தென்மராட்சி மக்களும் , மாம்பழமும், அரிசிமாப்புட்டும்

138

ஒளிப்பதிவு :Kajen Kaanû
இடம் : மீசாலை

தென்மராட்சி மக்களின் அன்றாட காலை உணவு பன்நெடுங்காலமாக பெரும்பாலும் அரிசிமா புட்டும், இடியப்பமும் தான் என்பது வெளிப்படை .

மாம்பழம் மற்றும் பலாப்பழ காலங்களில் என்றுமே குறைவில்லாது ஒவ்வொரு வீடுகளிலும் உணவுத்தேவைக்கு அதிகமாக பழங்கள் இருப்பதும் அவற்றில் குறிப்பாக மாம்பழங்கள் சந்தைகளில் விற்றபனைக்காக பறிக்க முன்னமே அணில், குரங்கு, காகம், கிளி போன்ற விலங்குகள் மரத்திலிருந்துண்ண; அவை பறித்துப் போட்டவற்றை கோழிகள் சென்று கொத்துகின்ற அழகோ அழகு.

“செழுங்குரங்கு தேமாவின் பழங்களை பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்”

தேமா -தேன் சுவையுடைய மாமரம்

என்று குற்றாலக் குறவஞ்சி கூறுவது தென்மராட்சி மாமரங்களையன்றோ என எண்ணத் தோன்றும்.

அரிசிமாப்புட்டுடன் மரத்தில உடன் பழுத்த மாம்பழத்தைப் பறித்து அதனை அழகாக சீவி வைத்து புட்டுடன் சேர்த்துக் குழைத்து உண்ட அனுபவம் எம்மில் எத்தனை பேருக்கு உண்டு ?