இருபத்தியோராம் நுÖற்றாண்டில் லண்டன் மாநகரத்தில் இரவு பத்துமணிக்கு தொடரூந்தில் வந்திறங்கி வீடு நோக்கி நடக்கின்றேன். என்னோடு வந்தவர்களின் அனேகம் பேர், அவர்களை அழைக்க வந்திருக்கும் காரில்ஏறி போய்விட்டார்கள். மிகுதி தொடர்ந்து வந்துகொண்டிருந்தவர்களும் ஒரு 100 யார் நடந்ததும் ஒருவரையும் காணவில்லை.
நல்லகுளிர், நல்ல இருட்டு அத்தோடு மெல்லிய துÖரல். எங்கட வீதிக்குள் திரும்பி நடக்கிறேன். ஒரு குருவியும் இல்லை. கொஞ்சத்துÖரம் நடந்ததும் திருப்பி பார்கிறேன். 15 அடிபின்னால் ஒரு 25 வயது மதிக்கக்கூடிய ஆண்மகன் வந்து கொண்டிருக்கிறான். எனக்கு மெதுவாக நடந்து அவனை முந்த விடும் ஐடியாவை விட, நான் வேகமாக நடந்து இடைவெளியைக் கூட்டுவது என்று, வேகமாக நடக்கிறேன், அவன்நீண்ட கால்களோடு இருந்தமையால் இடைவெளி கூடியது போல் தெரியவில்லை. இதயம்என்னை அறியாமலே கொஞ்சம் படபடத்தது. அறிவு கைத்தொலை பேசியை எடுத்து கையில்வைத்திருக்கச் சொன்னது. அத்தோடு அது வினேதமாக சிந்தித்தது. நான் அவனைப் பார்த்து வேகமாக நடப்பது போல, அவனுக்கு பின்னால் வருபவரைப் பார்த்து அவன் வேகமாக நடக்கின்றானோ? இப்படி எந்தனை பேர் ஒருவர் பின் ஒருவராக, ஒருவருக்கு பயந்துமற்றவர் என்று வேகமாக நடக்கிறார்களோ?என் நினைப்பு எனக்கு சிரிப்பை வரவழைத்ததோடு, இத்தனை வசதிகள், காவல்துறை பாதுகாப்புகள் உள்ள நாட்டில் இந்தவயதில் இப்படி பயந்து நடப்பதையும், என் இளமைகாலத்தில் வசதிகள் தொழில்நுட்பங்கள் குறைந்த எமது நாட்டில், புலிகள் ஆட்சியில், நான் நிம்மதியாக நடந்ததையும், திரிந்ததையும் சம்பந்தம் இல்லாமல் எண்ணிப்பார்த்து வியந்தது.
அது ஒரு பொற்காலம். எமது பொடியள், இராணுவத்தை இராணுவமுகாமுக்குள் முடங்கிவைத்திருந்த காலம். முகாமுக்கு அண்மையில், மக்கள் குடியிருப்பு தொடங்கமுதல் உள்ளவெளியில் சென்றி போட்டு காவல் இருந்தகாலம், குளிர் என்ன, மழை என்ன, விடியவிடிய காவல் இருப்பார்கள். இடை இடையே இராணுவம் முன்னேற எத்தெனிக்கும், பலமான துப்பாக்கி சத்தங்கள் கேட்கும், சென்ரிக்கு நிக்கிறபெடியளோட ஆமி சண்டைபிடிக்குது என்றுமக்கள், ஆமி வெல்லக்கூடாது என்ற ஏக்கத்தோடு அங்கலாய்ப்பார்கள்.
அப்போது நான் பாடசாலை போகும் வயது. அப்பிடியிருந்தும் கைக்குழந்தையை நினைக்கும்தாய் போல, நல்ல காத்து, மழை, குளிர் என்றால், ஜயோ சென்றியில் நிற்கும் எங்கட பெடியள் என்று அவர்களைப்பற்றி மக்கள் நினைக்காமல் இருக்க மாட்டார்கள். இரவு இரண்டாவது காட்சி முடிந்து வீடுவரும் போது சரி, இரவில் படுக்கும் போது சரி, எமது பாதுகாப்பு பற்றி எள்ளளவேனும் கவலை கொள்ளாத காலம் `பொழுது சாயும் நேரம் இது புலிகள் வாழும் தேசம்’ என்ற பாடல் வரியை கேட்கும் போது நினைவில் வரும் காலம்.
பிறகு பெடியள் மக்களோடு மக்களாக இருந்தகாலம். அப்போது இராணுவத்தை நேரடியாக சந்திக்க நேர்ந்தால் ஒரு அருவருப்பு பிராணியை பார்த்தது போல உணர்வு எனக்கு, இந்திய இராணுவம் ஊர்ரோந்து வந்த போது ஓடிப்போய் அம்மாவின் புடவையை சுற்றிக் கொண்டு, முகத்திற்கு தேங்காய் எண்ணையை பூசிக்கொண்டது இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. பிறகு கொழுப்பு போகும் வழியில் இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிய ஒட்டு படைக்குழுக்கள் நினைவில் உள்ளது, சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏறும் போது அவர்களும் ஒருக்கால் மக்களை நோட்டம் விடுவது வழக்கம். அதிலும் ஒட்டுபடையை சேர்ந்த ஒருவன் 16வயதினிலே வரும்பரட்டை (ரஜனி) போல தலையை குனிந்து கண்ணை உயர்ந்தி ஒரு வில்லத்தனமானபார்வையில், கொடுப்புக்குள் சிரிப்போடு பார்த்ததும் அவன் பார்வையை தவிர்ப்பதற்காக நான் மற்ற பக்கம் திரும்பி நிற்க அவன் சுற்றி வந்து அந்த பக்கம் நின்ற போது, இதயம் இன்று மாதிரித்தான் பயத்தில் படபடத்தது. அவனும் அவன் பார்வையும் நாசமாக போக.
அதன் பிறகு கொழுப்பில் நாங்கள் மூன்று தமிழ் பெட்டைகள் ஒன்றாக போன போது, எம்மை தாண்டி வேகம் குறைந்த இராணுவ வண்டியில் இருந்த இராணுவத்தை சேர்ந்த ஒருவன் வாயை குவித்து சீக்காய் போன்றதொருஒலி எழுப்பி, விரல் அசைந்த கூப்பிட்டதும். சப்தநாடியும் ஒடுங்கி எனக்கு பக்கத்தில் இருந்தவள் (அவர்கள் இரண்டு பேரும் கொழும்பு பெட்டைகள், எனக்கோ யாழ்பாண ஐடி காட்)உன்னைத்தான் கூப்பிடுகின்றான் போலஎன்று கிசுகிசுத்ததும், அங்கை பார்க்காதை,வேகமாக நட, கவனித்ததாக காட்டிக்கொள்ளாதே என்று நான் முணுமுணுத்து கடிந்து கொண்டேன். அந்த பக்கமாக வந்த பஸ்சில் எங்கு போகுது என்றும் பார்க்காது, அவசரமாக ஏறிக்கொண்டோம். என் வாழ்வில் என் இதயத்துடிப்பை அவ்வளவு பலமாக அதற்கு பின் நான் இன்று வரை கேட்டதில்லை.
இசைப்பிரியாவின் சகோதரி பேட்டியின் போது, இராணுவத்தினரிடம் பிடிபடக்கூடாது என்று விரும்பியதாகவும், உயிரோடு அவர்களிடம் பிடிபடுவதை நினைந்து மிகவும் பயந்ததாகவும் கூறினார். சாதாரண குடிமகளான எனக்கே இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் நடந்தது, ( போட்ட குண்டுகள், பீரங்கி அடிகளைவிட) வாழ்கையின் மிக பயந்த நொடிகளாக நினைவில் உள்ளபோது, இசைப்பிரியாவின் நிலைமை எப்பிடி இருந்திருக்கும். இப்படிதமிழ் பெண்கள் இருப்பதற்கும், நினைப்பதற்கும் இலங்கை இராணுவம் வெட்கித்தலை குனிய வேண்டும்.
எமது பெண்போராளிகள், பெண்ணியம் பற்றி அதிகமாக பேசாமல், பெண்கள் சுதந்திரமாக சிந்திக்கவும், பயமில்லாது எந்த நேரத்திலும் நடமாடவும், சமூகத்தில் சரிசமமாக, தன்னம்பிக்கையுடன் வாழவும் நடைமுறையில் வழிவகுத்துக் கொடுத்தவர்கள். ஆனால் இப்போது பெண்ணியம்பற்றி அதிகமாகப் பேசும் எம்மவர்களும், முன்பு பெண் போராளிகள் பற்றிஅதிகமாக விமர்சித்த வெளிநாட்டில் வாழும் பெண்ணியவாதிகளும், சமூகத்தில் உள்ளதமிழ் பெண்களுக்கு அந்தளவுக்கு செய்யமுடியாவிட்டாலும் முடிந்தளவுக்காவது முயற்சிக்கிறார்களா? மேலை நாட்டு கலை, கலாச்சாரத்தை கடைப்பிடித்தால் அதுதான் பெண்ணியம் என்று தவறாக விளங்கிக் கொள்ளபவர்களும் எம்மிடையே உண்டு.
அங்கு நடக்கும் எம் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளையும், காணாமல் போனவர்கள், போகின்றவர்கள் போன்றவிடையங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது முக்கியம்.
இதன் மூலம் எம் தமிழ் பெண்களின் நினைவழியா நினைவுகளில் உள்ள இதைவிட கொடுமையான நினைவுகள் ஏற்படாது தடுக்கலாம். திரும்பி பார்கிறேன். பின்னால் வந்தவனை காணவில்லை, ஆனால் வீடுவந்து விட்ட நிம்மதி.