பிரித்தானியாவின் சட்டதிட்டங்களின் படி, சில சிறுவர்களும், குழந்தைகளும் அவர்கள் யாருக்கு, எங்கே, எப்போது பிறந்தார்கள் என்பதற்கு இணங்க, இயல்பாகவே பிரித்தானியாவின் பிரஜையாகுகிறார்கள். பின்வரும் சந்தர்ப்பங்களின் அவர்கள் அப்படி ஆகுவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன.
- பிறந்த உடனே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள்
- பிரிந்தானியாவில் 1/7/2006 க்கு முன், பிரித்தானிய பிரஜையான தாய்க்கு அல்லது indefinite leave to remain or enter உள்ள தாய்க்கு பிறந்த பிள்ளைகள்
- பிரித்தானியாவில் 1/7/2006 க்கு முன், பிரித்தானிய பிரஜையான தகப்பனுக்கு அல்லது indefinite leave to remain or enter உள்ள தகப்பனுக்கு பிறந்த பிள்ளை, அவர் அந்த பிள்ளையின் தாயை பிள்ளை பிறக்கும் போது மணமுடிந்திருந்தால் அல்லது பின்பு மணமுடிக்கும் தருணத்தில்
- பிரித்தானியாவில் 1/7/2006 அன்று அல்லது அதற்கு பின் பிரித்தானிய பிரஜை யான தாய்க்கு அல்லது தகப்பனுக்கு, அல்லது indefinite leave to remain or enter உள்ள தாய்க்கு அல்லது தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள்
- பிரித்தானியாவின் நீதிமன்ற ஆணைக்கிணங்க அல்லது தத்து எடுக்கும் உடன்படிக்கைக்கு இணங்க தத்து எடுப்பவர்கள் இருவரும் அல்லது ஒருவர் பிரித்தானிய பிரஜையாகவும், இருவரும் பிரித்தானியாவில் வசிப்பவராகவும் இருக்கும் பட்சத்தில், எடுத்த நாளில் இருந்து பிள்ளை பிரித்தானிய பிரஜையாகிறது
- பிரித்தானியாவில் 10/1/2010 அன்று அல்லது அதற்கு பின்பு பிள்ளை பிறக்கும் போது, பிள்ளையின் பெற்றோரில் யாராவது ஒருவர், பிரித்தானிய இராணுவப்பிரிவில் இராணுவப்பிரிவு ACT 2006 அமைய இருந்திருக்கும் பட்சத்தில்
- பிரித்தானியாவுக்கு வெளியே பிறக்கும்பிள்ளையின் (அக்குழந்தை (illegitimate) திருமணம் ஆகாத தாய், தந்தைக்கு பிறந்த குழந்தையாக இருக்கும் பட்சத்தில் சிக்கலாக legitimacy issuesக்கு உட்படலாம், அது பிள்ளை பிறக்கும் நாட்டைப் பொறுத்தது) தாயோ, தகப்பனோ, பிள்ளை பிறக்கும் போது பிரித்தானிய பிரஜையாக (அப்பிரஜையா உரிமை, அவர்களும் வெளிநாட்டில் பிறந்து, அது அவர்களுக்கு அவர்களின் தாய், தந்தையரால் வந்ததாக இல்லாது இருக்க வேண்டும் (otherwise than by descent) இருக்கும் சந்தர்ப்பத்தில்
இப்படி இருக்கும் பிள்ளைகளை எப்படி நாம் பிரித்தானிய பிரஜை என்று உறுதிப்படுத்துவது? Nationality status (NS) விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து ரு162.00 கட்டணத்தோடு, தகுந்தஆதாரங்களோடு உறுதிசெய்து கொள்ளலாம்.
[box type=”info” align=”alignright” class=”” width=”628px”]https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/321804/Form_NS_-_June_2014.pdf[/box]
Home office உறுதிப்படுத்தியிருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் Passport office அது போதாமல் மேலும் உறுதிப்படுத்தலை நாடவேண்டியிருக்கலாம்.
[box type=”info” align=”alignright” class=”” width=”628px”] Get a passport for your child @
https://www.gov.uk/get-a-child-passport/apply-for-your-childs-first-passport[/box]
இப்படி பிறக்கும் போதே பிரித்தானியா பிரஜையாக இருக்கும் சந்தர்ப்பம் இருந்தாலும், இச்சிறுவர்களுக்கான கடவுச்சீட்டை விண்ணப்பிக்கும் போது, அண்மைகாலமாக பெரும் தாமத்துக்குள்ளும், அத்துடன் நிராகரிப்புக்கும் உள்ளாகுகிறார்கள். அதிலும் வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிக்கும் பொழுதும், தாய்,தகப்பன் சிறுபான்மை இனமாக இருக்கும் பொழுதும் மேலும் தாமதம் ஆகுவதாக அறியப்படுகின்றது. ஆதலால் விண்ணப்பிக்கும் போது முழுதகவல்களையும், விரிவாக, விளக்கமாக கொடுப்பது அவசியமாகிறது.
[box type=”info” align=”alignright” class=”” width=”628px”]https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/309596/Guidance_notes_4_14.pdf[/box]
இது தவிர சில சிறுவர்கள் British Nationality Act 1981 இன் கீழ் பிரித்தானிய பிரஜையாக பதிவு செய்ய உரித்துரியவர்களாக [entitlement (a right)] கருதப்படுகிறார்கள், அவர்கள் நல்ல பிரஜைகளாக இருக்கும் இடத்து. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நாம் பிரஜையா உரிமைக்கு உரித்து உடைய பிள்ளைகளை உடனேயே பிரஜையாக பதிவு செய்யாமல், வளரும் வரை காத்திருந்து, பிறகு அவர்கள் ஏதாவது சிக்கலுக்குள், சட்ட பிரச்சனை, காவல்துறை பிரச்சனைகள் என உள்பட்டு அந்த நல்லபிரஜை என்பதை பூர்த்தி செய்ய முடியாமல், பிரித்தானிய பிரஜையாக வரமுடியாதவிடத்து, பலவசதி, வாய்ப்புகளை இழக்கிறார்கள்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகள்பிரித்தானிய பிரஜையாக பதிவு செய்ய உரித்துடையவர்களாக இடமுண்டு.
- பிள்ளை பிரித்தானியாவில் பிறந்து, அப்பிள்ளையின் தாய்க்கோ, தகப்பனுக்கோ அல்லது இருவருக்குமேயே பிற்காலத்தில் நிரந்தர வதிவிடஉரிமை அல்லது பிரித்தானிய பிரஜைஉரிமை இருந்தல் அல்லது அதற்கு பதிவு செய்திருக்கும் நிலையில்
- பிரித்தானியாவில் 1/7/2006 க்கு முன், பிரித்தானிய பிரஜையான தகப்பனுக்கு அல்லது indefinite leave to remain or enter உள்ள தகப்பனுக்கு பிறந்தபிள்ளை, அவர் அந்த பிள்ளையின் தாயை, பிள்ளை பிறக்கும் போது மணமுடிக்காமல் இருக்கும் தருணத்தில்
- பிரித்தானியாவுக்கு வெளியே, 1/7/2006 க்குமுன், பிரித்தானிய பிரஜை யான தகப்பனுக்கு பிறந்தபிள்ளை, அவர் அந்த பிள்ளையின் தாயை, பிள்ளை பிறக்கும் போது மணமுடிக்காமல் இருக்கும் தருணத்தில்
- பிரித்தானியாவில் 13/1/2010 அன்று அல்லது அதற்கு பின்பு பிள்ளை பிறக்கும் போது,பிள்ளையின் பெற்றோரில் யாரவது ஒருவர்,பிரித்தானிய இராணுவப்பிரிவில் இராணுவப் பிரிவு ACT 2006 அமைய இருந்திருக்கும் பட்சத்தில்
- பிரித்தானியாவில் பிறந்த பிள்ளை, பிறந்ததில் இருந்து தொடர்ச்சியாக பத்துவருடங்கள், ஏதாவது ஒருவருடத்தில் 90 நாட்களுக்கு மேல் பிரித்தானியாவை விட்டு வெளியே போகாமல் இருக்கும் இடத்து (it does not matter what the immigration status of the child or parents is)
இதில் அந்த 90 நாள்களுக்கு மேல் என்பதுகுடும்ப நிலை, நோய் போன்ற காரணங்களால் பார்க்கப்படாமல் விடலாம் (waive) என்றாலும்ஒருவருடகாலத்தில் 180 நாளுக்கும், மொத்தமான 10 வருடத்தில் 990 நாட்களுக்கு மேல் போகாமலும் பார்த்து கொள்ள முயல்வார்கள்.
6/4/2015 இல் இருந்து, பிரித்தானியாவின் nationality law வின் (s1(7) British Nationality Act 1981) புதிய வழிமுறையின் கீழ் (s65 of the immigration act 2014 came into force on 6th April 2015. This section inserted sections 4E-4J into the British Nationality Act 1981) பெற்றோர் மணமுடியாமல் 1/7/2006 க்கு முன் பிறந்த மேற் கூறிய2,3 க்குள் அடக்கும் பிள்ளைகளையும் (illegitimate child) உள்வாங்குகிறது.
இப்படி எல்லாம் இருந்தாலும், கடைசியில் secretary of state இன் முடிவில்தான் தங்கியுள்ளது.
அவர்கள் அவர்களின் முடிவை
- பிள்ளையின் நன்நடத்தை (10 வயதும் அதற்கு மேற்பட்டபிள்ளைகளுக்கும் criminal offence)
- பிள்ளையின் எதிர்கால நோக்கு (பிள்ளையின் எதிர்காலம் பிரித்தானியாவை நோக்கித்தான் உள்ளதா)
- பிள்ளையின் வதிவிட உரிமை (கிடைக்க இருக்கும் indefinite leave to remain)
- பிரித்தானியாவில் இருந்த காலம் (13 அல்லது அதற்கு கூடிய வயதுள்ளவர்கள், குறைந்தது இரண்டு வருடங்கள் பிரித்தானியாவில் வசித்திருத்தல்)
- பெற்றோரின் வதிவிட உரிமை
- பிள்ளையின் விருப்பு
- வேறு அசாதாரண நிலைமைகள்
- பெற்றோரின் அறிவுறுத்தல்
6/4/2015 இல் இருந்து registration பதிவதற்கான விண்ணப்பப்பத்திர கட்டணம் ஒருபிள்ளைக்கு – £749. 18வயதிற்கு மேல் £913. அத்தோடு விண்ணப்பமுடிவு வரும் போது பிள்ளைக்கு 18 வயது ஆகும் என்றால் £80 citizenship ceremonyக்கு கட்டவேண்டும். பிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரிப்பதாலும், சின்னகுற்றம் கூட நன்நடத்தையை பாதிக்கும் என்பதாலும், வெள்ளம் வரும் முன் அணைகட்டுவது நல்லது. என்ன 11+ க்கு கொடுக்கும் காசில் பத்தில் ஒரு பங்கு!
சுகி
ஒரு பேப்பருக்காக
Photo Courtesy – nurturingmumsuk.com