பாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்

164

உலக சுகாதார நிறுவனத்தை
தங்கள் நாட்டை விட்டு வெளியேற சொன்ன ஆப்பிரிக்க நாட்டு அதிபர்கள்

கொரோன பெருந்தொற்று உலக நாடுகளை பெரும் அச்சத்தில் மூழ்கடித்த நிலையில், இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை உலக நாடுகளுக்கு வழங்கி வருகிறது. கொரோனாவிற்கு எப்படியாவது ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து, தன்னை ஒரு வல்லாதிக்கமாக காட்டிக்கொள்ளும் முனைப்பில் உலக நாடுகள் போட்டி போட்டுகொண்டு இருக்கிறது. பில் கேட்சின் தன்னார்வ தொண்டு நிறுவனம் பல பன்னாட்டு நிறுவங்களுடன் இணைந்து தடுப்பூசி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, சில நாட்டு தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உலக சுகாதார மையம், பில் கேட்ஸ் மற்றும் பெரும் மருந்து நிறுவனங்கள் இணைந்து, இந்த கொரோனா நோயை வைத்து மக்களை அச்சுறுத்தி எல்லோரையும் கட்டாய தடுப்பூசிக்கு தயார் செய்கிறார்கள் என்ற குற்றச்சாற்றை வைத்து வருகிறார்கள், அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளான புருண்டி, மடகாஸ்கர், தன்சானியா நாடுகள் எங்களின் பாரம்பரிய இயற்கை மருத்துவத்தை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த கூடாதென்று உலக சுகாதார மையம் தடுப்பதாக குற்றம் சாட்டுகிறது, மடகாஸ்கர் அதிபர் ஒரு மூலிகை மருந்தை ஆப்ரிக்க நாடுகளுக்கு அறிமுகம் செய்தார், இந்த மருந்தை போலியாக சித்தரிக்க அந்த நாட்டு அதிகரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உலக சுகாதார மையம் என்று அதிபர் குற்றஞ்சாட்டுகிறார். பில் கேட்ஸ் தனது தடுப்பூசியை ஆப்ரிக்க நாடுகளில் பரிசோதனை செய்ய போவதாக ஊடகங்கள் வெளிவந்த செய்திகளால் சினம் கொண்ட ஆப்ரிக்க மக்கள் எங்கள் நாடு என்ன பரிசோதனை கூடமா ஏன் உங்கள் நாட்டில் இந்த பரிசோதனையை செய்யவில்லை என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டார்கள்.

புருண்டி, மடகாஸ்கர், தன்சானியா இந்த மூன்று நாடுகளும் உலக சுகாதார மையத்தை கடுமையாக விமர்சிக்க துவங்கிவிட்டது. அதன் அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியே போக சொல்ல ஆரம்பித்துவிட்டது.

நமது நாட்டிலும் பல சித்த மருத்துவர்கள் கொரோனவிற்கு மருந்து இருக்கிறது, நமது பாரம்பரிய மருத்துவத்தில் இதை குணப்படுத்த முடியும் என்று பேசி வருகிறார்கள், தமிழக அரசு கபசுர குடிநீரை பரிந்துரை செய்துள்ளது, ஆனாலும் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் பாரம்பரிய மருத்துவத்தை கொண்டு இந்த நோயை குணப்படுத்த முடியாது என்ற உலக சுகாதர மையத்தின் அறிவுரையை பின்பற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.