சிறிலங்காவுக்கு எதிராக சதமடித்த கோரானா

66

சிறிலங்காவில் கொரானா Covid 19 பரவலினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நூறை எட்டியுள்ளது.இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கண்காணிப்பில் உள்ள சமயம்,இருவர் கொரானா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து வெளியேறி உள்ளனர்.மேலும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பலநூறு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுதும் மேலதிகமாக கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் முகமாக,ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.கொழும்பு மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகள் அதிகமான இடர் மிகு மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டு,அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளது.மக்கள் வீட்டு விட்டு வெளியில் வரவோ,வீடுகளில் கூடவோ தடை விதிக்கப்பட்டு இராணுவம்,காவல்துறை ரோந்து தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழில்,மதகூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மக்கள் வீட்டுக்குள் இருந்து மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு சிறிலங்கா இராணுவம் மற்றும் சுகாதாரதுறை அறிவுறுத்தியுள்ளது.