தெலுங்கன் கருணாநிதி செய்த கொடும் தமிழின துரோக வரலாறு

647

2008 ஆம் ஆண்டு வரை தமிழ், தமிழினம் என இவ்வுலகிலேயே அதிகம் பேசிய ஒரு மனிதர் இருப்பாரானால் அது கலைஞர் ஒருவராகத்தான் இருக்க முடியும், அப்படி பேசிய கலைஞர் ஈழத்தில் மொத்த தமிழ் இனமும் செத்து மடிந்தாலும், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதே முக்கியமென முடிவெடுத்தார்.

ஈழத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் மக்கள் சாகும் போதும்.. அதுவரை இனத்திற்க்காக கடிதம் மட்டுமே எழுதி வந்தவர் தன் குடும்ப நலனுக்காக.. பதவியை பேரம் பேசி பெற நேரடியாக டெல்லி சென்ற தருணத்தை, இப்போது நினைத்தாலும் இவரை போல ஒரு “இனத்துரோகி” இவ்வுலகிலேயே இன்னொருவர் பிறக்கவே வாய்ப்பில்லை என்று கண்டிப்பாக சொல்லலாம்..

#இருபத்தேழு_வகை_துரோக_பட்டியல்:

1.சிறு சிறு தாக்குதல்களில் சிங்களர்கள் முன்னேறுவதே, இந்திய உதவியுடன்தான் என வெளியில் தெரிந்த நிலையிலும்,அதை கண்டிக்காதது..

2.நேரடியாக தலையிட்டு பேசி தீர்வு காணாமல், எம் பி க்கள் பதவி ராஜினாமா என உறுப்பினர்களிடம் ராஜினாமா கடிதத்தை மட்டும் ஒப்புக்கு வாங்கி வைத்து நாடகமாடியது…

3. அரை நாள் உண்ணாவிரதம்.. அதனை தொடர்ந்து போர் நின்று விட்டது என அறிவித்து, பின் தானே முடித்து கொண்ட நிலையில் போர் இன்னும் நிற்கவில்லையே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு .. மழை நின்றும் துவானம் விடவில்லை என பேசியது.

4.மத்திய அரசே அனுமதித்தும் இங்கு வந்து சேர்ந்த அன்னை பார்வதி அம்மாவை தமிழ்நாட்டில் இருந்து சிகிச்சை பெற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு வைகோ போன்றவர்கள் பெரும்கூட்டமாக விமான நிலையம் சென்றதுதான் காரணம் என கூறியது..

5. 29/01/2009ல் முத்துகுமார் தீக்குளித்து இறந்து போனதும் அந்த உடலை கொளத்தூரிலிருந்து புரசைவாக்க பிரதான சாலை வழியாக கூட எடுத்து செல்ல அனுமதிக்காதது. முத்துகுமாரின் கடைசி ஆசைப்படி என் உடலை கருவியாக வைத்து போராடுங்கள் என்ற கூற்றுப்படி தமிழகமெங்கும் எடுத்து செல்ல வேண்டும். அப்படி போராட்டங்கள் செய்தால் நம் துரோகம் அதிகமாக வெளிப்பட்டுவிடும் என பயந்து அதற்கு அனுமதி மறுத்தது.

6. முத்துகுமார் செய்தி காட்டு தீயாய் தமிழ் உணர்வாளர்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையிலேயே.. தன் மகன் அழகிரியின் பிறந்த நாளை பிரியாணி பொட்டலங்களுடன் தடபுடலாய் கொண்டாட அனுமதித்தது..

7. முத்துக்குமாரை தொடர்ந்து அதே 2009 பிப்ரவரி மாதத்தில் இனத்திற்க்காக தீக்குளித்து இறந்த சிலரை ,குடும்ப சண்டையில் இறந்துவிட்டதாக பொய் செய்திகளை பரப்பி அவர்களின் தியாகத்தை கேவலப்படுத்தியது.

8. முத்துகுமார் இறந்த போது தான் உடலை எடுத்து செல்ல விடவில்லை .. கட்சி சார்பற்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஏற்பாடு செய்த முத்துகுமார் முதலாம் அன்டு நினைவு துண் வைக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து நீதிமன்றம் அலையவிட்டது..

9. இது போன்ற இனம் சார்ந்த பல நிகழ்வுகள் நீதிமன்றத்திற்கு சென்றே அனுமதிபெற்று நடத்தினாலும் , அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பதை அரசு வாடிக்கையாக்கியது..

10. 2009ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரசிலிருந்து பேச வந்து போகும் பிரணாப் முகர்ஜி போன்றவர்களை கூட, ஈழப்போர் நிறுத்தம் குறித்துதான் பேச வந்ததாக கூட்டு சேர்ந்து நாடகமாடியது.

11. ஈழப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்கும் வகையில் சுவரொட்டி அச்சிட தடை. அப்படியே அச்சிட்டு ஓட்ட சென்றாலும் சென்றவர்களை தூக்கி சிறையிலிடுதல்…

12. 2009 ஜனவரியில் செங்கல்பட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்ததோடு முத்துகுமார் மரணத்தினால் மாணவர்கள் மத்தியில் எழுந்த பேரெழுச்சியை தடுக்க கல்வி கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறையளித்தது .

13. உச்சகட்ட போர் நடந்து கொண்டிருக்கும் போதும் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் எனவும், அவர்கள் உடனே ஆயுதங்களை கிழே போட்டு சரணடைய வேண்டும் என சிதம்பரம் கூறியதை அமோதித்து அமைதியாயிருந்தது .

14. லிபியா, எகிப்த்து என பிற நாடுகளின் பதிக்கப்படும், கொல்லப்படும் செய்திகளை ஒளிபரப்பவும் , தன் ஏடுகளில் படமாகவும் போடும் தன் ஊடகம், தமிழின படுகொலைகளைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் ஊடக இருட்டடிப்பு செய்தும் இன்றும் ஈழப்படுகொலைப்பற்றியே விபரம் தெரியாத மக்களாக தமிழர்கள் இருக்க காரணமாயிருப்பது.

15. தமிழினத்தை காங்கிரஸ் அழிக்கிறது அதனுடன் கூட்டு சேர்த்ததால் நீண்ட கால பழி வரும், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் கவலைபடாதிர்கள் என ராமதாஸ் , திருமா, வீரமணி உள்பட பலர் காதுகிழிய சொல்லியும் அதை சிறிதும் கண்டுகொள்ளாமல், இவர்களுக்கெல்லாம் விபரம் பத்தாதாது போல் நினைத்து, நீங்கள் பெரிதாக நினைக்கும் ஈழ விஷயத்தை என் சாணக்கிய புத்தியால் ஒன்றும் இல்லாமல் செய்கிறேன் பார் என திட்டமிட்டு, திரும்ப திரும்ப #சீமான் போன்றவர்களை சிறை தள்ளியதோடு இனத்திற்காக வெகுண்டெழுந்து உண்ணா விரதமிருந்து திருமாவிற்கு இரண்டு சீட் கொடுத்து.. இன்று தன்னைபற்றியே அவர் குறை பேசாத நபராக மாற்றியது .

16. இனி என்ன செய்ய போகிறோம் என்ற குறுவட்டை பார்த்த எந்த ஒரு நபரும் ஏன்? காங்கிரஸ்காரரே கூட தன் கட்சிக்கு ஒட்டு போட மாட்டார் . அப்படிப்பட்ட ஈழ படுகொலையை எடுத்து சொல்லும் குறுவட்டை எங்கும் பரப்பவிடாமல் பலரை சிறை அனுப்பியதோடு , கலைஞர் ஒரு தமிழின கொலைஞர் என்ற குறுவட்டை தயாரித்த நபரையும் சிறைதள்ளியது.

17. ஈழபிரச்சனையில் ஊர் ஊராக சென்று கருணாநிதி , காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இயக்குனர் பாரதிராஜா அலுவலகத்தை முரட்டுத்தனமாக தாக்கி தன்னை எதிர்ப்பவர் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இந்த கதிதான் என பயமுறுத்தியும், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கூடி கண்டன பொதுகூட்டம் நடத்தியும் குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தண்டிக்காதது. அத்தோடு திரைத்துறையினர் தனக்கு சாதகமாக நடப்பவர்களை உக்குவித்தும் எதிராக நடப்பவர்களுக்கு எல்லாவிதமான நெருக்கடிகளையும் தொடர்ந்து கொடுத்துவருவது அல்லது எதிர்த்தவர்களையே தன்வசப்படுத்தி தனக்காக பேச வைப்பது.

18. இனத்திற்கு ஆதரவான போராட்டங்களை ஒடுக்கி கொண்டே .. காங்கிரசோடு கூட்டணி வேண்டம், கூட்டணி வேண்டம் என தலைபாடக அடித்து கூறிய வீரமணி போன்றவர்கள் வாயிலாகவே.. நாம் கருணாநிதியை வெற்றி பெற வைத்தால் தான் இந்தளவுக்காவது போராட முடியும் . ஜெயலலிதா வந்துவிட்டால் வாயை துறந்து இனத்திற்கு ஆதரவாக பேசமுடியாது எனும் ஒரு கூற்றை.. மீண்டும் மீண்டும் தனக்காக பிறரை பேச வைத்து நாடகமாடியது…

19. ஏதோ மீண்டும் ஒரு முறை அதே 2008. அதே புலிகள் கையில் ஈழம்.. அதே சோனியா, அதே இந்தியப்படை உதவி.. அந்த நேரம் பார்த்து இங்கு ஜெயலலிதா ஆட்சி இருக்க போவது போலவும், இவர் போலவே அவரும் துரோகம் செய்வார் என்பது போலவும், அந்த நேரம் போராடுபர்களை, இவரைவிட அதிகமாக முடக்குவார் போலவும் கூறும் இவரின் கூற்றையும் சிலர் நம்பினார்கள். (நம்ப வைத்தார்). இப்படி பேசினால் எப்படி முடியும் என சாணக்கியனுக்கு தெரியும்.😂

20. “கடலில் என்னை தூக்கி போட்டாலும் நான் கட்டுமரமாக தான் மிதப்பேன்” என்று வசனம் பேசிய கருணாநிதி, மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்படும் கொல்லப்படும் நிகழ்வுகளுக்கு, நம் மீனவர்கள் பேராசைகாரர்கள் அதனால் தான் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று பேட்டி கொடுத்தது…

21. #நாம்_தமிழர்_இயக்கத்தினரை சம்மந்தமில்லாமல் ஈ.வி.கே.ஸ்.இவன்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக சிறை தள்ளியும்.. அவர்களை ஈழ படுகொலையின் போது செத்து கொண்டிருந்த மக்களுக்கு இரத்தபொட்டலம் கடத்தியதாக அதே இயக்கத்தை சேர்ந்த (கடத்தினால் என்ன ?) முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையிலடைத்து…

22. தன் சிங்கள இனத்திற்கு விசுவாசமாக தமிழினத்தை கொன்று, மீதியுள்ளோரையும் முள் வேலி முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே, தமிழ் இன தலைமகனின் மகளான #கனிமொழியை அனுப்பி, கைகுலுக்கி பரிசு பெற்று பின், அதே மகளை வைத்தே அதே ராஜபக்சேவுக்கு எதிராக மீனவ நண்பன் போராட்டம் நாடகம் நடத்தியது..😂

23. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்ற பெயரில் காரணமின்றி வருடக்கணக்கில் அடைத்து வைத்துள்ளவர்களின் கோரிக்கையான “ஒன்று விடுவி அல்லது தண்டனை கொடு” என்ற தொடர் போராட்டங்களை ஒடுக்க தமிழரல்லாத ஒரு பிகாரி அதிகாரியை போட்டு உயிர்போக அடித்த பின், அவர்களை வாரி திருச்சியலடைத்து அகதி முகாம்களில் உள்ளவர்களையும் புலி ஆதரவு , கருணாநிதி ஆதரவு என பிரித்து நடந்தும் சூழ்ச்சி செய்து பொய்வழக்குகள் போடுவது…

24. இனத்திற்காக போரடுபவர்களிடம் பணம் கிடையாது. அந்தநிலையிலும் பிச்சை எடுத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து ஒட்டப்படும் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் காவல்துறையை விட்டு தெரு தெருவாக சுற்றி கிழிக்க வைப்பது.. அல்லது மொத்தமாக கைப்பற்றி காவல்நிலையத்தில் போடுவது.. இன்னும் ஒருபடி மேலே போய் தடை செய்த இயக்கத்தை பற்றி பேசினாலோ எழுதினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என 26 / 11 / 2009 தேதி ஒரு பக்க விளம்பரம் போல அவ்வபோது அரசு செலவிலேயே அச்சுறுத்துவது 7 , 8 , பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது…

25. தமிழ் மொழி பேசிய ஒரே காரணத்திற்காக, முள்வேளிக்குள்ளே ஆடு மாடுகளாய் அடைத்து வைத்திருந்தவர்களை திறந்துவிட்டாவது நடத்தினால் பரவாயில்லை என்ற எந்த கூச்ச சுபாவம் இல்லாமல் இனத்துரோக அலை பரவுவதை தடுக்க ஓடிசியா மைதானத்தில் செம்மொழி மாநாடு..

26. ஒக்கனேக்கல், கர்நாடகாவை சேர்ந்தது. என எடியுரப்பாவை எல்லை தாண்டி உள்ளே வந்து போராட அனுமதித்து . கேரளா அமராவதி குறுக்கே அணைகட்டுவதை கண்டித்து போராடிய வைகோவை கேரளா எல்லையே நுழைய விடாமல் தடுத்தது.. கேரளா காவல்துறையை மகிழ்வித்தது…

27. தமிழ் இனத்தையே கொன்று முள்வேலிக்குள் அடைத்து வைத்தவனும், பல கோவில்களைக்கூட இடித்த இராசபக்சே அவனது அமைச்சர்கள் எந்த வித பயமும் இன்றி தமிழக கோவில் குளங்களுக்கு வருவது எதற்கு?

வெறும் 2008 முதல் 2009, முதல் 2010 என வெறும் இரண்டே ஆண்டுகளில் வெளியில் தெரியும்படி நடந்தது இந்த 27 துரோக செயல்கள்.

இவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றிய கருணாநிதி 2008 ஆம் ஆண்டுக்கு முன் செய்த துரோகத்தின் எண்ணிக்கை என்ன? தெரியாமல் இருக்கும் துரோகங்களின் எண்ணிக்கை என்ன??? என்று பட்டியலிட்டால், Spice jet முதலாளிக்கு,

#பட்டியல்_இன்னும்_நீண்டு_கொண்டு_தான்_போகும்…