உப்புச் சப்பில்லாத மாவை சேனாதிராஜா, சிறீதரன் உரைகள்

902

 

 

  • இந்தியாவில் தமிழர்களுக்கு வேறு வங்காளர்களுக்கு வேறு.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவித தாக்கமும் செலுத்த முடியாமல் மலையாளிகள்/பார்ப்பனர்கள் செய்துவிட்டார்கள். தமிழக சட்டசபையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார் இந்தியச் சட்ட அமைச்சர் சல்மான் குருஷித். இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையிலான நதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பனர்ஜீயின் ஆட்சேபம் கருத்தில் கொள்ளப்படும் என்றார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஞ்சன் மாதை. மேற்கு வங்கத்தைக் கலந்தாசிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்றார் ரஞ்சன். கச்சதீவை இலங்கைக்குக் கையளிக்கும் போது தமிழர்கள் ஆட்சேபம் கருத்தில் கொள்ளப்படவில்லை.

  • கள்ளப்பயல் சிவசங்கர மேனனின் கள்ளம் அம்பலம்

இலங்கையில் 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்குப் பின்னர் இலங்கைக்கு பயணம் செய்த போது சிங்களவர்களைக் கட்டி அணைத்து துள்ளிக்குதித்துக் கொண்டாடிய கள்ளப்பயல் சிவசங்கரமேனனின் கள்ளத்தனத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. சிவசங்கர மேனன்தான இந்தியாவை தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்தானாம்.

  • ஜீரிவீக்கு இதுவும் ஒஸ்ரோலியாவில் இருந்து வந்த உத்தரவா?

இலங்கைத் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் 4 மணிக்கு நடக்கும் என்று சிறீதரன் எம்பியைப் பேட்டிகாணும் போது ஜீரிவீ தொலைக்காட்சியில் சொல்லப்பட்டது. இதற்கான விளம்பரங்களில் 5 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 4 மணிக்கே பல வயதானவர்கள் உட்படப் பலர் மண்டப வாசலில் காதிருந்தனர். இது என்ன திட்டமிட்ட குழப்பமா? கூட்டத்திற்கான விளம்பரத்தில் பிரித்தானியாவில் உள்ள சகல தமிழ் அமைப்புக்களும் இணைந்து கூட்டம் ஒழுங்கு செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கூட்டத்தில் தனிப்பட்ட ஒரு கோவில் பிரதம நிர்வாகி கூட்டத்தை ஒழுங்கு செய்ததாக புகழாரம் சூட்டப்பட்டது. இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஒஸ்ரோலியாவில் இருந்து வந்த உத்தரவா? இப்போது ஜீரிவியினர் எல்லாம் ஒஸ்ரோலியாவில் இருந்து வந்த உத்தரவு என்று சொல்லித் தப்பித்துக் கொள்கின்றனர்.

  • மீண்டும் தியாகிகள் கொச்சைப் படுத்தப்படுகிறார்கள்

முத்துக்குமார் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்த போது தமிழின விரோதிகள் அவர் வயிற்று வலி தாங்காமல் தற்கொலை செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்ய முற்பட்டுத் தோல்வியடைந்தனர். இப்போது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்தமையைக் கொச்சைப்படுத்தி தினமலம் என கூறப்படும் தினமலர் பத்திரிகையில் ரங்கராஜ் பாண்டே என்ற ஒருவன் எழுதியுள்ளான். இந்த பாண்டே தமிழ்ப் பெயரா? இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் நன்கு பேசவும் எழுதவும் தெரிந்தவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் அல்லர். தமிழ்நாட்டில் இருந்து தமிழில் நன்கு பேசவும் எழுதவும் தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்களும் அல்லர்.

  • மீண்டும் துள்ளுகிறான் சுப்பிரமணிய சுவாமி.

சுப்பிரமணிய சுவாமி என்ற ஒரு நாதாரிப் பயல் தமிழர்களில் பரம விரோதி. அவன் இப்போது தமிழ்நாட்டின் தமிழின உணர்வாளர்கள் எல்லாம் இந்திய தேசவிரோதிகளாம்; அவர்கள் யாழ்ப்பாணம் போகவேண்டும் என்கிறார். அப்படியென்றால் தமிழின விரோதியான இவன் சுமெரியா போவானா?

  • உப்புச் சப்பில்லாத மாவை சேனாதிராஜா, சிறீதரன் உரைகள்

தமிழினக் கொலையாளி மஹிந்த ராஜ்பக்சேயிற்கு பொன்னாடை போர்திய பன்னாடை சுதர்சன நாச்சியப்பன் கூட்டிய கூட்டத்தில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் தவறியமை நாம் அறிந்ததே. மாவை சேனாதிராஜாவும் சிறீதரனும் இலண்டனில் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினர். கிறீஸ் பூதமும் மக்கள்படும் அவலம் பற்றியும் இருவரும் விளக்கினர். அவர்கள் சொல்ல முன்னரே அவை பற்றிப் பலரும் நன்கு அறிந்திருருந்தனர். நாம் அவர்களிடம் இருந்து அறிய விரும்புவது தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் அல்லது செய்யவிருக்கும் நடவடிக்கைகளே. மக்கள் தம் பின்னால் இருப்பதாக உள்ளூராட்சித்தேர்தல் மூலம் தாம் அறிந்து கொண்டதாக இருவரும் கூறினர். தம்பின்னால் நிற்கும் மக்களை அவர்கள் இனி எந்தத் திசை நோக்கி வழிநடத்தப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி. அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும் என்று பலதடவை மாவை சேனாதிராஜா சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்து விட்டார். மதுரையில் ஒரு பெண் நீதி கேட்டுப் போராடினாள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தச் சிலம்பைத் தூக்கிக் கொண்டு எங்கு நீதி கேட்டுப் போகப் போகிறது. அல்லது தொடர்ந்து வாக்கு வேட்டை அரசியல் நடத்திக் கொண்டிருந்தால் அரசியலில் பிழைப்பு நடத்தியோர்க்கு எது கூற்றமாகும் என்ற கேள்வி உருவாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரினவாதிகளின் துப்பாக்கி முனையின் கீழ் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். When the going get tough, the tough get going என்பார்கள். ஆனால் த.தே.கூவைப் பொறுத்தவரை When the going get tough, let us go to Delhi என்பதுதான் தாரக மந்திரம் போல் தெரிகிறது. இவ்வளவு அழிவையும் இந்தியா செய்தபின்னரும் காந்தி பிறந்த தேசம், நேரு வாழ்ந்த தேசம், இந்திரா ஆண்ட தேசம், ராஜீவ் வளர்ந்த தேசம், சோனியா பாவாடை காயப்போட்ட தேசம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன பயன் தமிழர்களுக்குக் கிடைக்கப்போகிறது. மீண்டும் ஆயுதப் போராட்டம் உருப்பெறாமல் இருக்க தமிழர்களைத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று சிங்களவர்களுக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்பதை த.தே.கூ அறியாதா? அதன் ஒரு அம்சம்தான கிறீஸ் பூதம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்களா? கிறீஸ் பூதங்களுக்கு எதிராக தாம் விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக மாவை சூளுரைத்தார். ஒரு வெறும் உண்ணாவிரதத்தைத் தவிர வேறு எதை இவர்களால் செய்ய முடியும். நகங்களை நீளமாக வளர்த்துக் கொள்ளுங்கள் எந்நேரமும் சிறிய பை ஒன்றில் கார மிளகாய்த்தூளை வைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு ஆலோசனை வழங்கக் கூட இவர்களால் முடியாதா?

  • சாத்திரியார் சொற்கேட்டதால் கணவனால் விரட்டப்பட்ட வோல்த்தம்ஸ்ரோ பாவானி அக்கா.

மலையாளச் சாத்திரிகளும் சாமியார்களும் இலண்டனுக்குத் தொடர்ந்து படை எடுத்த வண்ணமே இருக்கிறார்கள். இவர்கள் பில்லி, சூனியம், வசியம் என்றெல்லாம் ஊடகங்களில் பெரு விளம்பரங்களும் கொடுக்கிறார்கள். பில்லி, சூனியம், வசியம் போன்றவைக்கு விளம்பரம் கொடுப்பது சட்டபூர்வமனதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க இவை எமது கலாச்சாரத்தை எப்படிப் பாதிக்கும் என்று ஊடகங்கள் யோசிப்பதில்லையா? இதுபற்றிக் கேட்டால் அவர்கள்தான விளம்பரங்களுக்கு ஒழுங்காகக் பணம் தருகிறார்களாம். இந்தச் சாத்திரியாகளுக்கும் சாமியார்களுக்கும் இன்னும் ஒரு விதத்திலும் பணவரவு உண்டு. இவர்களில் சிலர் இந்திய/இலங்கை உளவாளிகளாகவும் செயற்படுகிறார்கள். வோல்த்தம்ஸ்ரோவில் ஒரு பவானி அக்கா சாத்திரியார் கணவனுக்கு வேறு சிநேகிதி இருப்பதாகச் சொன்னதை நம்பி கணவருடன் சண்டையிட்டார். பவானி அக்காவை வைத்துக் கட்டி அவிழ்ப்பதே பெரும்படாக இருக்கும்போது கணவருக்கு இன்னொரு பெண்ணை எப்படிச் சமாளிக்க முடியும்? வந்த ஆத்திரத்தில் பவானி அக்கா கணவரால் வீட்டை விட்டு விரட்டப்பட்டா.