தமிழ்நாடு சட்டசபைக்காக நடந்த கடந்தசில தேர்தல்களில் இலவசங்கள் வழங்குவதற்கான வாக்குறுதிகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. இம்முறைத் தேர்தலில் மது விலக்கு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுபான விற்பனைக்குஎதிராக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடக்கின்றன. 1937-ம் ஆண்டு அப்போதைய காங்கிரசுக் கட்சி முதலமைச்சர் சி இராஜகோபாலாச்சாரி மதுவிலக்கை தமிழ்நாட்டில் அறிமுகம்செய்தார். மது குடிப்பதற்கு அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். பின்னர் 1971-ம்ஆண்டு கலைஞர் கருணாநிதியின் அரசு மீண்டும் மதுவிற்பனையை அனுமதித்தது. இதை எம் ஜி ராமச்சந்திரன் கடுமையாக எதிர்த்தார். அவர் மட்டுமல்ல முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், இராஜாஜி ஆகியோரும் எதிர்த்தனர். அப்போது இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை அனுமதிக்கப் பட்டிருந்தது. 1981-ம் ஆண்டு எம்.ஜீ.ஆர் மதுவிலக்கைக் கொண்டு வந்தார். 1983-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த எம் ஜீஇராமச்சந்திரன் மதுவிற்பனைய அனுமதித்தார். மதுபான விற்பனையை எம் ஜி இராமச்சந்திரன் அரசுடமையாக்கினார். டாஸ்மாக் எனப்படும் Tamil Nadu State Marketing Corporation (Tasmac) உருவாக்கப்பட்டது. எம் ஜீஇராமச்சந்திரனின் சமூகநலத் திட்டங்களுக்குத் தேவையான வருமானம் மது விற்பனை வரிகள் மூலம் பெறப்பட்டது. தற்போது கேரளாவிலும் பிஹாரிலும் மது விலக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. அதனால்மது விலக்கு தமிழ்நாட்டில் கொண்டு வரப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே அதிகஅளவு மதுபான விற்பனை தமிழ்நாட்டில் நடக்கின்றது. தமிழ்நாடு அரசின் வருமானத்தில் காற்பங்கு மதுபான விற்பனை மூலம் கிடைக்கின்றது. தற்போது இந்தியாவிலேயே அதிக அளவுகடன்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கின்றது. இந்த நிலையில் மதுவிலக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை எனச் சொல்வோரும் உண்டு. ஆனால் ஜெயலலிதா தமிழ்நாட்டில் படிப்படியாக மது விலக்கு கொண்டு வரப்படும் என்கின்றார். கருணாநிதி ஒரேயடியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்கின்றார். ஆரம்பத்தில் இருந்தே மது விலக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் மருத்துவர் இராமதாசு ஆகும்.திமுகவையும் அண்ணா திமுகவையும் சேர்ந்த பலர் மது உற்பத்தியால் பெருமளவு பணம் சம்பாதிக்கின்றனர்.
கூட்டணிகள்
என்றுமே இல்லாத அளவு அதிக அளவில் பல்முனைப்போடி இம்முறை தமிழ்நாட்டில் நடக்கின்றது. 1. அதிமுக, 2. திமுக-காங்கிரசு, 3. வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோரைக் கொண்ட மக்கள் நலக் கூட்டணி, 4. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 5.பாட்டாளி மக்கள் கட்சி, 6. பாரதிய ஜனதாக்கட்சி என ஆறுமுனைகளுக்கும் அதிகமான முனைகளைக் கொண்ட போட்டி நடக்கவிருக்கின்றது. எல்லோரும் கூட்டணி என அலைந்து கொண்டிருக்க ஆரம்பத்தில் இருந்தே தனித்துப்போட்டியிடுவேன் என நின்றார் சீமான். விஜயகாந்துடன் கூட்டணி அமைக்கப் பல கட்சிகள்படாத பாடு பட்டன. ஆனால் சீமானுடன் கூட்டணி வைக்க யாரும் பகிரங்க அழைப்பு விட்டதாகத் தெரியவில்லை. ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் வாக்காளர்களிடை சீமானுக்கு என நன்மதிப்பு இருப்பதாகதெரிவிக்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த தேர்தல்களில் மருத்துவார் இராமதாசின் கட்சி ஐந்து விழுக்காட்டுக்கும் மேலானவாக்குகளைத் தொடர்ந்து பெற்று வருகின்றது.அதே அளவு வாக்கு வங்கியைக் கொண்ட விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்கக் காட்டப்பட்ட அக்கறை போல் பாமகாவுடன் அமைக்கக் காட்டப்படவில்லை. பாமக ஒரு சாதிவாதக் கட்சிஎன்ற முத்திரை குத்தப்பட்டிருப்பதால் அதனுடன் கூட்டுச் சேரும் ஒரு கட்சி தலித் மக்களின் வாக்குக்களை இழக்க வேண்டி வரும் எனக்கருதப்படுகின்றது. விஜயகாந்த் கட்சியில் இருந்துசந்திரகுமார் தலைமையில் பல உறுப்பினர்கள்விலகிக் கொண்டனர். வைகோவிடம் இருந்து மாசிலாமணி பிரிந்து சென்றார். மூப்பனார் காங்கிரஸ் ஜி.கே.வாசனிடம் இருந்து பீட்டர் அல்போன்ஸ் கழன்று கொண்டார்.
மனம் மாறும் ஜெயலலிதா
செல்வி ஜெயலலிதா தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கின்றார். ஏப்ரல் 29-ம் திகதிக்கு முன்னர் வேட்பு மனுத் தாக்குதல் செய்யப்பட வேண்டும். அதற்குள் எத்த்னை வேட்பாளர்களை எத்தனை வேட்பாளர்கள் மாற்றப்படப் போகின்றார்களோ? அடிக்கடி கொடநாடுசென்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் ஜெயலலிதாவிற்கு கட்சியில் எல்லா மட்டத்திலும் உள்ளவர்கள் பற்றிய நல்ல மதிப்பீடு இல்லை. அவரைச் சுற்றி இருப்பவர்களையும் அவரால் நம்பமுடியவில்லை. இதனால் அவர் தனியார் உளவுத் துறை அமைப்புக்களை வேட்பாளர் தெரிவுக்குப் பயன்படுத்தினார். அதைச் சரிபார்க்ககாவற்துறையைக் கொண்டு இன்னும் ஒருஉளவு வேலையையும் பார்த்தார். வேட்பாளர்கள் தரப்பில் காவற்துறை உளவாளிகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப் படுகின்றன. இதனால் பலகுற்றங்களைப் புரிந்தோரை ஜெயலலிதா வேட்பாளர்களாக அறிவித்தார். பின்னர் அக்குற்றச் செயல்கள் பற்றி கட்சித் தொண்டர்கள் ஜெயலலிதாவிடம் தெரிவிக்க. அவர் வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு வேட்பாளர் போலி மருத்துவர் என்பது கூட அம்பலமானது. அநேகமாக எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களின் சாதிக்கும் அவரிடம் இருக்கும் பணத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. தமிழ்நாட்டை நிமிர்ந்து நிற்கச் செய்வேன் என ஜெயலலிதா பரப்புரைக் கூட்டங்களில் முழங்க அதற்குப் பதிலளித்த விஜயகாந்த்அம்மா முதலில் தனது அமைச்சர்களை நிமிர்ந்துநிற்க வைக்கட்டும் எனக் கிண்டலடித்தார்.
திமுகவின் எதிர்மறையான விளம்பரங்கள்
சொன்னீங்களே செய்தீங்களா? என்னும் கேள்வியுடன் பல விளமபரங்களை திமுக முன்னெடுத்து வருகின்றது. இவை செல்வி ஜெயலலிதா கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை வலியுறுத்துகின்றன. இந்த விளம்பரங்களுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணா திமுகாவினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
பார்ப்பனியமும் தமிழ்நாட்டுத் தேர்தலும்
ஆங்கிலேயர் ஆண்ட போது அவர்களுடனும் பின்னர் சுதந்திரப் போராட்டம் வலுவடைந்தவுடன் காங்கிரசு இயக்கத்திலும் இணைந்த பார்ப்பனர்கள் காங்கிரசு இயக்கத்தில் இருந்த மற்ற சாதிக்காரர்களைப் புறம் தள்ள அவர்கள் ஒருங்கிணைந்து நீதிக் கட்சியை ஆரம்பித்தனர். தமிழ்நாட்டு மக்கள் தொகையில் நான்கு விழுக்காட்டிலும் குறைந்த பார்ப்பனர்கள் தமிழ்நாடு அரசிலும் அரசியலிலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றனர். முன்னாள் முதல்வர் காமராஜ் காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டினார். அதனால் அவர்கள்சுதந்திராக் கட்சியை உருவாக்கி காங்கிரசுக் கட்சியை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டுவதாகச் சபதம் பூண்டனர். இதற்காக பார்ப்பனர்களைக் கடுமையாக விமர்சித்து வந்ததிமுகாவுடன் சி இராஜகோபாலாச்சாரி தலைமையிலான சுதந்திரக் கட்சியினர் கூட்டணி அமைத்தனர். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்த காமராஜருக்கு எதிராக பார்ப்பனருடன் திமுக கூட்டணி அமைத்ததைப் பார்த்து தந்தைபெரியார் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால்காமராஜருடன் இணைந்து 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தந்தை பெரியார் செயற்பட்டார். ஆனால் காமராஜரும் காங்கிரசுக் கட்சியும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.
அண்ணாத்துரை ஓர் ஆண்டு மட்டும் முதல்வராக இருந்தார். பின்னர் முதல்வராக வந்த கருணாநிதி மதுவிலக்கை இரத்துச் செய்தார்நல்வாய்ப்புச் சீட்டு விற்பனையைக் கொண்டுவந்தார். இவற்றால் சுதந்திராக் கட்சியும் திமுகவும் பிரிந்து கொண்டன. திமுகவினருக்கும் பார்ப்பனருக்கும் இடையிலான உறவு முறிந்து கொண்டது. அகில இந்திய ரீதியில் காங்கிரசுக் கட்சி பிளவு பட்ட போது இந்திரா காங்கிரசுடன் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் இணைந்து கொண்டனர். ஆனால் தமிழ்நாட்டு அரசியலில்அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. திமுக பிளவு பட்டு எம் ஜீ இராமச்சந்திரன் தலைமையில் அண்ணா திமுகா உருவான போது பார்ப்பனர்கள் ஜெயலலிதாவைத் தந்திரமாக அவருடன் இணைய வைத்தனர்.
ஆனால் காஞ்சி பிடாதிபதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையில் பிசகு மூண்டதால் பார்ப்பனர்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையிலான தொடர்பு முறிந்தது. பார்ப்பனர்களின் பக்கம் சேர்வதிலும் பார்க்க தோழி சசிகலாவின் பக்கம் சேர்வதை ஜெயலலிதா விரும்பினார். ஆனாலும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியஆலோசகராக இன்றுவரை துக்ளக் சோ திகழ்கின்றார். தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதாதான் பார்ப்பனர்களின் நெம்புகோலாக இருப்பதற்கு சோவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையிலான உறவு இருக்கின்றது.