தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலைத்திறன் போட்டி 2016 – பிரித்தானியா

141

தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலைத்திறன் போட்டி 2016

அன்பிற்குரிய பெற்றோரே, ஆசிரியர்களே,

எமது இளைய தலைமுறையினரின் தமிழ்க்கலைத்திறனை மேம்படுத்தவும் தாயகம் பற்றிய அறிவை வளர்;க்கவும் எம் சிறார்களுக்கான கலைத்திறன் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடாத்த உத்தேசித்துள்ளோம்.

எமது தாயக விடுதலைத் தீயை எம் இளைய தலைமுறையினரிடை எடுத்துச் செல்லும் நோக்குடனும், அவர்களிடையே எமது இனத்தின் வரலாறு, தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு பற்றிய அறிவை வளர்க்கும்;; நோக்குடனும் எம்மால் முன்னெடுக்கப்படும் இப்போட்டி நிகழ்வுகளின் மூலம் விடுதலைப் போரில் நிகழ்த்தப்பட்ட தியாகங்கள், மாவீரங்கள் பற்றிய புரிதல்களையும் சிந்தனைகளையும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சிலும் உரமிட விரும்புகின்றோம். இந்த சிந்தனை பல பெற்றோர்களின் கோரிக்கையாக எம்முன்கொணரப்பட்டிருப்பதால் நீங்கள் ஒவ்வொருவரும் பலத்துடன் கைகோர்த்து இப்போட்டி நிகழ்வுகள் சிறப்புடன் நிகழ ஒத்துழைப்பு வழங்குவீர்களென்றே நம்புகின்றோம்.

இந்தக் கலைத்திறன் போட்டி குறுகிய காலத்தில் நடைபெறவேண்டியிருப்பதால்; விரைவுடன் செயற்படுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம். காலத்தைக் கருத்திலெடுத்து இவ்வாண்டு பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி ஆகிய இரண்டையும் முன்னெடுக்கவும் எதிர்காலத்தில் சகல கலைத்திறன் போட்டிகளுக்கும் களம் அமைக்கவும் உள்ளோம் என்பதை அன்புடன் அறியத் தருகின்றோம்.

பேச்சு, கவிதைப் போட்டிகள் ஐந்து வயது தொடக்கம் பத்து வயதுவரை, பதினொரு வயது தொடக்கம் பதினாறு வயதவரை என இருபிரிவுகளாக நடைபெறும். கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் சிறார்களை கீழ்காணும் விதிகளுக்கமைய உடன் விண்ணப்பிக்கும்படி அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

பிரிவு அ – 5 வயது -10 வயது – பேச்சு – மூன்று நிமிடம்
பிரிவு ஆ – 11 வயது -16 வயது – பேச்சு – நான்கு நிமிடம்

போட்டிக்கான விடயங்கள் தமிழீழதாயகம், மண்ணில் நிகழ்ந்த தியாகங்கள், மாவீரங்கள் பற்றியதாக மட்டுமே இருக்க முடியும்.

ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

போட்டியாளர்கள் தாம் போட்டியில் அளிக்கவிருக்கும் கவிதையோ, பேச்சோ எழுத்துருவில் போட்டி நடைபெறும் மண்டபத்திற்கு வந்தவுடன் கையளிக்க வேண்டும்.

நடுவர்களின் தீரப்பே நிறைவானது.

போட்டியில் கலந்து கொள்ளும்போது வயதை உறுதிப்படுத்தும் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் 10-11-2016வரை ஏற்றுக்கொள்ளப்படும். போட்டிகள் 13-11-2016ல் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு எமது அலுவலகத்துடன் அல்லது செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
தொலைபேசி எண் – 02033719313 – பிரித்தானியா

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’