உலகமே வியந்து போற்றும் அவரை இவருக்குத் தெரியாதாம்!
ஆனால் அவர் போட்ட பிச்சையில் பதவிக்கு வந்து இன்றும் மக்களை ஏமாற்றி சுத்துமாத்துகள் செய்து வயிறு வளர்க்க மட்டும் தெரிகிறது!
அன்று இவர்.. இன்று இவரின் சுத்துமாத்துத் தம்பி!
அன்று :
“பிரபாகரனை எனக்குத் தெரியாது, அவர் நடத்தின இயக்கம் வந்து ஒரு புலிப் பயங்கரவாத இயக்கம். உண்மையில் அவர்களை இலங்கை அரசாங்கம் அதுவும் மகிந்த ராசபக்ச ஆட்சியில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்.”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்
இன்று:
ஒரு நேர்காணலில் #சுமந்திரன் அவர்களிடம் நெறியாளர் கடைசியாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில்:
கேள்வி – நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்பவரா?.
பதில்– இல்லை. ஏற்றுக்கொள்பவன் அல்ல.
கேள்வி – எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை?
பதில் – ஆம்! எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை.
இதனை நான் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல அனைத்து இடங்களிலும் கூறுகிறேன். இதன் காரணமாக எனக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
எங்களுக்காக போராடியவர்களை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என கேட்கின்றனர்.
ஆயுத அமைப்பை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், புலிகளின் ஆயுத அமைப்பை ஏற்கவில்லை!
இதைத் தான் சுமந்திரன் கூறியுள்ளார்.
இன்று சுமந்திரன் கருத்தை தமிழ்தேசியகூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் விமர்சித்து சுமந்திரன் மட்டும் பிழையானவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏனையவர்கள் தேசியம் சார்ந்து மக்களுக்கு செயல்படும் தலைவர்கள் என காட்டமுயல்வது ஒரு அரசியல் இராஜதந்திரம்!
இதே சம்பந்தர் தான் முன்னர்
“புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றார்.
“புலிகள் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்” என்றார்.
“சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் அதிகம்” என்றுகூட கூறினார்.
“புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம்” என்றும் சொன்னவர் இவரே!
சம்பந்தர் “தமிழீழத்தை தாம் கோரவில்லை” என்று கூறி சிறிலங்கா தேசியக்கொடியை உயர்த்திப் பிடித்ததை மறந்து போவோமோ?
சம்பந்தர் “மகிந்த ராஜபக்சா தான் தேசியத் தலைவர்” என்றார்.
சம்பந்தர் தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்.
மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றி தாம் தேசியவாதிகளாக தம்மை காட்டி தமிழ் மக்களின் வாக்கை வாங்குவதற்கே இந்த நாடகங்கள்!
11 வருடங்கள் கடந்த நிலையில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக் கூட இவர்கள் தீர்கவில்லை!
சர்வதேசத்தில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நல்லாட்சி அரசு என கூறி நம்ப வைத்து அவர்களுடன் கூட்டு சேர்ந்து ஜநாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஒப்புதல் கடிதம் கொடுத்து இழுத்து மூடியவர்கள் இவர்கள்!
தமிழ் மக்கள் இனியும் இவர்களை நம்பி ஏமாறக் கூடாது!
மாற்று வழியில் பயணிக்க நேரம் இது!
மக்கள் இனியேனும் மாக்களாக இராமல் விழித்தெழ வேண்டும்!