இன்று காலை இளம் பெண் ஒருவரின் உயிரைக்காக்க தன்னுயிர் நீத்த ஆப்தீன் ரிஸ்வான் என்பவரின் சடலம் சுமார் 7 மணித்தியால தேடுதலின் பின்னர் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது
மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த 23 வயது இளம் பெண் ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ரிஸ்வான் அதே கணம் நீரினுள் மூழ்கி காணாமல் போயிருந்தார் என்பதும் குறித்த பெண் பொலிசார் ஒருவரின் முயற்சியினால் மீட்கப்பட்டு உயிர் மீண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வரும் இக்காலகட்டங்களில்,ஒவ்வொருத்தருக்கும் தம் குடும்ப சமூக பொறுப்புக்களை நினைத்து பார்த்து கொள்ளுதல் வேண்டும்,சிக்கலான தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்றுவதற்கு உயிரை பயணம் வைத்தல் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல,தவறுதலான விபத்துக்களின் போது காப்பாற்றுதல் ஏற்ககூடியது.இவ்வாறான தற்கொலை முயற்சிகளில் காப்பாற்ற உங்கள் உயிரை பயணம் வைக்காதீர்கள்,உங்களுக்கும் குடும்பம் உண்டு.உங்களால் காப்பற்றப்படும் இவர்கள் நாளை திரும்பவும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடமாட்டர்கள் என்பதுக்கு உத்தரவில்லை.எனவே உங்களின் பெறுமதியான உயிரை பணயம் வைக்க முதல் அதற்கு பொருத்தமானதா என்பதை தற்கொலை முயற்சி செய்பவர்களும்,அவர்களை உயிரை காப்பற்ற தம்மை பணயம்வைப்பவர்களும் சிந்தித்து பார்த்துகொள்ளுங்கள்