படிக்காத மேதைகளின் பாதையை சிதைக்கும் சட்டம் படித்த முட்டாள்கள்

164

சட்டம் படித்தால் மட்டுமோ அல்லது பெரிய பல்கலைக்கழகங்கங்களில் பயின்றால் மட்டுமோ உங்களுக்கு தமிழ் தேசியக்கருத்துக்களில், தமிழீழ விடுதலைப்போராட்டம் சம்பந்தமான கருத்துக்களில் கீறல்கள் விழாமல், திரிபுகள் விழாமல், பாதகத்தை உருவாக்காமல், மக்கள் மனங்களில் கடினங்களை பாய்ச்சாமல், கருத்துக்களை உங்களால் சொல்லமுடியும் என்று எவரும் தப்பு கணக்கு போடவேண்டாம். தமிழ்தேசியம் என்பது ஒரு வாழ்க்கை முறை, தமிழ் தேசிய உணர்வு ஆன்மாவில் கலக்காமல் நீங்கள் அதற்கான பதில்களை சரியாக வழங்க முடியாது.

விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்துக்களை சொல்வதில் உங்களுக்கு அறிவீனம் இருக்குமாயின், அதில் போதிய தெளிவின்மை இருக்குமாயின் கேள்விகளை முதலிலேயே பெற்று, அதனை சரியாக உள்வாங்கி, தயாராகி பதிலளிக்க பழகுவது நல்லது.

தற்காலத்தில் விடுதலைப்போராட்டம்

தொடர்பான கருத்துக்களில் கீறல்களை, திரிபுகளை ஏற்ப்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறிய சுமந்திரன், காண்டீபன், விக்கினேஸ்வரன், சர்வேஸ்வரன் இன்னும் இந்த வகையில் கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உங்களுக்கு போதிய விளக்கங்களை உள்வாங்கி கருத்துக்களை சொல்ல முடியவில்லையாயின், நீங்கள் செய்யும் அரசியலுடன் சம்பந்தப்பட்ட கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக்கொள்வது சாலச்சிறந்ததாகும்.

மைக்கல் பிரான்சிஸ்