தமிழரை தாழ்த்தும் தரம்கெட்ட சிங்களம்

717

மிக அண்மையில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பயணிக்கவேண்டிய அவசியமொன்று எனக்கு ஏற்பட்டது. அவசரமான பயணமாதலால் தவிர்க்க முடியவில்லை. விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே எனக்கு ஒரு வகை கூச்சமாகத்தான் இருந்தது. தமிழனை அன்று தொட்டு இன்று வரை படாத பாடு படுத்தும் இந்த சிங்களவனின் வாகனமொன்றில் எனது பணத்தைக் கொடுத்து பயணிக்க வேண்டியிருக்கிறதே என்றும் தமிழனை இழிவாக, செல்லா காசாக மதிக்கும் இவனது விமானத்தில் பயணிப்பதா? என்ற வெட்கமும், வெப்பியாரமும் என்னை சங்கடப்படுத்திக் கொண்டே இருந்தது எனது பயணம் முடியும் வரைக்கும்.

ஆனால் இன்றைய இந்த கோடை கால விடுமுறையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களால் வடக்கும் கிழக்கும் நிரம்பி வளிகின்றது. அந்தளவிற்கு இந்த கோடைகாலம் என்றுமில்லாதவாறு புலம் பெயர் வாழ் தமிழர்கள் முன்னைய விடுமுறைகளை இந்தியா, மலேசியா என்று போய் வந்தவர்கள் இம்முறை அத்தனை பேரும் இலங்கைக்குத்தான் வந்தார்கள். அவர்களில் பலரை எனக்கு சந்தித்துப் பேசும் வாய்ப்பும் பல பேரைப்பற்றி அறியும்படியும் நேர்ந்தது. இவர்களில் தெண்ணூறு விகிதத்திற்கும் மேலானவர்கள் இலங்கைச் சிங்களத்தின் விமானங்களிலேயே பயணம் செய்திருந்தார்கள்.
இவற்றிலும் பல யாழ்ப்பாணத்தமிழர்கள் ஒரு படி மேலே போய் வன்னியூடாக கண்டி வீதியால் பயணிப்பதால் தூசி பிடித்து தும்மல் வருமென்ற காரணத்தினால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் சிங்கள விமான படைகளால் நடாத்தப்பட்டு வரும் விமானங்களிலேயே பறந்து வந்த்திருந்தார்கள். இறுதிப்போரில் அந்த மக்கள் பட்ட  துன்பங்களின் எரிச்சல்களைத்தானும் இவர்களால் பார்ப்போமே, அல்லது இராணுவம் எங்கெல்லாம் இருக்கின்றார்கள், என்னவெல்லாம் செய்கின்றார்கள் , என்பவற்றை கூட வீதியோரங்களிலாவது பார்க்க முடியுமே, என்ற உணர்வுகூட பலரிடம் இல்லாமல் போய்விட்டது.

ஆக தமிழரின் பணத்திலேயே தடை செய்யப்பட்ட குண்டுகள் வரை கொள்வனவு செய்து தமிழனின் தலைமேலேயே அவைகளை உருட்டி வீழ்த்தி வெடிக்க வைத்து பல்லாயிரகணக்கான  தமிழரை கொன்று. ஆயிரக்கணக்கான பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் அங்கங்களை அறுத்து , மண் மீட்கப் போராடியவர்களை முட்டுக்காலில் மண்டியிட வைத்து சுட்டுக்கொன்று இன்னும் பல மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட கொடூர வெறித்தனங்களை சிங்களம் தமிழர் மேல் நடத்தி முடித்திருக்கிறார்கள்

இந்த வருடம் இங்கு வந்திருந்த தமிழர்கள் மட்டும் மில்லியன் கணக்கான ரூபாய்களை இலங்கை விமான சேவையின் மூலமாக இலங்கை அரசிற்கு இலாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இவைகள் தவிர இங்கிருந்து எடுத்து போக வேண்டிய பொருட்களை கூட தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து வேண்டிப் போகவேண்டும். அதனால் கிடைக்கின்ற இலாபத்தில் எனது இனத்தவர் ஒருவர் ஒருவாய் சோற்றை எங்களது பெயரைச் சொல்லி உண்ணட்டுமே என்ற சிந்தனை கூட இல்லாமல் பயணத்துக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னர் கொழும்பு சென்று சிங்கள , முஸ்லிம்  வர்த்தகர்களிடம் தங்களுக்கு தேவையானவற்றை வேண்டிச் சென்றார்கள்.

புலம் பெயர் தமிழர்கள் இலங்கை விமானச் சேவையை புறக்கணிகின்றார்கள், இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களையும் புறக்கணிகின்றார்கள், என்று இங்குள்ள சில பத்திரிக்கைகளிலும் சில தடவைகள் செய்திகள் வந்ததுண்டு. அப்போதெல்லாம் இங்குள்ள பல்லாயிரம் தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களின் தேசிய உணர்வுகண்டு உள்ளம் நெகிழ்ந்து போனார்கள். ஆனால் இவை அனைத்தும் பொய்ப் பிரச்சாரங்களே. இலங்கை அரசின் அறிக்கைகளின் பிரகாரம் இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதி என்றுமில்லாதவாறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா மற்றும் , ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளுக்கு கொடிகட்டிப் பறப்பதாகத்தான் கூறுகிறார்கள்.

இதை நான் பல புலம்பெயர் தமிழர்கள் நாட்டிற்கு வந்ததும் நாசூக்காக விசாரித்தபோது பலரும் எனக்கு தந்த பதில். சிங்களவனின் சின்னவெங்காயம் போட்ட கட்டாச்சம்பலில் ஆரம்பித்து நெத்தலிப் பொரியல், பாவற்காய் பிரட்டல் வரை பெருகி இப்போது சிங்களவனின் கட்டுச் சோறு வரைக்கும் கிடைக்கும் என்றார்கள்.

ஆக தமிழரின் பணத்திலேயே தடை செய்யப்பட்ட குண்டுகள் வரை கொள்வனவு செய்து தமிழனின் தலைமேலேயே அவைகளை உருட்டி வீழ்த்தி வெடிக்க வைத்து பல்லாயிரகணக்கான  தமிழரை கொன்று. ஆயிரக்கணக்கான பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் அங்கங்களை அறுத்து , மண் மீட்கப் போராடியவர்களை முட்டுக்காலில் மண்டியிட வைத்து சுட்டுக்கொன்று இன்னும் பல மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட கொடூர வெறித்தனங்களை சிங்களம் தமிழர் மேல் நடத்தி முடித்திருக்கிறார்கள்

ஆனாலும் இவர்கள் சாட்சி இல்லாமல் செய்த கொடூரங்களை உலகம் முடிந்தவரை சாட்சியப்படுத்தி போர்குற்றங்கள் இழைக்கபட்டன என்ற குற்றச்சாட்டுகள் பலமாக பெருகிவரும் நிலையில் இலங்கை அரசு இனிவரும் காலங்களில் அவைகளை (போர்க்குற்றங்களை ) அபிவிருத்தி என்ற மாயைக்குள் புதைத்து மாபெரும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இதற்கும் தேவைபடுகின்ற பணத்தையும் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் வருவாயில் இருந்தே சிங்கள அரசு பெற்று இதிலும் வெற்றி பெற்றுவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது.

இதையும் விட இராணுவம் வடக்கு கிழக்கை கைப்பற்றிய பின் எவ்வளவிற்கு தமிழர்களின் தலைகளில் மிளகாய் அரைக்க முடியுமோ அவ்வளவிற்கு ஆட்டம் போடுகிறார்கள். ஒரு தமிழர் குடித்துவிட்டு வீதியால் போனாலும் அடி உதை. வீதியில் நின்று ஒரு தமிழர் புகைத்தாலும் அடி உதை. தண்டம் ஒருவர் ஒரு இறைச்சி வகையை கூட எடுத்து போக முடியாது. அதற்கு நாற்பதாயிரம் ரூபாய்கள் வரை தண்டம். ஊரின் பெயர்கள் வீதிகளின் பெயர்கள் எல்லாம் விரைவாக சிங்கள பெயர்களாக மாறி வருகின்றன. தமிழர் மேல் கொண்ட இனவெறுப்பால் சிங்களம் தமிழ் என்ற சொல்லையே பாவிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

இவர்கள் தமிழர் பகுதிகளில் தான் இவைகளை செய்கிறார்களா என்றால் அதையும் தாண்டி தமிழர்கள் எங்கெல்லாம் இருபர்களோ அங்கெல்லாம் தமிழை தவிர்க்கப்பார்க்கிறார்கள் ஏனெனில் நான் இலங்கை விமானத்தில் பயணித்தபோது சினிமாப்படத்துக்கான அலைகளின் பிரசார பிரசுரங்களை (SRILANKAN MOVIES) என்ற பகுதிகளை பார்த்தேன் அதில் இந்திய திரைப்படங்கள் பல மொழிகளில் திரையிடுவதாக போட்டிருந்தார்கள். அவைகளை ஆங்கிலத்திலும் அந்த திரைப்படம் எந்தெந்த மொழிகளோ அந்தந்த  மொழிகளிலும் எழுதியிருந்தார்கள். அவை, HINDI CINEMA   என்றும் பின் ஹிந்தி மொழியிலும் MALAYALAM CINIMA என்றும் பின் மலையாள மொழியிலும் URDU VARIETY பின்னர் அதனை உருது மொழியிலுமாக அச்சு செய்து தமிழ் சினிமா வரவேண்டிய இடத்தில் மட்டும் ASIAN CINEMA என்றும் தமிழில் “ஆசிய சினிமா” என்றும் அச்சடித்திருக்கின்றார்கள் சிங்கள மேலாதிக்க வாதிகளின் விமானத்துறையினர்.

ஆக தமிழ் என்ற சொல்லையே தூக்கி எறியவும் அத்தோடு தமிழனையும் இலங்கை தீவில் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றையுமே நிறுவ நினைக்கும்சிங்கள ஏகாதிபத்தியத்தின் நீண்டகால எண்ணங்களையும் அவர்களது தமிழினத்தையே வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மை என்ற விகிதாசாரத்தை மாற்றி ஒட்டு மொத்த தமிழரையும் ஒடுக்கி அடக்கி ஆள நினைக்கும் சிங்களத்தின் பொருட்களை வாங்கி சுவைப்பதும் அவர்களின் விமானங்களில் பயணிப்பதும் மென்மேலும் சொரணையற்ற தமிழர்கள் என்று எங்களையே நாங்கள் அவர்கள் வாய் மூலமாக உச்சரிக்க வைப்பதாக அல்லவா அமைந்து விடும். எனவே புலம்பெயர் தமிழர்கள் தமிழ் வாழ தமிழன் வாழ வேண்டும் அதுவும் இலங்கை தீவில் வடக்கு கிழக்கில் வாழவேண்டும் . அதற்காகவாவது சிந்தித்து செயற்ப்படுவீர்களாக …!

ஒரு பேப்பருக்காக
– சதா-