வடக்கு மற்றும் கிழக்கு நிலங்களை உள்ளடக்கிய தமிழர் தாயகமாக தமிழீழப் பிரதேசங்களில் வாழும் இளையோரே.. மண்ணைக் காப்பாற்ற முயலுங்கள்.
வெளியே கவர்ச்சிகரமாக இருக்கும் இத்திட்டத்தின் நகல் முதன்முதலில் இரு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். முதலாவது இந்தோனேசியா இரண்டாவது பூட்டான்.
இந்தோனேசியாவில் காலடி பதித்த அமெரிக்கப்பின்னணி கொண்ட எரிபொருள் நிறுவனத்திடம் காணிகளைக் கையளிக்க மறுத்த ஆதிவாசிப் பயிர்ச்செய்கையாளர்களிடம் நிலத்தை மர்மமாகப் பறித்தெடுக்க அரசு ஓர் வேலை செய்தது. நிலமற்றவர்களுக்குக் காணிகள் பிரித்து வழங்கப்படவுள்ளன என்று அறிவித்த மறுகணமே, அமெரிக்காவிற்குச்சார்பான அரசு பொய்யான பெயர்களில் நிலங்களைப் பதிவுசெய்தது. ஏற்கனவே குடியிருந்தும் பயிர்ச்செய்கையற்ற நிலங்களும் கூட இத்திட்டத்தைக் காரணம் காட்டிப்பெற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியில் போராட்டம் வெடித்து மக்கள் தெருவிற்கு வந்து நிலங்களை இழந்தமை வரலாறு.
பூட்டானை தன்வசப்படுத்தவும், தனது திண்மக்கழிவுகளைக் கொட்டவும் பூட்டானைத் தேர்ந்தெடுத்த சீன அரசு செய்த திட்டத்தில் இதுவும் ஓர் அங்கம். தனது பொம்மை அரசை உருவாக்கி வைத்து இன்று நோயாளிநாடாக பூட்டானை உருவாக்கியதில் பெரும்பங்கு சீனாவிற்கு உண்டு.
இந்த உதாரணங்களை விட அண்மையில் எமது மண்ணில் நடைபெற்ற சில நகர்வுகளை நோக்குங்கள்.
- குடும்ப அட்டைகளில் தனித்துப் பதியப்பெற்று வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களது நிலங்கள்
- பிள்ளைகளது பெயர்கள் குடும்ப அட்டையில் பதியப்பட்டிருப்பினும் வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களது நிலங்கள்
- காணி உறுதி வேறொருவர் பெயரில் இருக்கும்போது, பிறிதொருவர் மேற்பார்வையாளராக இருக்கும் நிலங்கள்.
- செய்கையின்றித் தரிசாகக் கிடக்கும் நிலங்கள்
- குறிப்பிட்ட அளவிற்குமேல் நிலம்வைத்திருந்தும் அரசதிணைக்களங்கள் / தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்
- ஏற்கனவே மாவீரர் / போராளி குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்
ஆகிய விபரங்கள் கிராமசேவகர்கள் ஊடாக அரசிற்கு அனுப்பப்பட்டுவிட்டன. இந்தக்காணிகளைப் பிரித்து, இவ்வாறான ஓர் அறிவித்தல்மூலம் சிங்களவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் நடவடிக்கையின் ஆரம்பமே அரசு அறிவித்திருக்கும் இத்திட்டம்.
எனவே இளையோரே, நிலங்களற்ற தமிழர்களே , தயவுசெய்து உங்கள் நிலங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், வேறொருவரிடம் கொடுத்தாவது பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துங்கள்.
கண்டியிலிருந்து மண்வெட்டியோடு வடக்குநோக்கிப் புறப்படுவதற்கு சிங்களன் தயாராகிவிட்டான் என்பதை மறந்துவிடாதீர்கள். இது பேராபத்தின் உச்சம். இதிலிருந்து எம் நிலங்களைக் காப்பாற்றாவிட்டால் இனியெப்போதும் அவற்றை மீட்கவே இயலாது.