ஒரு தேசிய இனவிடுதலையில் மிக முக்கியமான அங்கமே அதன் கட்டமைப்புகள் தான். அப்படியான அரச கட்டமைப்புகளே மக்களுக்கும் போராடுகிறவர்களுக்கு உளவியல் பரிமாற்றத்திற்கும், போராட்டத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவும் துணைநிற்கிறது.
மக்களை உள்வாங்காத எந்த புரட்சியும் வெல்லுவதில்லை…அது அடாவடி ஆயுத குழுக்களாகவோ அல்லது உயர்புத்திஜீவிகளின் அரங்க அரசியலாகவும் சுருங்குமே தவிர அது விரிவடைந்து வெல்லாது.
சாகிறவரை தாக்குதல் நடத்துவது தான் இயக்கச்செயல்பாடு என்கிற அதிர்வு மனநிலையிலேயே போராளிகள் இருப்பது உளவியல் ரீதியாக போராட்ட ஓர்மத்தை சிதைக்கவே செய்யும். இதுவே தான் அசாமில் உல்ஃபா இயக்கம் சிதைய முக்கிய காரணம்.
இதன்பிறகே அவர்கள் புலிகளது நடைமுறை அரசுபற்றி அறிந்து அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்கள் அது வேறு கதை…
ஆக போராளிகளின் மனஉறுதிக்கும், மக்களின் நம்பிக்கையை பெறவும் நாம் படைக்க விரும்புகிற புரட்சிக்கான முன்மாதிரியை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இந்த முன்மாதிரி தான் நாளை நம் நாட்டில் நடைமுறைக்கு வரும் என்கிற புரிதல் உருவாக இது வழியமைக்கும்.
இப்படித்தான் தமிழீழ நடைமுறை அரசும் கட்டமைக்கப்பட்டது.
* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு ராேந்துக்கான நிர்வாகப்பிரிவு )
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை அரசியல்பிரிவுக்கு கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம்.
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* * சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (Lodge).
* 1-9 தங்ககம் (Lodge)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள் நிர்வாகப்பிரிவு)
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
*கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் நினைவக நிர்வாகப்பிரிவு
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருது வழங்கல் நிர்வாகப்பிரிவு
என ஒரு நடைமுறை இணை அரசை புலிகள் நடத்தியதால் தான் இலங்கை அரசால் தமது நிர்வாக அலகுகளை தமிழீழத்திற்குள் செயல்படுத்த முடியவில்லை.
இயல்பாகவே ஒரு நிர்வாக இயங்கியலின் Governance system படி இயங்குகிற இடத்தில் அதை அழிக்காமல் அங்கு இன்னொரு இயங்கியலை பொறுக்க முடியாது.
இதை புலிகள் உணர்ந்ததாலேயே இலங்கையின் அரச திணைக்களங்குக்கு மாற்றாக , தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாக அலகுகளை “பதிலீடு” செய்கிறார்கள்.
இதன் அடுத்த படிநிலையாக தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகத்தால் தமிழீழத்திற்கென தனியாக பணம் அச்சிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான் புலிகளின் உச்சம்.
இதுதான் புலிகளை உலகின் மற்றைய புரட்சிக்குழுக்களில் இருந்து வேறுபடுத்தி நிறுத்துகிறது.
மற்றைய புரட்சிக்குழுக்கள் உருவாவதையோ , தனித்தேசங்கள் பிரிவதையோ வல்லாதிக்க நாடுகள் தமது பிராந்திய நல்ன்களுக்குட்பட்டு ஆதரித்தாலும் அந்த நாடுகளின் பொருண்மிய தன்னிறைவிற்கான பிடியை தன்னிடமே வைத்திருக்க விரும்புகிறது.
ஆனால் இந்தக்கட்டுப்பாடுகளை புலிகள் உடைத்தததும் தமிழீழ நடைமுறை அரசை சிதைக்க ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.
இதனால் தான் தமிழீழ நடைமுறை அரசின் தளகர்த்தாக்கள் பலரையும் தனிநபர் தாக்குதல்களாலும் , ஆள ஊடுருவும் படையணியாலும் , கிளைமோர் தாக்குதல்களாலும் சிங்களம் அழித்தது.
1996 களிலிருந்து ஆள ஊடுருவும் படையணியினர் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தாலும் 2001 ம் ஆண்டு தமிழீழ வான்புலிகளின் பாெறுப்பாளர் கேணல் சங்கர் அண்ணை…
கடற்புலிகளின் சிறப்புத்தளபதி லெப் கேணல் கங்கை அமரன்…
உளவுத்துறையின் நிசாம் அண்ணை
தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட நொடர்பக பொறுப்பாளர் மனோ
தமிழீழ நடைமுறை அரசின் இராசதந்திரியும் , அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணை
மற்றுமொரு ராசதந்திரியும் , போரியல் எழுத்தாளருமான தராகி சிவராம் உட்பட தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாக அலகில் பங்குபெற்றியவர்களை சிங்களம் குறிப்பிட்டு அழித்ததும் இதன்காரணமாகத்தான்.
தமிழீழ போக்குவரத்து துறையின் வாகனங்களை அழித்ததும் , தமிழீழ நிர்வாக அலகுகளை தகர்த்ததும் , ஏன் மாவீரர் துயிலுமில்லங்களை கூட சிங்களம் இடித்து தரைமட்டமாக்கியதற்குமான ஒரே காரணம்…
தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாக இயங்கியலின் அலகுகள் இருக்கிறவரைக்கும்ம் , இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிர்வாக இயங்கியலை அங்கு ஒருபோதும் புகுத்தவே முடியாது என்பது தான்.
இப்போது இங்கு வருவோம்…இந்திய ஒன்றியத்தின் அடிப்படை அலகு பஞ்சாயத்துக்கள்…
இரண்டோ மூன்றோ சிறு கிராமங்கள் ஒன்றிணைந்து ஒரு கிராம ஊராட்சியாகவும் அதற்கு அடுத்து வட்டமாகவும் , வருவாய் மாவட்டமாகவும் மாவட்டங்களாகவும் மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டு இந்திய அரசின் நிர்வாக இயங்கியல் செயல்படுத்தப்படுகிறது.
இதில் மிக முக்கியமான அலகு பஞ்சாயத்துக்கள் தான். இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற நாட்டை கடைக்கோடி வரை தனது பிரதிநிதியை நியமித்து அறிக்கைகளை பெற்று நிர்வகிப்பதென்பது சிக்கல் மிகுந்த வேலை.
ஆனால் இதுதான் இந்தியா என்கிற தேசத்தின் அடிப்படை பிடிமானம்.இதில் கல்லெறியாமல் தமிழ்த்தேசியம் பேசுவது காடைபிரியாணிகளுக்கு மட்டுமே பலனளிக்கும்.
இந்தியாவின் நிர்வாக அலகுகளுக்கு மாற்றாக அல்லது “பதிலீடாக” தமிழர் சங்கங்கள் / தமிழர் நிர்வாக அமைப்புகள் என்பன போன்ற அமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்.
தமிழர்களின் உள்ளக அரசியல் , நிர்வாக சிக்கல்களை இந்த அமைப்புகளே நிர்வகிக்கிற வகையில் ஒரு போது உருவாக்கவேண்டும்.
இந்த சங்களுக்கிடையேயான கூட்டியக்கமுறையை கட்டியெழுப்பினால் இது நிச்சயம் பலனளிக்கும்.
இதற்கும் ஒரு உதாரணம் உண்டு….அமெரிக்கப்படைகள் ஆப்கனில் களமிறங்கிய பிறகுதான் ஒன்றை உணர்கிறது..அளவில் சிறிய , நிலவியல் சாதகமற்ற ஆப்கன் படையின் தாக்குதல்கள் பெருமளவு வெற்றியீட்டுவதையும் , பயிற்சியும் அதிநவீன ஆயுதங்கள் இருந்தும் ஒப்பீட்டளவில் அமெரிக்கப்படைகளால் பெரிய வெற்றிகளை பெறமுடியவில்லை.
காரணத்தை ஆராய்கிறபோது ஒருவிடயம் புரிபடுகிறது.
அமெரிக்க இராணுவம் மேலிருந்து கீழாக இயங்குகிறது.…ஆப்கன் ஜிகாதிகள் கீழிருந்து குழுக்களாக இயங்குகிறார்கள்.
அவர்கள் தமது குழுக்களின் வலிமையை , பலம் பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ற இலக்குகளை அடிக்கிறார்கள்.அதற்கான கட்டளைகளை பெற காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை…முழுக்களத்தையும் அறிந்து ஆடுகிற ஆட்டம் ஜிகாதிகளுக்கு அங்கு அவசியப்படவில்லை.
தனக்கு சாதகமான இலக்குகளை தாக்குவதாதென்பது போதும்…இந்த தனித்தனி கண்ணிகளின் கூட்டு இரையாக அமெரிக்கப்படைகள் தானாக வந்து விழுந்தன…ஆப்கன் படைத்தலைமையின் வேலை இந்த கண்ணிக்களின் பிணைப்பை ஒருங்கிணைப்பது ஒன்றுதான்.
கால்மேல் கால்போட்டு ஆட்டிவாறே வெற்றிகளை குவித்தது ஆப்கன் படைகள்.
இந்த வேறுபாடு தான் அமெரிக்க இராணுவத்தின் தோல்விகளுகு காரணம் என உணர்ந்து சிறு சிறு குழுக்களாக அமெரிக்க இராணுவமும் பிரிந்து சாதகமான இலக்குகளை தாக்கியழித்தது.
புலிகளும் இப்படியான குழுக்களின் குழுமுறையையே பின்பற்றினர்.
அரசியல் வழியென்றாலும் கூட தமிழ்நாட்டிலும் இந்த அடிப்படை நிர்வாக அலகுகளை கைப்பற்றாமல் பேசுகிற தமிழ்த்தேசியத்தை இந்தியா மென்று துப்பிவிடும் என்பது தான் கசக்கிற யதார்த்தம்.
இன்னும் விவாதிப்போம்