சிங்கத்தின் குகைக்குக் சீறிப்பாய்ந்த தமிழர்.

1018

தீபாவளித்திருநாள் நரகாசுரனை ஆரியன் அழித்த நாளை உலகத்தமிழர் எல்லாருமே போற்றி கொண்டாடும் ஒரு பெருநாள். தமிழர் போராட்டத்தை அழித்ததாக சிங்களம் கொக்கரித்து நிற்கும் வேளை இந்த வருடத்து தமிழர் தீபத்திருநாளை சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து கொண்டாடி விடுவதெனபுலம் பெயர் நாடுகளில் சில தன்மானத் தமிழர்கள் முடிவெடுத்திருந்தனர். அதன்படி யெர்மனியிலும் இங்கிலாந்திலும் இந்த நிகழ்வானது பெருவெற்றியாக முடிந்திருக்கின்றது. இங்கிலாந்தில் இலங்கைத் தூதரகத்தில் நடந்த விழாவிற்கு தீரத் தமிழர்கள் என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாமென நானும் புகுந்திருந்தேன்.

வாசலில் வரவேற்றது கோலம் . அது மாக் கோலமா பூக்கோலமா என அடையாளமே தெரியாதளவிற்கு மிகப்பெரும் அலங்கோலம் ஒன்றினை ஒரு அழகி வரைந்துகொண்டிருந்தார்.அருகில் சென்று அவர் பெயரை கே;கலாமென நினைத்தபொழுது அவசரமாய் உள்ளே போய்விட்டார். ஆளைப்பார்த்தால் நமீதா மாதிரியே இருந்தார் எனவே அவரிற்கு சிலோன் நமீதா என்றே பெயரை வைத்துவிட்டு . உள்ளே போனால் என்ன ஆச்சரியம். மகளிரில் மாணிக்கம். மாபெரும் பெண்ணியம்.தீபம் தொலைக்காட்சி தீ(ய்ந்த)ந்தமிழ் செல்வி. குலக்குத்துவிளக்கு ஒரு குத்துவிளக்கிற்கு அருகில் நின்றிருந்தார்.இரண்டில் எது உண்மையான குத்துவிளக்கென்று ஒருகணம் நான் தடுமாறி நான் கொழுத்தி வைத்திருந்த குத்துவிளக்கிடம் வணக்கம் சொன்னதும். லக்கலக்க லக்க வென சிரித்தவர் என்ன தம்பி குத்து விளக்கோடை கதைக்கறீங்கள் எண்டார்.ஒரு மாதிரி சுதாகரித்த நான் உங்களிற்கும் அதற்கும் வித்தியசமே தெரியெல்லை அதுதான் தடுமாறிவிட்டேன். எதற்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் யாராவது என்னைப்போல உங்களையும் குத்துவிளக்கென நினைத்து எண்ணெயை ஊற்றி வாயில் திரியை வைத்து கொழுத்திவிடப் போகிறார்கள். என்றுவிட்டு அங்கிருந்து எஸ்கேப்.

கொஞ்ச நேரத்தில் ஒரு மைக்கை பிடித்த ஒரு குருக்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை இதே இங்கிலாந்திடமிருந்து கற்று எம்மையும் பிரித்தாண்டு பிரித் ஓதிய சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து மந்திரம் ஓதியுள்ளேன் இது எமக்கு கிடைத்த பெரு வெற்றி என்று முழங்கிக் கொண்டிருக்க . அங்கு நின்ற கூட்டத்தை நோட்டம் விட்டேன்.

அட நம்ம அத்தியடி டக்கியின்ரை மச்சானிற்கு பக்கத்தில் மலர் மாக்ற் குணாளன். இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று சொல்லி புலிகளின் அனைத்துலகத்தால் கடை வைத்து வைத்து கொடுத்ததில் இருந்து சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போர்வாள். கடைதான் பக்கத்தில் என்றால் போர்வாளுக்கு பக்கதில் உறைவாள்போல் சரஸ்வதி பவான் தயாளன். வெளியே மட்டும்தான் சிறீலங்கா பொருட்களை புறக்கணிப்பது அதை இலங்கை தூதரகத்தினினுள்ளேயே செய்வோம் என்று சொல்லி சிறீலங்கா குடிபானங்களை குடித்தே அழித்தபடி சிறீலங்கா அரசிற்கு பெரும் நட்டம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். வாழ்கையே ஒரு நாடகம் நாமெல்லாம் அதில் நடிகர்கள என்றபடி நாடகம் போட்டுக்கொண்டிருந்தார் தமிழ் அவைக்காற்று கலைகழகத்தின் வாசுதேவன். இப்படி பல மானமுள்ள தமிழர்களினால் சிறீலங்கா கோட்டைக்குள்ளேயே நடாத்தப்பட்ட தீபாவளி திருநாளை பார்த்து

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி –
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்கிற பெருமையோடு அங்கிருந்து வெறியேறினேன்.

இப்படிக்கு தன்மானம்கெட்ட தமிழன்.