திராவிடத் தீரன் நரகாசுரனுக்கு வீர வணக்கங்கள்

1616

5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராய் வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாய் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிடத் தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர் களைத் தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாயும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடைவாய்ப் பல், பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத உருவாமாக்கினர். தம் அடி வருடிய திராவிடர்களை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப் படுத்திய ஆரியர் பிராமண குலத்தவரால் இக் கதைகளை எல்லா மொழிகளிலும் உலாவ விட்டனர். நம் இன மறவர்களையே நமக்கு எதிரிகளாக்கினர்.

எம் நலனுக்காக போரிட்டு மடிந்த திராவிட அரசன் நரகாசுரனுக்கு எம் வீரவணக்கங்கள்.