தமிழர் மீது சிங்களம் தொடுத்திருக்கும் உளவியல் போர்

64

அனஸ்லி இரட்ணசிங்கம் ஐயா சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவைப் போட்டு அழித்திருந்தார்.

பதிவின் சாரம்சம் இது தான் …

////”நாம் சிலரை இலக்கு வைத்துத் தான் வேலை செய்கின்றோம். அது தான் எமக்குத் தரப்பட்ட வேலையும்”///

இராஜபக்ச தரப்பை நேரடியாக ஆதரிக்கும் அனஸ்லி ஐயா, யாரோ ஒருவருக்கு எதற்கும் அஞ்சவில்லை என்ற தொனியில் போட்ட எதிர்வினை இது.

அவசரப்பட்டுப் பதிவைப் போட்டு பின்னர் அழித்து விட்டார். அவரது சகாக்கள் கொண்டை தெரிந்துவிட்டது என்று சொல்லியிருக்க வேண்டும்.

இதில் இரண்டு உண்மைகள் இருக்கின்றது..

முதலாவது ஒரு மேலிடத்தின் உத்தரவில் இயங்குகின்றார்கள்

இரண்டாவது குழுவாக வேலை செய்கின்றார்கள்.

அனஸ்லி இரட்ணசிங்கம் ஐயாவை அவதானித்து வருவர்களுக்கு யார் மேலிடம் என்பது தெரிந்திருக்கும்.

சரி, என்ன வேலை?

சிங்கள பாசிசத்தின்(பேரினவாதம்) அந்தரங்க திட்டம் அது.

போர் முடிந்தும், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சிங்கள பாசிச ஒடுக்குமுறைக்கு எதிராகப் பற்றியிருக்கும் விடுதலை கருத்தியலை அழிப்பது.

நடந்த ஆயுத போராட்டத்தில் பெரும்பாலான தமிழர்கள் மானசீகமாக இணைந்திருந்தார்கள்.

தாம் மானசீகமாக இணைந்திருந்த போராட்டம் தொடர்பாகக் குற்ற உணர்வை உருவாக்குவதன் மூலம் விடுதலை கருத்தியலிலிருந்து மக்களை அந்நியப்படுத்தலாம்.

அது சாத்தியமானால் தமிழ் சமூகத்தை எதிர்த்துப் போராடச் சிந்திக்காத சமூகமாக்கி விடலாம்.

அப்போது தான் சிங்கள பாசிசம் சுதந்திரத்துக்குப் பின் இந்த தீவில் செய்ய நினைத்ததைச் செய்து முடிக்க முடியும்.

இந்த நோக்கில் தான், பல வடிவங்களில், பல வழிகளில், பலதரப்பட்ட நபர்கள், பல அமைப்புகள் ஊடாக உளவியல் பிரச்சாரம் நடந்து வருகின்றது.

அதிலொன்று விடுதலைப் புலிகள் மீதான விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளைப் பரப்புவது.

இவர்கள் ஆரோக்கியமான விமர்சனங்களையோ, கோட்பாட்டு ஆய்வுகளையோ செய்வதில்லை. அப்படிச் செய்தால் விடுதலை கருத்தியல் மேலும் வலுப்பெற்று விடும்.

சிங்கள பாசிச அதிகார தரப்பால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ களமிறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் இவர்களின் வடிவங்கள் பல.

இலக்கியவாதிகள், பெண்ணியவாதிகள், முற்போக்காளர்கள், கம்யூனிச பிரச்சாகாரர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தினர், இன்னும் பிற.

இவர்கள் ஒரே மாதிரி அல்லாமல் நுணுக்கமான பல வழிகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்- இயக்கப் படுகின்றார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கருத்தியல் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்த நவீன கலைவடிவங்களை அழித்து யானை உண்ட விளாம்பழம் போன்ற பின்நவீனத்துவ கலைவடிவங்களை சமூக மையப்படுத்தச் செயல்பட்டது போன்றது தான் எம்மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த உளவியல் தாக்குதலும்.

இதில் பங்காளர்களாக இருப்பவர்களுக்கு விடயம் தெரிந்து இருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். சிலர் தெளிவுடன் செய்யலாம். சிலர் எந்த தெளிவும் இல்லாமல் செய்யலாம். சிலருக்கு ஏதேனும் நன்மைகள் கிடைக்கலாம். சிலருக்கு ஒன்றுமே கிடைக்காமலும் இருக்கலாம்.

பலர் ஒரு பானை சோற்றில் ஒரு துளி விசம் கலந்துவிடுவது போல் ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்பது போல் இருந்தே விசக்கருத்துக்களை மென்மையாகத் திணிக்கலாம்.

இன்னும் பல உத்திகள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகள் செய்வது மாத்திரமல்ல. ஆவா குழு, பாலியல் வன்முறைகள், இராணுவ மேலாதிக்கம் போதைப் பொருள், சமூகம் வீழ்ச்சியடைவதாக நம்ப வைக்கும் பிரச்சாரங்கள், கிழக்கு தமிழர்களுக்கான குரல், வன்னி தமிழர்களுக்கான குரல், வன்னியில் வாழும் மலையக தமிழர்களுக்கான குரல் என இதன் வடிவங்கள் இன்னும் விரியலாம்.

ஒரே நாட்டில் வாழும் சிங்கள இ தமிழ் மொழி பேசும் சமூகங்களில் நடைபெறும் தற்கொலைக்குச் சொல்லப்படும் காரணங்களை ஆராய்ந்தாலே இந்த விடயம் தொடர்பாகத் தெளிவைப் பெறலாம்.

இதுவரை நினைத்தும் பார்த்திராத காரணங்களுக்காகவெல்லாம் தமிழர்கள் தற்கொலையை நாடுகின்றார்கள்.???!!!!

அனஸ்லி இரட்ணசிங்கம் ஐயா போட்ட பதிவை அழித்த வேகம் தமிழ் பேசும் சமூகம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் சவால்களின் வேர் எங்கிருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட கிடைத்த சந்தர்ப்பம் மாத்திரமே.

தமிழ்ச் சமூகம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமாயின் இந்த உளவியல் பிரச்சாரத்துக்கு எதிரான முறையான எதிர்வினைகள் அவசியமானது.

எய்தவர் யார் என்பது தெரியும். அம்புகளை இனம் காண்பது அவ்வளவு கடினமானது அல்ல. எல்லோரும் ஒரு புள்ளியில் இணைவார்கள்.

புலி எதிர்ப்பு!

ஆனால், சிங்கள பாசிசம் அம்புகளை எங்களிடமிருந்தே உருவாக்கி எடுத்துக் கொள்ளும் எல்லா சாக்கடைகளையும் நாம் தான் அடைத்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றோம்.

நாம் செய்ய வேண்டியது அந்த சாக்கடைகளை எல்லாம் உடைத்து திரந்துவிடும் கருத்தியல் உரையாடல்களை மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பு வடிவமூடாக முன்னெடுப்பதைத் தான்.

Richard