேண்டியிருந்தது.

அதற்கு பிறகு பொதுமக்களான நாம் இந்தியாவை நம்பி பிரயோசனம் இல்லை. சர்வதேசம் தலையிட்டு தீர்ந்து வைக்க வேண்டுமென விரும்பினோம். சர்வதேசம் தலையிட்டது. ஆனால் எமது தார்மீக உரிமையையும் போராட்டத்தையும் சரியாக விளங்கிக் கொள்ளாமல். தவறாக முடிவுகளை மேற்கொண்டதின் காரணத்தால் முள்ளிவாய்காலில் கொண்டு போய் 140,000 பேரைக் கொன்று ஒழித்தது. தலைவர் எமது போராட்டத்தை ஒரு புள்ளியில் வைத்து தன் ஆயுதத்தைமைளனித்துள்ளார். அப்புள்ளி இன்று சர்வதேசத்திற்கு உறுத்தலாகவும், இப் பாரிய அழிவின் பங்குதாரராகவும் அவர்களை ஆக்கியுள்ளது. அவர்கள் எமது சரித்திரத்தில் என்றுமே அழிவின் பங்குக்கு பதில் சொல்ல வேண்டிய ஒரு நிலையில் தான் உள்ளார்கள்.

விடுதலைப்புலிகளோடு எவ்வளவு மக்கள் விரும்பி அவர்களின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தார்கள் என்பது உலகிற்குத் தெரியும். அவர்கள் அந்த மக்கள் மீதும், மண்ணின் மீதும் எவ்வளவு பற்று வைத்திருந்தார்கள் என்பது வேண்டுமென்றால் தெரியாமல் இருந்திருக்கலாம், அல்லது தெரிந்து கொள்ள விருப்ப மில்லாது இருந்திருக்கலாம். சற்றலைட் சமிக்ஞைகளை கைகட்டி அவதானித்துக் கொண்டிருந்த சர்வதேசத்திற்கு அது தெரியும்.ஒருவரை நம்பி சரணடைவது என்பதில் இரண்டுவகை சரணா கதி உள்ளது. ஒன்று பூனை குட்டியை காவிச் செல்லும் முறை, மற்றது குரங்கு குட்டியை காவிச் செல்லும் முறை. பூனை போகும் இடம் எல்லாம் குட்டியை துÖக்கிச்செல்லும், அடுத்தது குரங்கு குட்டி தாயை இறுக்கி பற்றிக்கொள்ளும், தாய் அதை பிடிப்பது இல்லை, இந்த குரங்கு குட்டியின் நிலைதான் எமக்க பொருந்தக் கூடியது.நாம் இந்த போராட்ட வரலாற்று காலத்தில் நாம் ஒவ்வொரு முறையும் விடுதலை புலிகளின் பாதுகாப்பில் நான் நிம்மதியாக நிந்திரை கொண்டோம். அவர்கள் இராணுவத்தை முடக்கி சென்றிக்கு நின்ற போதும் சரி, இராணுவம் இராணுவநிலையில் இருந்து வெளியேறி 1995 இல் யாழ்பாணத்தை கைப் பற்றிய போதும் சரி, நாம் குரங்கு குட்டிகள் போல அவர்களை பற்றி பிடித்துக்கொண்டு அவர்கள் போன இடம் எல்லாம் எமது பாதுப்பு வேண்டி சீறிலங்காவின் பாதுகாப்பில் இருக்க முடியாது பின்தொடர்தோம். இல்லையேல் அந்த நாட்டை விட்டே வெளியேறினோம்.

“Still Counting the Dead” என்ற Frances Harrison இன் புத்தக வெளியீட்டு விழாவில் International crisis group’s Sri Lankan Project Director Dr. Alan keenan சொல்லுகிறார். நடந்தது இனப்படு கொலையா இல்லையா என்று சரியாக பார்க்கப்பட வேண்டும் என்று, அதே நிகழ்ச்சியில் UN panel of Experts, Yasmin sooka கூட அது சம்பந்தமாக சரியாக ஆராயப்படவேண்டும். தனது அறிவு இதற்கு காணாது. இது இனப்படு கொலையா இல்லையா என்று மேலும் ஆய்வுசெய்ய வேண்டும் என்று அப்போதைக்கு தப்பிக்கொள்ள. அப்பட்டமான இனப்படுகொலை என்று அறிந்த தமிழர் நாம் என்ன செய்கின்றோம், போர்குற்றநாள், துக்கநாள் என்று எமக்கு நடந்த படுகொலையை நாமே குறைத்து சொல்கின்றோம். யாரை விசுவாசிக்க இதை சொல்கின்றோம்?

Malcolm X கறுப்பினத்தவரின் அடிமைத் தனத்தைப்பற்றி விளக்கும்போது இரண்டு வகையான அடிமைகள் உள்ளார்கள் என்றும் அவர்கள் House Negroes என்றும், Field Negroes என்றும் அழைக்கப்பட்டார்கள் என்றும் அதில் வீட்டில் வேலை செய்யும் நீகிக்ரோஸ் வாழ்க்கை, வயலில் வேலை செய்பவர்களை விட வசதியானது அவர்களுக்கு அது பழகி போய்விட்டதால் அவர்களின் அடிமை வாழ்வை விட்டு நீங்க மனமின்றி, எஜமான் சொல்வதற்கு சார்பாக தன் சொந்த இனத்தை விட, ஆங்கிலேய எஜமானை கூடுதலாக நேசிப்பார்கள். அவர்களுக்கு அவர்களின் அடிமைவாழ்வு புரிவதில்லை. இது எமது சில தமிழருக்கும் பொருந்தும். இது வெள்ளை இனத்தவர்கள் எதை செய்தாலும் எமது நன்மைக்குத்தான் செய்கிறார்கள் என்று நினைப்பதற்கு சமம்.

எரிக் சொல்ஹைம் அப் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னார். “இம்மண்டபத்தில் கூடி இருப்பவர்கள் ஒருவர் கூட என்னளவுக்கு திரு. பிரபாகரனை சந்தித்திருக்க மாட்டார்கள். தான் ஏழுதடவைக்கு மேலாக சந்தித்ததாக” இவ்வளவு தடவை சந்தித்தவருக்கு அங்கு ஒரு அரசாங்க கட்டமைப்பு இருப்பதுவும், 15 வருடங்களுக்கு மேலாக அவர்களின் ஆட்சியில் கீழ் மக்கள் பல துறைகளின் கீழ் வேலை செய்வதுவும், அவ்வேலை செய்யும் குடும்பங்களில் 5-6 பேர் அவ்வேலை செய்பவர்களின் உழைப்பில் தங்கியிருப்பதும், தெரிந்திருக்காமல் போனதும், அங்கு பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், சங்கத்தலைவர்கள், குடும்ப கொடுபனவு அட்டைகள் என்று இருப்பதுவும் போர் என்று ஒன்று வந்தால் அண்ணளவாக எவ்வளவு குடும்பங்கள் பாதிப்படும் என்று தெரியாமல் இருந்ததும், தெரிந்து வைத்திருக்க விரும்பமில்லாமல் இருந்ததுவும் ஒன்றில் அவர்களின் அறிவீனத்தையும் அல்லது எங்களின் உயிர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பையும் தான் காட்டுகிறது. வெளிநாட்டைப் பொறுத்த வரை அவர்களது பொருளாதார அபிலாசைகள் எப்பவுமே முக்கியத்துவம் பெறுகின்றன. 17ம் நுÖற்றாண்டில் சைனாவுக்கு எதிராக Opium war (அபின் போர்) இல் இருந்து இன்று முள்ளிவாய்காலில் சிறீலங்காவிற்கு விற்கப்பட்ட தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள், எரிகுண்டுகள் வரை இப்பொருளாதார அபிலாசைகளின் ஆழங்கள் உள்ளன.

சிலர் சொல்கிறார்கள். ஈழத்தில் தற்போது அரசியலில் உள்ள தமிழ் அரசியல் நிலையை எமது ஒற்றுமையால் வலுப்படுத்தினால் நாம் வெற்றி பெறலாம் என்று. 1977ம் ஆண்டு பொது தேர்தலில் கல்குடா என்ற தொகுதியை தவிர மற்றைய எல்லா தொகுதியிலும் தமிழர் கூட்டணி வெற்றி பெற்றது. அதை விடவும் ஒரு அரசியல் பலத்தை நாம் எடுத்து விட முடியாது. எமது போராட்டத்தில் ஆயுத சமநிலையில் நாம் இருந்த போது தான் ஒவ்வொரு முறையும் நாம் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டோம். அதற்கு காரணமாக இருந்தது எமது உறுதியான தலைமையும், தன்னலமற்ற பேராளிகளின் சளைக்காத போராட்டமும், பொதுமக்களின் அளப்பரிய அர்பணிப்பும் தான்.

மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் வருமா? வராதா? என்பதை ஈழத்தில் உள்ள எம்மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

சர்வதேசத்தின் ஏதேச்சையான எதிர்கால முடிவுகள் இன்னெரு உறுதியான தலைமையை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழர்கள் எவருமே வன்முறையின் மீதோ, ஆயுதப் போராட்டத்தின் மீதோ காதல் கொண்டவர்கள் அல்ல. இதை தலைவர் தெளிவாக பல தடவைகள் சொல்லியிருந்தார்.

சுகி – ஒரு பேப்பருக்காக