தனிமைப்படுத்தலுக்கு உட்படாதோர் சரணடைக அல்லது 3 வருட சிறை – சிறிலங்கா இராணுவம்

101

வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சிறிலங்கா வந்திருப்போர்.இலங்கை காவல்துறை/சுகாதார பரிசோதகரிடம் சென்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கு 48 மணிநேர காலகெடு ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கை முழுதும் முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில்..நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் சரணடைவதன் மூலம் தங்களையும் நாட்டையும் காப்பாற்றி கொரானா அச்சத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது ,அல்லது மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.