இந்த மே மாதம் நடக்க விருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் வெறும் வெத்து வேட்டாக இருந்து கொண்டு சூப்பர் லீடர் போல் துள்ளுபவர் தெலுங்கரும் நடிகருமான விஜயகாந்த் ஆகும். தனது தலைமையில்தான் கூட்டணிஅமைய வேண்டும் என்கிறார். விஜயகாந்துடன் கூட்டணி வைக்க திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சிஆகிய முன்னணிக் கட்சிகள் விருப்பம் கொண்டுள்ளன. இத்தனைக்கும் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி 9 மட்டுமே. விஜயகாந்தின் கட்சியுடன் கூட்டுச் சேர அதிக அக்கறைகாட்டுபவர் கருணாநிதியே. ஆனால் வரவிருக்கும் தேர்தலில் யாரோடு யார் கூட்டுச் சேர விரும்புகிறார்கள் என்பதிலும் பார்க்க யாரோடு யார் சேர்வதை விரும்பவில்லை என்பதுதான் இப்போது அதிகம் செய்திகளில் அடிபடுகின்றது.
தீண்டக் கூடாத கட்சிகள்
கூட்டுச் சேரக் கூடாத கட்சிகளின் பட்டியலில்காங்கிரசுக் கட்சி முதலாம் இடத்திலும் திமுகஇரண்டாம் இடத்திலும் பாரதிய ஜனதாக்கட்சி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. திமுகவுடனும் காங்கிரசுடனும் இணைந்தால்தமிழின உணர்வாளர்களின் வாக்குகளையும் ஊழலுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களின் வாக்குகளையும் இழக்க வேண்டியிருக்கும். பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தால் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களினதும் இசுலாமியர்களினதும் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும். விஜயகாந்தின் கட்சிஇருக்கும் கூட்டணியில் தனது பாட்டாளி மக்கள்கட்சி இருக்க மாட்டாது என்கிறார் மருத்துவர்ராமதாஸ். கூட்டுச் சேரமாட்டோம் என உறுதியுடன் நிற்கும் கட்சியாக ஜெயலலிதாவின் அண்ணா திமுக திகழ்கிறது. ஓரிரு தொகுதிகளைக் கொடுத்து ஒரு கூட்டணி அமைக்க ஜெயா நினைத்தார். அது சரிவரவில்லை.
தனித்து விடப்பட்ட காங்கிரசுக் கட்சி
1967-ம் ஆண்டு தமிழ்நாட்டு ஆட்சிக் கதிரையில் இருந்து தள்ளிவிடப்பட்ட காங்கிரசுக் கட்சி மத்தியில் தனது ஆட்சி அதிகாரத்தால் திமுகவுடனும், அண்ணா திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து சில தொகுதிகளில் வெற்றி பெற்று வந்தது. இவ்விரு கட்சிகளும் மத்திய அரசில் சில அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காக காங்கிரசுடன் போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்தன. ஐக்கியநாடுகள் சபைதான் கச்சதீவை இந்தியாவிடமிருந்து பிடுங்கி இலங்கைக்குக் கொடுத்தது, இலங்கையில் மாகாணசபைக்கு ஆளுனரை மாற்றும் அதிகாரம் உண்டு, கிழக்கு மாகாண முதல்வராக பிள்ளையான் என்னும் ஒரு தமிழர் இருக்கிறார், விடுதலைப் புலிகள் ஒரு போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை, இறுதிப் போரின் போது தமிழர்களைப் பாதுகாக்க நாம் கடும் முயற்ச்சி எடுத்தோம் இப்படிப்பட்ட பொய்களை தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
திசை மாறிய வைக்கோ ஐயா

நான்கு விழுக்காடு வாக்கு வங்கியைக் கொண்ட வைக்கோ ஐயாவின் மறுமலர்ச்சி திமுக பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச்சேர்கின்றது. கடைந்தெடுத்த படு பிற்போக்குவாதிகளும் தமிழின விரோதிகளுமான சுப்பிரமணிய சுவாமியும் சோ இராமசாமியும் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைவதை நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. பாரதிய ஜனதாக் கட்சி விஜயகாந்தின் கட்சிக்குவாக்குகளைப் பிரித்து வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வலு இருக்கிரது என நினைக்கிறது. இதனால் விஜயகாந்தின் கட்சி காங்கிரசுடன் இணையாமல் தம்முடன் இணைய வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சி நினைக்கிறது. காங்கிரசுக் கட்சி திமுகவுடனும் விஜயகாந்துடனும் எப்படியாவது கூட்டணி அமைக்க வேண்டும் என நினைக்கிறது. காங்கிரசு, திமுகபோன்ற பணக்காரக் கட்சிகளுடன் இணைவதுகடன் தொல்லையில் தவிக்கும் விஜயகாந்திற்குநன்மை பயக்கும் ஆனால் திமுகவுடன் இணைவதை விஜயகாந்தின் மனைவி விரும்பவில்லை. காங்கிரசு திமுகவுடனும் விஜயகாந்துடனும் கூட்டணி அமைக்காவிடில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது.
தமிழருவி சனியன்

முன்னாள் காங்கிரசுக் கட்சியின் தலைவரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணியாக இணைந்துள்ளார். சிறந்தபேச்சாளரும் ஓரளவு நேர்மையானவருமான மணியன் பிற்போக்குக் கும்பலுடன் இணைந்தது அவரது ஆதரவாளர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. அவர் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் வைக்கோவை இணைய வைத்தார். அதில் பாட்டாளி மக்கள் கட்சியையும் விஜயகாந்தின் கட்சியையும் புதிய தமிழகம் கட்சியையும் இணைக்க கடும் முயற்சி செய்கின்றார். தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடு வாக்கு வங்கியை மட்டும் கொண்ட பாரதிய ஜனதாக்கட்சிக்கு ஒரு வலுவான கூட்டணி அவசியம். பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்கள் மாறிமாறி விஜயகாந்தையும் அவர் மனைவி பிரேமலதாவையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாக்குப் பிரிப்பு அரசியல்
2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசும் திமுகவும் விஜயகாந்தை தனித்து எல்லா இடங்களிலும் போட்டியிட வைத்து தமக்கு எதிரான வாக்குகளை பிரிக்க வைத்தார்கள் எனப்படுகின்றது. இதனால் காங்கிரசு எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. பணபலமும் கடன் பளுவும் கூட்டணிகளையும் கூடாதவர்களையும் தீர்மானித்தது. இம்முறை தேர்தலில் விஜயகாந்த் தான் 15 தொகுதிகளில் வெற்றிபெறலாம் என நினைக்கிறார். 2014 மே மாதம்நடக்கவிருக்கும் தேர்தலில் தேசிய அளவில் பெரும் வாக்குப் பிரிக்கும் கட்சியாக அரவிந்த்கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திகழவிருக்கிறது. தமிழ்நாடு உட்பட இருபது மாநிலங்களில் இந்தக் கட்சி போட்டி போடவிருக்கிறது. இந்தியாவில் அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் எல்லத் தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கிறது. அத்துடன் காங்கிரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவிருக்கிறது. இது காங்கிரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கச் செயற்படுகின்றதா என்ற ஐயம் கடுமையாக எழுந்துள்ளது.
மோடி அலைமீது மோதல்
சமூக வலைத் தளங்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்த நரேந்திர மோடிக்குஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும் சவாலாக அமைந்துள்ளார். இப்போது மோடியின் பெயரிலும் பார்க்க அரவிந்த்கெஜ்ரிவாலின் பெயர் சமூக வலைத் தளங்களில் அதிகம் அடிபடுகின்றது. ஆம் ஆத்மிகட்சி தமிழ்நாட்டிலும் போட்டியிடவிருக்கின்றது. தமிழ்நாட்டில் அரசியலில் செல்வாக்குச் செலுத்துவதற்கு ஒரு தெலுங்கு நடிகர் அவசியம் எனஆம் ஆத்மியும் உணர்ந்துள்ளது போல் இருக்கின்றது. இதற்கு தெலுங்கரான நடிகர் விசால்அணுகப்பட்டுள்ளார். மோடி நல்லவர் என்று சொல்லி அவர் கட்சியுடன் கூட்டணி அமைக்க கருணாந்தி ஒரு தூண்டில் போட்டுப் பார்த்தார். ஆனால் திமுகவுடன் கூட்டுச் சேர முடியாது என பஜக தெரிவித்துவிட்டது.
தனித்து நிற்கும் ஜெயலலிதா
2014 மே மாதம் நடக்க விருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மாட்டாது அதனால் தான்ஒரு கூட்டணி அரசில் இந்தியாவின் தலைமை அமைச்சராக வரலாம் என நம்பியிருக்கும் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் தனது கட்சி வெற்றி பெற வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார். தனித்து நின்று வெற்றி பெறுவது சிரமம் என்பதால் வைக்கோவினதும் சீமானினதும் ஆதரவை அவர் வேண்டினார்.
ஆனால் வைக்கோவிற்கு ஒரு தொகுதியை மட்டும் ஜெயா கொடுக்க முன்வந்தார். ஆனால் ஐந்து தொகுதி கொடுக்க முன்வந்த பாரதிய ஜனதாக் கட்சியுடன் வைக்கோ இணைந்துவிட்டார். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வங்கியான 26 விழுக்காடு வங்கியைக் கொண்ட ஜெயலலிதாவின் கட்சிக்கு 2011இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. ஆனால் அதன் பின்னர்விஜயகாந்தை பல விதங்களில் அவமானப் படுத்தினார் ஜெயலலிதா. ஜெயலலிதா தனது திமிரால் யாருடனும் கூட்டணி அமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டார். 2014 மே மாதத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் உள்ள சிக்கல் போல இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை.