நண்பர்களே நம் சொந்த சகோதரர்களாக உன்று எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல் தம் இன்னுயிரையும், கொடையாகக் கொடுக்கத் துணிகின்றார்களே நம் தமிழக மக்கள். அவர்களுக்கு ஈழத் தமிழர்
நாம் என்ன கைமாறு செய்யப் போகின்றோம்? தமிழ் நாட்டில் கூடங்குளம், இடிந்த கரை என்று தமிழ் மக்களின் எழுச்சி பெருகுகின்றதே! நாம் இங்கு என்ன செய்கின்றோம்? அது குறித்து ஒரு துளி அக்கறை கொண்டோமா?“அட அங்கே என்ன – நிகழ்கின்றது?” என்று கேள்வி செவியர்களாகவாவது இருக்கின்றோமா?
“சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் காதல் கண்டும்,
சிந்தை இரங்காரடி…” என்ற பாரதியாரின் பாடல் ஒன்று தான் இக்கணம் என் காதில் எதிரொலிக்கின்றது.
தமிழக மக்கள் அப்படியா இருந்தார்கள்? சிந்தை இரங்காமலா இருந்தார்கள்? அல்ல, அதற்கும் அப்பால் உயிர் துடித்தார்கள், தம் உடலை தகிர்த்தார்கள். முத்துக்குமார் தன் உடல் எரித்தான், எரிந்த உடலை ” இந்தா கொண்டு போ, இதை வைத்து ஈழத் தமிழர் துயரை ஆற்று, சர்வதேச சமூகத்திற்கு ஈழத்தமிழர் படும் இன்னல்களை எடுத்துரை” என்று தந்தான். எவருக்கையா வரும் இந்த நெஞ்சுரம்? அவனை இவ்வாறு ஆற்றுப்படுத்தியவர் யார்? அவ்வாறு ஆற்றுப்படுத்தியது நமது தேசியத் தலைவரின் ஆளுமையும் ஒன்றாயினும் அது ஒரு பகுதியே!
தமிழகத்தின் தமிழ் ஆன்மாவே, அவனை இவ்வாறு ஆற்றுப்படுத்தியது. முத்துக்குமாரனுக்குத் தெரிகிறது. “இச்சூழலில் நான் எது செய்தால் தகும்?” என்று. அதைநோக்கி அவன் திட்டமிட்டு நகர்கிறான், தனக்கானது அல்ல, தமிழ் மக்களுக்கான உயில் தயாரிக்கின்றான். பிறகு ஒரே ஒரு தீக்குச்சி உரசல். ஓராயிரம் கோடி உணர்வுகள் அதை உசுப்பி உலகெங்கும் அலைக்கழிக்கிறது.
முன்னர் ஒருவன் செய்தான் அவனும் தமிழகத் தமிழன் 1987 யூலை ஜே.ஆர்.ராஜீவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்றபோது “இந்திய அரசே, ஆக்கிரமிப்பை நிறுத்து” என்று அப்துல் ரசாக் தன் உடலை தீ மூட்டினான். கொμந்து விட்டு எரிந்தது தமிழகம் முன்னை இட்ட தீ அப்துல் ரசாக்கினுடையது.
தம்மை கொடையாகக் கொடுத்தோர், பல்லாயிரக் கணக்கில் நம்மிடையே உள்ளனர். கரும்புலிகளாய், களப் போராளிகளாய், அவர்கள் விதையாக வீழ்ந்தனர். துச்சமென தம் உயிரை கொடுக்கும் துணிவு தர அவர்களுக்கு அற்புதமான ஒரு தலைவர் இருந்தார். ஓர் உன்னத இலட் சியம் இருந்தது. ஓர்மமான இயக்கம் இருந்தது. ஆனால், தமிழகத் தமிழர்களுக்கு எது தான் இருந்தது?
ஆடலிலும், பாடலிலும் மனதைப் பறிகொடுத்து அதனுாடாக செய்தி அனுப்பலாம் என நம்பியவள் செங்கொடி. தன் உடலில் தீ வைத்ததன் மூலம் அவள் சொன்ன செய்தி ஓராயிரம் கோடி. “என் உயிரைத் தருகின்றேன், அவர்கள் உயிரை விட்டு விடு” என்று முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகிய தூக்குத் தண்டனைக் கைதிகளுக்காக இள வயதில் தன் இன்னுயிரைக் கொடுத்தவள் செங்கொடி, இத்தீரம் எவருக்கு வரும்?
இள வயதில் உலகை வெறுத்தா தன் இன்னுயிர் கொடுத்தனர் இவர்கள்? இப்பொது விஜய ராஜா தன் முறை என்று தன் உடலில் தீ வைத்தான். தமிழர்களைக் கொன்ற கொலைக் குற்றவாளி ராஜபக்ஷே தன் மண்ணில் கால் வைக்கக்கூடாது என்பது விஜயராஜாவின் வாதம். அதற்கு அவன் கொடுத்த விலை சொல்லில் அடங்காதது.
இவற்றையெல்லாம் கண் கொட்டாமல் பார்த்து வியக்கிறோம் என்றோ, கை தட்டி ரசித்து மகிழ்கின்றோம் என்றோ அல்ல, உண்மையில், இச்சம்பவங்களை கேள்விப்படுகின்றபோது இரக்கக் கண்ணீர் வடிகிறது. இவ்வாறான தற் கொடைகளை ஆராதிக்கிறோம் என்று கூட அல்ல, ஆனால் புரிகின்றோம். மேலாக அத்தகையோரை கை எடுத்துக் கும்பிடுகின்றோம்.
இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்,இவர்களுக்கு ஏன் வந்தது? இப்பொμது பாருங்கள். சிங்கள இன வெறியன் மகிந்தாவின் இந்திய பயணத்தை எதிர்த்து, நமது வைகோ அவர்கள் மாஞஉலம் கடந்து, மத்திய பிரதேசத்தில் குரல் கொடுக்கப்போனார். தமிழக மக்களுக்குத் தெரிந்த ஈழத் தமிழர் இன்னல்களை ஏனைய மாநிலத்தவர்களுக்குத் தெரியுமாறு, ஓங்கிக் குரல் கொடுத்தார் வைகோ அவர்கள்.
கோடிக் கணக்கில் பணம் கொட்டி, ரெசோ மாநாட்டில் கருணாநிதியால் செய்ய முடியாததைஒற்றைச் சிறகுடன் தனி ஆளாய் வைகோ செய்து முடித்தார். இத்தனை ஓர்மம் அவரிடம் எப்படி வந்தது? கருணாநிதியை விடுங்கள், ஈழத் தமிழர் வாக்குகளை சேகரம் பண்ணும் சம்பந்தன் தரவளிகள் வைகோ செய்ததில் ஒரு துளியாவது செய்வார்களா? அது தான் செய்யவேண்டாம். வைகோ சிங்கள இனவெறியனை எதிர்த்து மாஞஉலம் கடக்கிறார். சம்பந்தன் சிங்கள இனவெறியின்அடையாளமான சிங்கக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்.
இப்பொழுது சொல்லுங்கள், நமது சொந்தச் சகோதரர் யார்? இந்தச் சோற்றுப் பட்டாளம் யார்? உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காக வைகோ செய்தது மாபெரும் பணி. தமிழ் நாட்டிற்கு மாத்திரம் தெரிந்த ஈழத் தமிழர் இன்னல் இப்பொழுது இந்தியா முடிவதற்கும் தெரிவதாயிற்று. மத்திய பிரதேச கிராமத்தின் மனிதர்கள் ஈழத் தமிழர் துயர் கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். இத்தகைய அருஞ்செயல் புரிந்தவர் நமது வைகோ அவர்கள்.தங்களை வணங்குகின்றேன் ஐயா….
ஆனால், நாம் இவை பற்றியெல்லாம் உணர்கின்றோமா? வைகோ, நெடுமாறன், சீமான், திருமாவளவன் போன்றோர் எல்லாம் “ஈழத்தமிழரின் இன்னல்களை வைத்து தமது அரசியல் செய்கிறார்கள்” என்ற ஒற்றைவாக்கியத்தில் இவர்களின் உன்னத தியாகத்தை கடந்து போகிறோம். சீமான் தன் குரல் என்ற ஒரு மந்திரம் மாத்திரம் வைத்து தமிழ் நாட்டில் அத்தனை தமிழரையும் எழுச்சி கொள்ள வைக்கவில்லையா?
நாங்கள் என்ன செய்கின்றோம் என்றால், அரசியல் வியாபாரி என்கின்ற ஒற்றைச் சொல்லினால் ஒன்றையும் இல்லாததாக்கி விடுகின்றோம். அதனை திட்டமிட்டுச் செய்வோரும் உள்ளனர். அவர்கள், நமது எதிரிகள். தமக்கு அத்தனை அரசியலும் அத்துப்படி என்ற மனச்சிக்கலில் சொல்வோரும் உள்ளனர்.
நண்பர்களே! மிக மிகக் கவனமாக இருக்க வேண்டியகாலம் இது. அரசியலை பக்குவத்துடன் அணுக வேண்டும். குல்தீப் நய்யார் என்ற இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் மவுன்ட்பேட்டன் பிரபு, ஐவகர்லால் நேரு காலத்திலிருந்து இற்றை வரை பத்திரிகை பணி புரிபவர்- அவர் சொல் வதைக் கேளுங்கள். “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உண்மையிலேயே பல்வேறு தியாகங்களை புரிந்த புலிகள் தோற்றுப் போனதில் எனக்கும், வருத்தம் தான்”இது தான் வைகோ, சீமான் போன்றோரை இயக்குகிறது. நம்மை இயக்க வேண்டியதும் இதுவே.