நம் இயற்கை சித்த மருத்துவத்திலும், நம் ஆயுர்வேதத்திலும் அமிர்தம் என்பதற்கு நிகரானது ‘பானகம்’..!
பானகம் என்பது பனங்கருப்பட்டி, எலுமிச்சம் பழம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு,சீரகம் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீர் ஆகாரம்.
இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். கிராமப்புறங்களில் இது மிகவும் பிரபலம். குறிப்பாக, நம் கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டும் இன்றி பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம்.
இனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம், கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் அப்போதே போக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால்தானோ என்னவோ, இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது.
மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம் என்பது நாம் வருத்தப் பட வேண்டிய நிலையில் இதுவும் ஒன்று
பானகம் உட்கொள்ளுவோருக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளால் கெட்ட வைரஸ்களே கதி கலங்கி ஓடும் என்பதை என்றுமே மறந்து விடாதீர்கள்.
பானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டும் இல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் இயற்கை சித்த மருத்துவர்கள்.
பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதைக் குடித்த உடன் உடனடி ஆற்றல் கிடைக்கிறது.
இதன் மகத்துவம் தெரிந்தால், நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவச நிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டீஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது.
பானகம் தயாரித்தலுக்கு தேவையான பொருள்கள்:
எலுமிச்சைச் சாறு – ஒரு பழம்
சுத்தமான பனங்கருப்பட்டி
தண்ணீர்
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை
சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
சீரகம் பொடி – ஒரு சிட்டிகை
செய்முறை:
பனங்கருப்பட்டியை தட்டி பொடியாக்கிக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பனங்கருப்பட்டி முழுமையாகக் கரைந்ததும் இதனுடன் ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி, சீரகம் மற்றும் குறைந்த அளவு மிளகுத் தூள் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் மண்பானையில் வைத்து இருந்து பருகலாம்.
மருத்துவப் பயன்கள்:
————————————–
ரத்தசோகை நீங்கும்.
பசியை உண்டாக்கும்.
குமட்டல் பிரச்னை போக்கும்.
ஜீரணத்தை அதிகரிக்கும். நாக்கு வறட்சியைப் போக்கும்.
கோடை வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும்,களைப்பையும் நீக்கும்.
வியர்க்குரு போக்கும்.
உடல் சூட்டை தணிக்கும்.
உணவே மருந்து.
இதை விட்டு விட்டு நாம் சாக்கிய பௌத்த மேசானியர்களால் கூல் டிரிங்க்ஸ் அடிமை ஆகலாமா என் மக்களே.
புத்துணர்வுக்கு நம் பாரம்பரிய பானகம்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
தவறாமல் பகிர்வோம்.
பாரம்பரியத்தை மீட்டு எடுப்போம்.