•ஜெர்மனியில் இந்திய உளவுப்படைக்காக
உளவு பார்த்த இந்தியர் மீது வழக்கு தாக்கல்!
ஜெர்மனியில் இந்திய உளவு நிறுவனமான றோ (RAW ) வுக்காக உளவு பார்த்த இந்தியர் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வாழும் சீக்கிய மற்றும் காஸ்மீர் மக்களை உளவு பார்த்ததாக இந்த இந்தியர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இந்தியர் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள ஒரு றோ அதிகாரியுடன் தொடர்பு வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த வருடமும் ஒரு இந்திய தம்பதியினர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இன்று உலகில் இஸ்ரவேலின் உளவு நிறுவனமான மொசாட்டுக்கு இணையாக அதிகளவு பணம் இந்திய உளவு நிறுவனமான றோவுக்கு ஒதுக்கப்படுகிறது.
இதன் டில்லியில் இருக்கும் பிராஞ்சைவிட பெரிய பிராஞ்சாக பெங்களுர் பிராஞ் இருக்கிறது.
இந்த பெங்களுர் பிராஞ் 2002ல் அதிகளவு தமிழர்களை உள்வாங்கி வெளிநாடுகளுக்கு உளவு பார்க்க அனுப்பியுள்ளது.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் இவ் றோ உளவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் ஜரோப்பியநாடுகளே திணறும்போது புலிகளின் பொட்டு அம்மான் எப்படி கண்டு பிடித்தார் என்பதே?
மிகவும் எச்சரிகையாக இருந்த பின்லேடனைக்கூட ரெலிபோனை வைத்து கண்டு பிடித்ததாக கூறுகிறார்கள்.
ஆனால் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இறுதிக் கணம்வரை எதை வைத்தும் இந்திய உளவு நிறுவனத்தால் கண்டு பிடிக்க முடியவில்லையே?
உண்மையில் பொட்டு அம்மானின் திறமை ஆச்சரியம் தருகிறது.