டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் மெய்வல்லுனர் போட்டி

159

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 3வது வருட அண்இமையில்ல்ல இடம்பெற்றது. போட்தடிகள்மி ழீழத் தேசியக் கொடியேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி மாலை 9 மணியளவில் நிறைவாகியது. ஆண்கள் பெண்களுக்களுக்கான 25, 50, 100, 200m ஓட்டங்கள், தடை தாண்டல் அஞ்சல் ஓட்டம் பழம் பொறுக்குதல், தண்ணீர் நிரப்புதல் அணி நடை என்று எல்லா விளையாட்டுக்களும் இடம்பெற்றது. Dartford Harriers Athletic Ground இல் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானியக் கொடியினை பாடசாலை தொடங்கும் பொழுது முதலாவது மாணவியாக இணைந்து இன்று வளர்தமிழ் 6 கல்வி பயிலும் மாணவி செல்வி சயானி சசிகரன் ஏற்றிவைதார். பின்பு தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலைப் பொறுப்பாளர் திரு சஞ்ஜீவன் ஆறுமுகம் அவர்களும் பாடசாலைக் கொடியினை பாடசாலை தலைமை ஆசிரியர் திருமதி செல்வராஜினி சசிகரன் அவர்களும் ஏற்றி வைத்தனர். மறுமுனையில் எல்லாளன் இல்லக்கொடியினை இல்லப் பொறுப்பாளர் திருமதி நிருசா சிறிவிந்தன் அவர்களும் சங்கிலியன் இல்லக்கொடியினை இல்லப் பொறுப்பாளர் திருமதி செல்வரஜனி நகுலேஸ்வரன்; அவர்களும் ஏற்றி வைத்தனர்.

எல்லாளன் மற்றும் சங்கிலியன் இல்லங்களின் மாணவர்கள் பங்குபற்றிய வினோத உடைப் போட்டி. நான்கு குழுக்கள் நான்கு வித்தியாசமான தலைப்புக்களில் திறம்பட செய்திருந்தார்கள். குழு 1: தமிழின் விழுதுகளும் மருகி போகும் பாரம்பரிய கலையும் குழு 2: தமிழ் உரிமைக்காக போராடியவர்களின் இன்றைய நிலைப்பாடும் அவர்களின் வாழ்வாதரமும் (வாழ்வா? சாவா?) குழு 3: உழவுத் தொழிலும் அதன் முக்கியத்துவமும் குழு 4: கல்லறையில் இருந்தும் உறங்காத மாவீரர்கள் என்ற தலைப்பில் செய்து மக்களின் கவனத்தை ஈற்றார்கள்.

காலநிலையையும் பொருட்படுத்தாது மாணவர்கள் மிகவும் உற்சாகமா பங்கு பெற்றார்கள், சங்கிலியன் இல்லம் மற்றும் எல்லாளன் இல்லங்களிற்கிடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 1111 புள்ளிகளைப் பெற்று சங்கிலியன் முதலிடத்திலும் 1086 புள்ளிகளைப் பெற்று எல்லாளன் இரண்டாம் இடத்தையும் பெற்றது.