திரைகடல் ஓடி திரவியம் தேடிய சமூகம்

3025

ஈழத்து வல்வெட்டித்துறை கடலோடிகள்
அன்னபூரணி 75வது ஆவது பவளவிழா

பெப் 1948இற்கு முன்பு பாகிஸ்தான், இந்தியா,வங்காளம், பர்மா, மலேசியா சூழ்ந்துள்ள இடங்கள். பாக்குநீரிணை, வங்களாவிரிகுடா சூழ்ந்துள்ள கடல்கள் பிரித்தானிய பேரரசின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆக்கிரமிக்கு முன்னர் யாழ்ப்பாணம் இராச்சியம் தனியரசாக இருந்தது. தமிழர்களுக்கு ஒரு நாடு, ஒரு கொடி என்று ஒரு சட்டப்படியான இறைமையுடன் வாழ்ந்தார்கள்.

அப்பொழுதும் அதற்கு முன்பும் வல்வெட்டித்துறை மக்கள் கப்பல் கட்டுதல், கடலோடுதல்,வணிகம் செய்தல், தமிழகத்துடனும் துாரகிழக்காசிய நாடுகளுடனும் நடைபெற்றது.அவர்கள் தங்களை சோழ அரசர்களின், கப்பல்படைவீரர்களின் வரலாற்றின் தொடர்ச்சியாகவே வாழ்கிறார்கள். பண்டைய காலம் முதல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்து சமுத்திரத்தின்
மத்தியில் வல்வெட்டித்துறை இந்தியாவுக்கு அண்மையாக இலங்கையில் அமைந்துள்ள துறைமுக நகரமாகும். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாகிய கருணாகரத்தொண்டமான் ஈழத்தின் வடபகுதிக்கு படையெடுத்து வந்து வெள்ளைப்பரவை முதலான இடங்களிலிருந்து கிடைத்த உப்பை தமிழகத்துக்கு கொண்டு செல்வதற்கு ஏற்றவகையில் தொண்டைமானாற்றை வெட்டிவித்தான்.

அந்த வரலாற்றுப் பின்ணியிலும் வல்வெட்டித்துறை துறைமுகம் சிறப்புப் பெறுகிறது.வல்வெட்டித்துறை துறைமுகத்தில் சிறியரக கப்பல்களும், பெரிய கப்பல்களும் நுÖற்றுக்கணக்கில் நடமாடின. கப்பல் கட்டும் தொழில் பொருட்டு முக்கியத்துவம் பெற்று உச்ச நிலையில் வாழ்ந்தார்கள். வடகிழக்கு பருவக் காற்று காலத்தில் கப்பல்களை காரைநகருடன் அண்டிய ஊர்காவற்துறையில் கட்டி விடுவது வழக்கமாக இருந்தது. அதுமட்டுமன்றி உணவுப் பொருட்களையும் கப்பல்களில் ஊர்காவற்றுறைக்கு கொண்டு செல்வதுண்டு. இதனை மையமாக வைத்து ஒரு நாட்டார் பாடல் தீவுப் பக்கங்களில் வழக்கிலுள்ளது.

‘வல்வெட்டித்துறை பாய்மரக்கப்பலில்
வந்து குவியுது பண்டமடி
வாய் நிறைய திண்டு வெத்திலை போடலாம்
வாருங்கோ கும்மி அடியுங்கடி
வத்தை சலங்கு கட்டுமரம் தோணி
வள்ளங்கள் வந்து குவியுதடி
எத்தனை பண்டங்கள் ஏத்தி வருகுது
எல்லாமே கொள்ளை லாபமடி’

பண்டைய தமிழ் இலக்கியங்களில் காவிரிப் பூம்பட்டினத்துக்கு ஈழத்து உணவுகள் வல்லையிலிருந்து வந்ததென குறிப்புக்கள் உண்டு. இன்றும் பண்டைய தமிழ் மக்களின் வீர விளையாட்டுக்கள் வல்வெட்டித்துறை மண்ணில் அழியாது வாழ்கிறது. சிலம்பாட்டம், மல்யுத்தம், வர்மக்கலை போன்றவை. இன்றும் சண்டை என்றால் வாள் துÖக்கும் குணம் உண்டு. இயற்கையிலேயே ஆயதப்போராட்டக் குணமுடையவர்களாக இருப்பதை ஈழவரலாற்றில் இருந்து அறியலாம்.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த போது அவர்கள் கடலோடி திரவியம் தேடுவதற்கு கண்டி, கோட்டை இராச்சியங்களின் ஆணைக்கு உட்பட்டு இருக்கவில்லை அவர்கள் சுதந்திரப் பறவைகளாக கடலில் பயணித்தனர். கடலும் காற்றும் இவர்கள் தோழர்கள். வானும், நட்சத்திரமும் இவர்கள் வழிகாட்டிகள். மொத்தத்தில் கடல் இவர்களுக்கு குளமாகியது. வல்வெட்டித்துறை முகத்தினுÖடாக யானைகள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சீர்காழி, சிதம்பரம், வேதாரணியம் போன்ற இடங்களிலிருந்து ஆடு, மாடுகள் கொண்டு வரப்பட்டன. இங்கிருந்து சங்கு, சுருட்டு, பாக்கு,
கறுவா, கருவாடு, உப்பு, மீன் போன்றவை கொண்டு செல்லப்பட்டது. மங்கள புறத்திலிருந்து ஓடுகள், பர்மாவிலிருந்து அரிசி, நெல், தேக்கு, முதலியவையும் இந்தியாவிலிருந்து சட்டி, பானை, ஆட்டுக்கல், செங்கல் போன்றவை எடுத்து வரப்பட்டன.

வரலாற்றில் வல்வெட்டித்துறை அழியாப் புகழ் பெற்றுள்ளது. காரணம் இங்குதான் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படும் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் 1954ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ஆம் நாள் பிறந்தார். அவரின் முன்னோர்கள் கடலோடி திரவியம் தேடியவர்கள். 1800களில் வல்வெட்டித்துறை கடலில் பல கப்பல்களோடு வர்த்தக வலயத்தை நிறுவி இந்தியா, பர்மா, மலேசியா, அந்தமான் ஆகிய நாடுகளுடன் வணிகம் நடாத்திய கப்பலோட்டிய தமிழர் பரம்பரையில் வந்தவர் தான் எமது தேசியத் தலைவர். அந்நிய நாட்டு ஆட்சியாளர்களுக்கு பின்பு சிங்கள ஆட்சியாளர்களும் சட்டவிரோதம் என கட்டிப் போட முயன்றபோதும் அடங்காத தமிழர்களாய் அடக்குமுறைக்கும் தடைகளுக்கும் தளராமல் சுதந்திரமாக கடலில் வணிகம் செய்து கடலோடு மோதி விளையாடும் வீரத்தின் பிறப்பிடமாக வாழ்ந்தவர்கள் தேசியத் தலைவரின் முன்னோராவார்கள். கொடை வள்ளல்கள் கோயில்களைக் கட்டினார்கள். அவரின் பூட்டனார் அந்தக் காலத்தில் விவசாயக் காணிகளையும், பெரும் பண்ணைகளையும் சொந்தமாகக் கொண்டவர். அவருக்கு 90 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்தது. இங்கு தான் விடுதலைப்புலிகளுடன் ஸ்ரீலங்கா இராணுவம் இறுதி யுத்தம் செய்தனர். அதிசய நிகழ்வு.

வல்வெட்டித்துறையைப் பற்றி Emerson ennet (1859)
இலங்கையின் காலணித்துச் செயலாளர் நாம் மாலைப்பொழுது வல்வெட்டித்துறை கரையோரமாகச் சென்று அடைந்தோம். அது பருத்தித்துறைக்கு மேற்குப் பக்கமாக 3 மைல் துாரத்திலிருந்தது. அங்கு கணிசமான நிறையுள்ள கப்பல்கள் சரக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் கண்டேன். வல்வெட்டித்துறை மக்கள் தொழில் மீது ஆர்வமுள்ள கடும் உழைப்பாளிகளாக இருப்பதைப் பார்த்தேன். இந்த நகரத்தில் மிகவும் திறமையான முறையில் கப்பல்கள் கட்டுபவர்கள் இருப்பதை இலங்கைத் தீவில் இங்கு தான் கண்டேன். நாங்கள் கிராமத்துக்குள் போனதும் இருட்டத் தொடங்கி விட்டது. இங்கு புளிமரத்துக்கும் பனை மரத்துக்கும் இடையில் ஒரு கிணறு இருந்தது.

அன்றைய காலத்தில் பெண்கள் இருட்டில் செல்வது இல்லை. ஆனால் வல்வெட்டித்துறையிலுள்ள தமிழ்ப் பெண்கள் அந்த நேரத்தில் தண்ணீர் அள்ளச் செல்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. சிங்களப் பெண்களை விட துணிகரமானவர்களாக இருந்தார்கள். தங்கள் தலையில் தண்ணீர்க் குடத்தைச் சுமந்தபடி நிமிர்ந்து கம்பீரமாக அவர்களின் பாரம்பரிய புடவையுடன் வசீகரமானவர்களாக ஒரு சிற்பத்தின் எளிமையான மாதிரி உரு அமைப்பாக இருந்தார்கள்.

முதலியார் சி.இராசநாயகம் (1926)
`யாழ்ப்பாண வரலாற்றில்’ கிரேக்கர்களும், ரோமானியர்களும் இலங்கையின் வடக்கு, வடமேற்கு பகுதியுடன் வணிக உறவுகளை வைத்திருந்தார்கள். சோழ மண்டல கரையோரமக்கள் இலங்கையின் வடபகுதியுடன் பண்டைய காலம் தொடக்கம் மிகவும் நெருக்கமான வர்த்தக தொடர்புகளை வைத்திருந்தார்கள். பலர் அங்கிருந்து இங்கு துறைமுகத்துக்கு வந்து நிலையாக வாழத் தொடங்கினார்கள். விறுவிறுப்பான வர்த்தகம் செய்து ஒரு சமூக குழுவாக வல்வெட்டித்துறை, பருத்தித்துறையில் தம்மை ஆக்கிக் கொண்டார்கள்.

– தொடரும்