தமிழ் ‘மென்வலு’ இழக்கப்படுகிறதா ?

95

தமிழ் மக்கள் நிரந்தரமான ஒரு அரசியற்தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் அனுசரணை தேவை என்ற விடயத்தில் ஈழத்தமிழ் அரசியற் தரப்புகளிடையே கருத்து வேறுபாடுநிலவுவதாகத் தெரியவில்லை. ஆனால் அதனைஎவ்வாறு அடைந்துகொள்வது என்பதில்தான்ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துகள் நிலவுகின்றன. இங்கு ஒருசாரார் சர்வதேச தரப்புகளைகாலனித்துவகாலத்து எசமான விசுவாசத்துடன்அணுகி, அவர்களது மனங்கோணாது, தருவதைப்பெற்றுக்கொண்டு படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்களைப் பெயர் குறிப்பிட்டுக் கூறுவதானால் தமிழரசுக்கட்சி, எஸ். ஜே. இமானுவல் அவர்களின்உலகத்தமிழர் பேரவை ஆகியவற்றை இத்தரப்பினராக அடையாளப்படுத்த முடியும். மற்றையசாரார் சர்வதேச நீதியின் அடிப்படையில்,தமிழ்மக்கள் தமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகள்உதவவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுகிறார்கள். இரண்டாவது தரப்பினரதுசெயற்பாடு வினைத்திறனுடன் அமையவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளபோதிலும், ஈழ தேசத்திற்கு சுயநிர்ண்ணய உரிமையுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்வோமானால், இவர்களது நிலைப்பாட்டினையே தமிழ்மக்கள் பின்பற்றவேண்டும் என்பதனை இப்பத்தி வலியுறுத்துகிறது.

இப்போது தமிழ் அரசியலில் அதிகம் பாவிக்கப்பட்டு வரும் சொற்களில் மென்வலு என்றசொல்லும் அடங்கும். ஆங்கிலத்தில் நச்கிஞ் டச்ஞுக்சுஎனக் குறிக்கப்படும் ஒரு சொல்லை `மென்வலு’ என நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்து, அதேஅர்த்தத்துடன் உபயோகிக்கப்படுகிறது. தமிழரசுக்கட்சியும், அதனுடன் இணைந்து செயற்படும் புலம்பெயர் அமைப்புகளும் இச் சொல்லை அதிகம் பாவிப்பதனைக் காணலாம். கடந்ததேர்தல் காலத்தில் சுமந்திரன் தனது Facebook `எம்வலு மென்வலு’ என்று எழுதப்பட்டிருந்த பதாகை ஒன்றைப் பிரசுரித்திருந்தார்.இராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிங்களத்தேசியவாதியான தயான் ஜயதிலக சிறிலங்கா எவ்வாறு தனது மென்வலுவைப் பயன்படுத்தி மேற்குலகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தனது கட்டுரைகளில் எழுதி வந்தார். எண்பதுகளில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு அரசியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய Joseph Nye என்ற அரசியல் விஞ்ஞானியால் இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு நாடு வன்முறை (போர்), பொருளாதாரத் தடை போன்ற நெருக்குவாரங்களைப் பயன்படுத்தாமல் மென்போக்கான வழிகளில் மற்றைய நாடுகளை தமக்கு இசைவாகச் செயற்பட வைப்பதற்கான ஆற்றலை `மென் வலு’ என அவர் அடையாளப்படுத்தினார்.இவ்விடயம் தொடர்பாக நச்கிஞ் டச்ஞுக்சு என்ற தலைப்பில் ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார்.

விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசாங்கத்துடன் படைவலுச்சமநிலையை எட்டியிருந்த நிலையிலையே தேசியத்தலைவர் அவர்களுக்கும் இரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான புரிந்துணர்வுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வலுச் சமநிலையானது வன்வலுவினால் (hard power) ஏற்படுத்தப்பட்டது. இன்றுதமிழ்மக்களின் வன்வலு முற்றாக இழக்கப்பட்ட நிலையிலேயே தமிழரசியலில் மென்வலு பற்றிய கவனம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இன்று ஈழதேசமானது, விடுதலைப்புலிகள் கொண்டிருந்த, வன்வலுவிற்கு ஈடாக, குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு மென்வலுவைக் கொண்டிருக்கவில்லை என்பதனை `மென்வலு’ பற்றி அதிகம் பேசுகிற தமிழ்தரப்புகளே ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் தமிழ்மக்களின் வன்வலுவை பயங்கரவாதமாகக் கருதிய சர்வதேசத் தரப்புகள் தமிழ்மக்களின் மென்வலுவை சாதகமாகப் பார்க்கின்றன என இவர்கள்வாதிடுகிறார்கள். விடுதலைப்புலிகள் படைவலுவைக் கொண்டு சாதிக்காத சில விடயங்களை மென்வலு கொண்டு சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. இதனடிப்படையிலேயேசர்வதேசம் எம்முடைய பக்கமிருக்கிறது என தமிழ்மக்களை நம்பவைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. `வல்லரசுகளை வழைத்தவர்கள் நாங்கள்’என்ற சொல்லாடலும் சுமந்திரனின் தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்தப்பட்டது, இவ்வாறு மக்களை நம்ப வைக்கும் முயற்சிகள் ஒரளவு வெற்றியளித்துள்ளன என்பதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஒரு நாட்டுக்குரியது போன்று நாடற்ற தேசங்களுக்கு மென்வலு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், இன்றைய உலகமயமாக்கலில்புவிசார் அரசியலை மையப்படுத்தி, நாடற்ற தேசங்கள், அவற்றின் அமைவிடம், உலகளாவிய பரம்பல் போன்றவற்றை தமது மென்வலுவாகப் பார்க்க முடியும். இந்தவகையில், தாயகத்தில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் ஒருமித்த சக்தியாக பார்ப்போமானால்,ஈழதேசம் ஒரளவிற்கேனும் மென்வலுவை கொண்டிருக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியும். இவ்விதம் ஈழதேசம் தனகத்தே கொண்டிருக்கும் மென்வலுவினை சரியாகப் பிரயோகிக்கிறதா என்றவினாவிற்கா விடையினை ஒரு கட்டுரையில் அடக்கிவிடமுடியாது. இதுதொடர்பில் கருத்தாடல்கள் தொடரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

பெப்பிரவரி 25ம்திகதி வோசிங்கரன் டி.சி.யில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை United States Institute of Peace என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்க அரசாங்கத்திற்கும் தற்போதையசிறிலங்கா அரசாங்கதிற்கும் இடையிலான உறவினைப் பறைசாற்றும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில், தெற்காசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், முன்னாள் உதவிச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் உட்பட பல இராஜாங்கச் செயலகத்தின் அதிகாரிகளும், கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர்அதுல் கெசாப், வோசிங்கரனுக்கான சிறிலங்காவின் தூதுவர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டு பிரிவினைக்கான வன்முறைகளிலிருந்து விடுபட்டு இலங்கத்தீவானது, பல்லின, பன்மத, பல்கலாச்சார நாடாக, நல்லாட்சி, ஜனநாயகம், அபிவிருத்தி போன்ற விடயங்களில் முன்னோக்கிய பாதையில் செல்வதாக பரப்புரை செய்வதே இவ்வாறான நிகழ்ச்சிகளின் நோக்கம் என்பது இந்நிகழ்ச்சியின் காணொலிப் பதிவுகளைப் பார்க்கும் போது துலாம்பரமாகத் தெரிகிறது. இக்கருத்தரங்கில் மங்கள சமரவீர ஆற்றிய உரையானது, அனைத்துல மட்டத்தில் செயற்படும் அரசுசாரா நிறுவனத்தின் (INGO) திட்ட அதிகாரி ஒருவர், அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனத்திற்கு (development agency) தமதுசெயற்திட்டம் எவ்வாறு வெற்றிகரமாகச் செயற்படுகின்றது என ஒப்புக்கொடுப்பது போன்று அமைந்திருந்தது. அவரது உரையிலும், கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதும், அவர் தெளிவாக எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை. மாறாகஇவை பற்றி பரிசீலிக்கிறோம், இவற்றை கவனத்தில் எடுத்துள்ளோம், ஆலோசனைகளை பெறுவதற்கு குழு அமைத்திருக்கிறோம் என்பதாக மழுப்பலான பதில்களைக் கூறினாரே தவிர நேரடியான பதில்களை வழங்கவில்லை.

இக்கருத்தரங்கில் மங்களவுடனான கேள்வி பதில் பகுதியை நெறிப்படுத்திய Heritage Foundation என்ற அமைப்பைச் சேர்ந்த Lisa Curtis, வடக்கில் இராணுவநீக்கம் மேற்கொள்ளப்படுவது பற்றிக்கேட்டபோது, வடக்கு, கிழக்கு மாகாணசபைகளுக்கு சிவில் ஆளுனர்கள் நியமிக்கப்பட்டமை உட்பட சிறுவிடயங்களை பற்றிக் கூறி படிப்படியாககுறைப்பு நடைபெறுவதாக மங்கள பதிலளித்திருந்தார். இக்கருத்தரங்கானது முற்பயிற்சியுடன்அரங்கேற்றப்பட்ட ஒன்று என்ற கோணத்தில் பார்த்தால், இராணுவ நீக்கம் விடயத்தில் சர்வதேசகவனம் உள்ளது என்பதனையும், இவ்விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகின்றது என்ற தோற்றப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. அதுபோன்றுகாணிகள் விடுவிப்பு விடயத்திலும், வடக்கில் 3,000ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக மங்களகூறியிருந்தார். மீதி காணிவிடுவிப்பு விடயமாகபுனர் வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். காணிவிடுவிப்பு விடயத்தில் இராணுவம் தன்னுடன்ஒத்துழைக்கவில்லை என சுவாமிநாதன் கூறிவருவது வசதியாக மறைக்கப்பட்டுள்ளது.

அரசியற் தீர்வு, ஆட்சிமுறையை மாற்றுதல், சமஸ்டித்தீர்வு போன்ற விடயங்கள் பற்றி மங்கள எந்தக் கருத்தினையும் கூறவில்லை. மாறாக பல்லின சமூகங்களுக்கு ஏற்றமுறையிலான அரசி யலமைப்பை உருவாக்குகிறோம் என்று திரும்பத்திரும்ப ஒரே விடயத்தையே கூறியபடியிருந்தார்.

இவ்வாரம் சிறிலங்காவின் கடன் நிலையை (credit rating) Fitch நிறுவனம் B+ நிலையிலிருந்து BB- படியிறக்கம் செய்திருக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணயத்தின் கடனுதவியை நாடிவருகிறது. இத்தகவல்களை கவனத்தில் எடுப்போமாயின், நிதி நெருக்கடியில் உள்ள சிறிலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்படுவதனை அவதானிக்கலாம். அதே சமயத்தில், தமிழ் அலைந்துழல்வு சமூகத்தினை சிறிலங்காவில் முதலீடு செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பின்னணியில் தமிழ் அரசியலின் மென்வலு இழக்கப்பட்டுவருகிறது என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.