சம காலத்தில் நான் பார்த்து வியந்த இரு தேசிய விடுதலை இனங்கள்

#தமிழீழமும்-குர்தீஷ்யும்

ஆசியாவின் தேசிய இனப்போராட்ட்த்தில் மிக சிக்கலான தேசப்பரப்பையும், சமரசமில்லா போராட்டகளத்தினையும் கண்டிருக்கும் குர்தீஸ் விடுதலை போராளிகள் உலகமயமாக்கலுக்கும், இரட்டைகோபுர தாக்குதலுக்கு பின்பான பயங்கரவாத அரசுகளின் செயல்பாட்டின் நடுவில் தமது தீரமிகு போராட்டத்தினை தக்கவைத்து முன்னகரும் தீர்க்கமான போராட்டக் குழுவாக அறியப்படுகிறது.

இதன் பல்வேறு போர்களங்கள் பல்வேறு நாடுகளிடையே, பல்வேறு ஆதிக்க வடிவத்தினை எதிர்த்து நட்த்தும் போராட்ட வடிவமும், அரசியல் நகர்வுகளும் தேசிய இன போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாக நாங்கள் பார்க்கிறோம்.அதுமட்டுமில்லாது தமிழீழத்தில் நடந்த அதே போராட்ட வழிமுறைகளை குர்தீஷ் இனமும் கையாண்டு இருக்கிறதா என ஆராய வேண்டும்

தமிழீழ விடுதலைப் போராட்டம் உட்பட ஆசிய கண்ட்த்தினை இன்று ஆட்டிப் படைக்கும் தேசிய இனவிடுதலை போராட்ட்த்தினை உலகம் அங்கீகரிக்க வேண்டிய சூழலை உருவாக்கிய இரு பெரும் விடுதலை போராட்டமாகிய தமிழீழமும் குர்திஸ்தானும் வரும் காலங்களில் வரலாற்று பாடமாக உலகினை நாகரீகமடைய செய்யும் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை.

தமக்குள் ஒரு ஓர்மையை

உருவாக்குவதும், சர்வதேசம் பற்றிய புரிதலை, மதிப்பீடுகளை,கோட்பாடுகளை வடிவமைப்பதும், தமக்குள் அங்கீகாரங்களை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாக கருதிய குர்தீஸ் இன போராளிகளுக்கு தமிழினம் தமது மரியாதையை செலுத்துகிறது. வரும் காலத்தில் இரண்டு சுதந்திர நாடுகளும் ஒரு பெரும் உறவை வளர்த்தெடுக்கும் என்பதை நாங்கள் நம்பிக்கையுடனேயே பார்க்கிறோம்.

#இனம்_மீளும்❤

Bala ji