தமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு

95

தமிழ் மொழியியல், சமயம் போன்ற துறைகளில் ஆய்வுகளைச் மேற் கொண்ட புலமையாளர் பேராசிரியர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை நொவெம்பர் முதலாம் திகதி சான்பிரான்சிஸ்கோவில் காலமானார். இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், இந்தியாவில் கேரளா பல்கலைக்கழகம், சுவீடன் உப்சாலா பல்கலைக் கழகம், ஜக்கிய அமெரிக்காவில் வேர்ஜீனியா, அரிசோனாபல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய பேராசிரியர் வேலுப்பிள்ளை மொழியியல்தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

1990 களில் சுவீடன் உப்சாலா பல்கலைக்கழக்கத்தில் அவர் பணியாற்றியபோது பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்களுடன் இணைந்து தமிழ் புத்தமதக் காவியமான மணிமேகலை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார்.

ஈழத்து தமிழ்க் கல்வியாளர்களான பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் பத்மநாதன், பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் சண்முகதாஸ் ஆகியோர் வரிசையில் சமகாலத்தவராக இருந்த பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்களும் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு பெரும் பங்காற்றினார்.
1936ம் ஆண்டு வடமராட்சி புலோலி தெற்கில் பிறந்த பேராசிரியர் வேலுப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றதுடன் , லண்டன் பல்கலைக்கழத்தில் தனது ஆய்வுத்துறை கல்வியை மேற்கொண்டு முவைர் பட்டத்தினையும், பின்னர் இலக்கியத்தில் D Lit பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.