சிரியக் குர்திஷ் போராளிகள் ஏன் தனிநாட்டுப் பிரகடனம் செய்யவில்லை

123

அமெரிக்காவின் தொடர்ச்சியான கால் வாரல்கள் மத்தியிலும் தம் சுதந்திரத்திற்காகப் போராடி வருகின்றனர் குர்திஷ் மக்கள். ஈராக்கிலும் சிரியாவிலும் தமக்கு என பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன குர்திஷ் போராளிகள். கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் தீரத்துடன் போராடி வரும் சிரியாவில் உள்ள பி.வை.டி எனப்படும் மக்களாட்சி ஒன்றிய உறுப்பினர்கள் 200 பேர் கூடி சிரியாவின் வட கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ளரொஜாவா பிராந்தியத்தை ஒரு இணைப்பாட்சி அரசாகப் பிரகடனப் படுத்தியுள்ளனர். ஏன் அவர்கள் தனி நாட்டுப் பிரகடனம் செய்யவில்லை?

இரசியாவின் இரு முனைத் தாக்குதல்

ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் சுயநிர்ணயப் பிரகடனம் செய்வதைத் தாம் ஆதரிப்பதாக ஈராக்கில் உள்ள இரசியத் தூதுவராலயம்கருத்து வெளியிட்டுள்ளது. இது இரசியாவின் இரு முனைத் தாக்குதலாகும். ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் அமெரிக்காவுடன் நெருங்கமாக உள்ளனர். ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் அப்படி ஒரு பிரகடனம் செய்தால்அதை அமெரிக்கா ஆதரிக்கப் போவதில்லை. அமெரிக்க-குர்திஷ் உறவுக்கு இரசியா கொடுக்கும் ஓர் அடி இந்த ஆதரவாகும். மற்ற அடி குர்திஷ் மக்கள் எங்கும் சுதந்திரம் பெற்றுவிடக் கூடாது என இருக்கும் துருக்கிக்காகும். சிரியாவில் குர்திஷ் போராளிகள் செய்த இணைப்பாட்சிப் பிரகடனம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டஇரசியா மற்றத் தரப்பினரும் இதை ஏற்றுக் கொண்டால் இது ஒரு சாத்தியமான தெரிவு என்றது.

அமெரிக்காவின் கபடம்

குர்திஷ் போராளிகள் இணைப்பாட்டி அரசைப் பிராகடனம் செய்ததை அவர்களின் கூட்டாளியான ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் மக்களுடன் தேவை ஏற்படும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு பின்னர் அவர்களின் கால்களை வாரிவிடும். குர்திஷ் போராளிகள் இணைப்பாட்சி அரசைப் பிராகடனம் செய்ததை அவர்களின் கூட்டாளியான ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் மக்களுடன் தேவை ஏற்படும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு பின்னர் அவர்களின் கால்களை வாரிவிடும் இரசியா மற்றத் தரப்பினரும் இதை ஏற்றுக் கொண்டால் இது ஒருசாத்தியமான தெரிவு என்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரை குர்திஷ் மக்களுடன் அது வைத்திருக்கும் உறவிலும் பார்க்க துருக்கியர்களுடன் வைத்திருக்கும் உறவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறைச் சேவைக்கானகுழுவின் முன் உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர்துருக்கியுடன் இணைந்து அமெரிக்காவும் சிரியாவில் குர்திஷ் மக்களின் இணைப்பாட்சி அரசுப் பிரகடனத்தை எதிர்க்கின்றது என்றார்.

தீரமிக்க குர்திஷ் போராளிகள்

வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) – இவை இரண்டும் சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும் YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. உலகிலேயே மிகத் திறமையாகப் போராடக் கூடிய பெண் போராளிகளாக தற்போது சிரியாவிலுள்ள குர்திஷ் பெண்களே இருக்கின்றார்கள். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போர் புரிவதில் குர்திஷ் போராளிகளே முன்னணியில் திகழ்கின்றார்கள்.

வேடிக்கையான பிரகடனம்.

ஒரு இனம் இணைப்பாட்சி அரசைப் பிராகடனம் செய்வது இதற்கு முன்பு நடந்ததாகவும் தெரிவில்லை அரசியலமைப்பு நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் தெரியவில்லை. சிரியாவின் ஆட்சியாளர்கள் ஏற்காதவரை இந்த இணைப்பாட்சிப் பிகடனம் செல்லாக் காசே. இப்படி இருக்கையில் குர்திஷ் போராளிகளின் இந்தப் பிரகடனம் சற்று வேடிக்கையானதே. நான் தனியாக ஒரு வியாபாரம் தொடங்குவதற்கு அடுத்தவன் அனுமதி தேவையில்லை ஆனால் அடுத்தவன் ஒருவனுடன் பங்காக இணைந்த்து வியாபாரம் தொடங்குவதாயின் அந்த அடுத்தவனின் சம்மதம் அவசியம்.

ஆதரவு தெரிவிக்கும் மற்றப் போராளி அமைப்புக்கள்

Rmeilan நகரில் குர்திஷ் போராளிக ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிரியாவில் உள்ள அரபுக்கள், துருக்கியர், கிறிஸ்த்தவர்கள் ஆகியவர்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் இணைப்பாட்சிப் பிரகடனத்திற்கு தமது ஆதரவையும் தெரிவித்தனர். சிரியாவின் வெவ்வேறு பிரதேசங்கள் வெவ்வேறு படைக்கலன்கள் ஏந்திய குழுக்களின் கட்டுப்பாடுகளின் கீழ் இருக்கும் நிலையில் ஓர் இணைப்பாட்சி அரசு அமைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. குர்திஷ் போராளி அமைப்பினர் பெரும் நிதி நெருக்கடியின் கீழ் இருக்கின்ற நிலையில் ஒரு தனிநாட்டுப் பிரகடனம் நிலைமையை மோசமாக்கும் எனவும் கருதப்படுகின்றது.

ஈராக்கிலும் பிரகடனம் செய்யப் படுமா?

சிரியாவில் உள்ள வைபிஜி/வைபிஜே குர்திஷ் போராளிகளிலும் பார்க்க உறுதியான ஒரு நிழல் அரசை ஈராக்கில் உள்ள பெஷ்மேர்கா என்னும் குர்திஷ் போராளி அமைப்பு நிறுவியுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே ஈராக்கிய அரசியலமைப்பில் அரை இணைப்பாட்சி (semi-federal) அலகு வழங்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கின் பெரும் பகுதியைக் கைப்பற்றிய போது குர்திஷ் போராளிகள் தாம் வாழும் பிரதேசத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். ஏர்பில் நகரை தலைநகராகக் கொண்டு அவர்கள் உலக வர்த்தகத்திலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் தமது ஆளுமையை நாளுக்கு அதிகரித்து வருகின்றனர்.அவர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்வார்களா என்ற கேள்வி போய் எப்போது செய்வார்கள் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஈராக்கில் குர்திஷ் மக்கள் சுதந்திரப் பிரகடனம் செய்வதை ஈராக்கும் துருக்கியும் மட்டும் எதிர்க்காது. சவுதி அரேபியா போன்ற சுனி முஸ்லிம் நாடுகளும் கடுமையாக எதிர்ப்புக்காட்டலாம். ஈராக்கில் இருந்து குர்திஷ் மக்கள் பிரிந்து சென்றால் அது ஈராக்கில் மக்கள் தொகைக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அங்குசிறுபான்மையினராக வாழும் சுனி முஸ்லிம்களின் நிலைமை மேலும் வலுவிழக்கச் செய்யப்படும். ஈராக்கில் தனிநாட்டுப் பிரகடனம் செய்வது மட்டும் குர்திஷ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காது. அவர்களிடையே உள்ள இரு பிரிவினர் 1990களில் கடுமையாக மோதிக் கொண்டனர். தற்போது ஒற்றுமையாக உள்ளனர். மீண்டும் அவர்களிடையே உள் மோதல் வெடிக்கலாம். வெளி வலுக்கள் அதற்குத் தூபம் போடலாம்.

துருக்கியும் இந்தியா போலே

துருக்கி சிரியாவின் தேசிய ஒற்றுமையும்பிராந்திய ஒருமைப்பாடும் பேணப்பட வேண்டும் எனச் சொன்னது. இதைத்தான் இலங்கை தொடர்பாக இந்தியா அடிக்கடி கூறுவதாகும். ஜெனிவாவில் சிரியப் பிரச்சனை தொடர்பாக நடக்கும் பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஆட்சேபனை தெரிவித்ததால் குர்திஷ் மக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.குர்திஷ் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என இரசியா வலியுறுத்தி இருந்தது. அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ்மக்கள் குடியாட்சி ஒன்றியத்தின் போராளிகளுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. அந்தஏமாற்றத்தின் விளைவாகவும் இணைப்பாட்சிப் பிரகடனம் கருதப் படுகின்றது. குர்திஷ் போராளிகள் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருந்தால் பிரடனம் செய்த சில மணித்தியாளங்களுக்குள் துருக்கியப் படையினர் குர்தீஷ் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. புவிசார் நிலைமைகள் துருக்கிக்குச் சாதாகமாக இருக்கின்றன. இதனால் சிரியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்துக்குள் ஓர் இணைப்பாட்சி அரசாக இருப்பது அவர்களுக்கு துருக்கிக்கு எதிரான அரசுறவியல் (இராசதந்திர) கவசத்தை வழங்குகின்றது. குர்திஷ் தலைவர்களின் கருத்து இப்ப்படி இருந்தது:

Syrian Kurds are willing to stay within the country’s borders after announcing plans to create a federal region in northern Syria co-chair of the Syrian Kurdish Democratic Union Party (PYD) Saleh Muslim told Sputnik on Thursday.

குர்திஷ் போராளிகளின் இணைத்தலைவரான சலேஹ் முஸ்லிம் சிரியக் குர்திஷ் மக்கள் இணைப்பாட்சிப் பிரகடனத்தின் பின்னரும் சிரிய நாட்டின் எல்லைக்குள் இருக்க விரும்புகின்றார்கள் என்றார்.

ஐக்கிய அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையில் உள்ள உறவு இன்னும் பல ஆண்டுகள் ஒரு வளர்ச்சி நிலையில் இயங்குவதற்கான சூழ் நிலைதான் காணப்படுகின்றது. குர்திஷ் மக்களின் மோசமான எதிரிகளான துருக்கியர்களுடன் நட்பாக இருக்கும் அமெரிக்காவுடன் குர்திஷ் மக்களின் உறவு எந்த நன்மையையும் இனியும் தரப்போவதில்லை. ஏற்கனவே ஏமாற்றப்பட்டது போல் இனியும் ஏமாற்றப் படுவார்கள்.

PHOTO Courtesy – testtube.com