பாரிஸ் நகரத் தாக்குதலின் பின்னால்..

72

பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக்கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும் என்ற வேளையில் பரிஸில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல்கள் உலகத்தை உலுப்பியுள்ளது. ஐரோப்பாவில் ஐந்து கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். இது ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் வெற்றி பெறுவதற்கு அல்லா வழிசெய்வார் என்பதைக் காட்டுகின்றது என முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி சொன்னது நினைவிற்கு வருகின்றது.

சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஈராக்கின் மேற்கிலும் வடக்கிலும் உள்ள நகரங்களில் செயற்பட்டு வந்த ஐ.எஸ் என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ் என்றும் ஐ.எஸ்.ஐ எல் என்றும் அழைக்கப்பட்டு வந்த இஸ்லாமிய அரசு அமைப்பு தனது செயற்பாட்டை உலகெங்கும் விரிவு படுத்தப் போகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல பாகங்களிலும் இருந்து30,000 போராளிகளைத் திரட்டிய ஐ.எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது தனது போராளிகளை உலகெங்கும் அனுப்பித் தாக்குதல் செய்ய முடியும்.

ஒட்டுக்கேட்பவர்களை ஏமாற்றினார்கள்

பல்வேறு உளவுத் துறையினர் தம்மை ஒட்டுக்கேட்பார்கள் என்பதை உணர்ந்த ஐ எஸ் தாக்குதலாளிகள் தமது தொடர்பாடல்களை சோனியின் PlayStation 4 ஊடாக தமது தாக்குதல் திட்டங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். தமக்குஎதிரான உளவாளிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு அவர்கள் புதுப் புது முறைகளைக் கையாள்கின்றார்கள்.

அமெரிக்கா இரண்டு ஆண்டுகளாக ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றது இரசியா தாக்குதல் தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் இரசிய விமானம் எகிப்தில் விழுத்தப்பட்டது எப்படி ? இது அமெரிக்காவின் சதியா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சி.எஸ் போராளிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் செய்யும் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரத்தில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்ஆரம்பித்தது. அம்ஸ்ரேடம் நகரில் இருந்து பரிஸுக்குச் செல்லும் தொடரூந்தில் ஐ.எஸ் போராளி என ஐயப் படும் ஒருவர் குண்டு வைத்ததால் அவர்களுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் ஆரம்பித்தது.

பரிசின் பயங்கர இரவு

[tie_list type=”plus”]

  • 9:20 – கால்பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் – ஒருவர் கொலை.
  • 9:25 – உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு-15 பேர் கொலை.
  • 9:30 – கால் பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் 9 பேர் கொலை.
  • 9:32 – உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொலை.
  • 9:36 – உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொலை.
  • 9:40 – உணவகம் ஒன்றில் தற்கொடைத் தாக்குதல். காயம் மட்டும்.
  • 9 : 40 – இசை அரங்கில் துப்பாக்கிச் சூடும் தற்கொடைத் தாக்குதலும் 89 பேர் கொலை.
  • 9:53 – கால்பந்தட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் காயம் மட்டுமே
    [/tie_list]

மொத்தமாக இருபது பேர் தாக்குதலில் சம்பத்தப் பட்டுள்ளார்கள் என நம்பப்படுகின்றது. தாக்குதலாளிகள் எவரும் இதுவரை உயிருடன் பிடிபடாதது அவர்களுக்கு வெற்றியே.தாக்குதலில் மூன்று சகோதரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என நம்பப்படுகின்றது.

பிரெஞ்சு அதிபரை இலக்கு வைத்தனர்.

1988-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகர் Lockerbieஇல் அமெரிக்க விமானம் 258 பயணிகளுடன் குண்டு வெடிப்பால் தகர்க்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 3000 பேர்கொல்லப்பட்டனர். 2004-ம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நான்கு தொடரூந்துக்களில் ஒரே நேரத்தில் நடந்த குண்டு வெடிப்புக்களில் 191 பேர் கொல்லப்பட்டு 1841பேர் காயப்பட்டனர். 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் இலண்டனில் நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 42 பேர் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் மூவர் கொல்லப்பட்டனர்.இவை எல்லாவற்றிலும் பார்க்க பரிஸில் நடந்ததாக்குதல் மக்களை அதிக அச்சமடைய வைத்துள்ளது. பிரெஞ்சு அதிபர் இருந்த உதைபந்தாட்ட மைதானத்தினுள் தாக்குதல் செய்ய எடுத்த முயற்சி தீவிரவாதிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர் என எண்ணத் தோன்றுகின்றது. மூன்று தடவைகள் மைதானத்திற்குள் நுழையமுயன்ற தற்கொலையாளர்கள் தடுக்கப்பட்டதால் வாசலில் வைத்தே அவர்கள் தமது பட்டிக்குண்டுகளை வெடிக்க வைத்தனர். மைதானத்தினில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருந்த படியால் குண்டு வைப்பவர்களால் உள்ளே செல்ல முடியாமல் போனது. அதனால் அவர்கள்வெளியில் குண்டை வெடிக்க வைத்தனர். இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times பத்திரிகையில் 2007-ம் இலண்டலில் செய்யப் பட்ட குண்டுவெடிப்பின் போது இலண்டன் மக்கள் கலவரமடையாமல் இருந்ததாகவும் ஆனால் பரிஸ் மக்கள் கலவரமடைந்துள்ளனர்என்றும் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் பரிஸில் இருந்து எழுதிய கட்டுரையாளர் பரிஸ் ஒரு உன்னதமான நகர் என்றும் தானும் தனது பிள்ளைகளும் அங்கு வாழ்வதை விரும்பியதாகவும் ஆனால் பரிஸ் ஒரு பாதுகாப்பான இடமாக இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் பிரித்தானிய ஊடகங்கள் பிரெஞ்சு மக்கள் மீதுசேறு வீசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எப்போதும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். 1999-செஸ்னியப் போராளிகள் மொஸ்கோவில் செய்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அவர்களைத் தொலைத்துக் கட்டுவேன் என விளடிமீர் புட்டீன் வெகுண்டு எழுந்தார். இரசியர்கள் கலக்கமடையவில்லை.

பிரான்ஸின் உளவுத்துறையின் வலுவின்மையா?

பல ஊடகங்கள் பிரான்ஸின் உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்கள் பிரான்ஸில் வாழ்கின்றார்கள். பிரித்தானியா ஒரு தீவாக இருப்பதாலும் அமெரிக்கா மேற்காசியாவில் இருந்து தொலைவில் இருப்பதாலும் தீவிரவாதிகளுக்கு அங்கு நுழைவது சிரமம். பிரான்ஸில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு.இருந்தும் இரசியாவில் இருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பரிஸிற்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்களைக் கொண்ட பிரான்ஸில் இருந்துதான் அதிக அளவு போராளிகள் ஐ எஸ்ஸில் இணைந்துகொண்டனர். பிரான்ஸின் படை முகாம்களில்இருந்து ஐ.எஸ் போராளிகள் பல வெடிபொருட்களைத் திருடியுள்ளனர். இதில் 200 வெடிக்கவைக்கும் கருவிகள்(detonators) உள்ளடங்கும்.

சதிக் கோட்பாடு

அமெரிக்க உளவுத்துறை சிஐஏயின் முன்னாள் இயக்குனர் John Brennan பிரெஞ்சு உளவுத்துறை DGSE இயக்குனர் Bernard Bajolet, பிரித்தானிய உளவுத்துறை MI6 இன் உயரதிகாரி John Sawers,, இஸ்ரேலிய உளவுத்துறை DMI இன்முன்னாள் இயக்குனரும் இஸ்ரேலின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான,Yaacov Amidror ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 2015 ஒக்டோபர் 27-ம் திகதி மேற்காசியாவின் எதிர்காலம் தொடர்பாக ஒரு மாநாட்டை நடாத்தினர். இந்த இரகசியக் கூட்டம் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின்வதிவிடத்தில் நடந்தது இந்தக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கின்றது என நம்பப்படுகின்றது.பரிஸ் நகரம் பாதுகாக்கப்படுவதாயின் ஐ.எஸ் ஒழித்துக் கட்டப்படவேண்டும் என்ற தலைப்பில் நியூயோர்க் ரைம்ஸ்ஸில் வந்த கட்டுரை நடக்கப் போவதற்குக் கட்டியம் கூறுகின்றது.

ஈழத் தமிழர்கள் தமது ஆட்சி உரிமையை இழந்தமைக்கு ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியாளர்களைக் குற்றம் சுமத்துகின்றோமோ அத்தனைக்கும் மேலாக பிரான்ஸின் மீது குற்றம் சுமத்த பல இஸ்லாமிய இனக் குழுமங்களுக்கு உரிமை உண்டு. சில இஸ்லாமியர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கள்:-

“God is great and thank God for these lone wolf attacks. At least 100 hostages and countless wounded.”

“Oh God, burn Paris as you burned the Muslims in Mali, Africa, Iraq, Syria and Palestine.”

பல ஐ.எஸ் ஆதரவாளர்கள் அடுத்தது பிரித்தானியா என்றுக் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பின் விளைவுகள்

பரிஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவுக் கொள்கையே. தாக்குதலாளிகளுள் ஒருவர் சிரியாவில் இருந்துபுகலிடத் தஞ்சம் கோருபவராக வந்தவர் என நம்பப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தேசியவாதக் கட்சிகளிற்கான ஆதரவு அதிகரிக்கும். நேட்டோவின் உறுப்பு நாடான பிரான்ஸின் மீது நடந்த தாக்குதலை மற்ற 27 நேட்டொ நாடுகளும் தம்மீது நடந்த தாக்குதல் போல் கருதிச் செயற்பட வேண்டும். பிரான்ஸிற்கு அவை இனி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இது நேட்டோ உடன்படிக்கையின் முக்கிய அம்சம். நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி இதுவரை காலமும் ஐ.எஸ் போராளிகளுக்கு மறை முகமாக உதவி வந்தது. அதில் இணைவதற்கு போராளிகள் உலகெங்கிலும் இருந்துதுருக்கி ஊடாகவே செல்கின்றனர். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய துருக்கி ஒத்துழைக்கத் தயக்கம் காட்டி வந்தது. இனி அது முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளின் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தயக்கம் காட்டியது. அதற்கானஅனுமதி பிரித்தானியப் பாராளமன்றத்தில் கிடைக்காது என பிரித்தானிய வெளியுறவுத் துறை கணிப்பிட்டது. அதனால் அந்த முன்மொழிவு பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை.

ஏற்கனவே நேட்டோ உடன்படைக்கையைப் பிரித்தானியப் பாராளமன்றம் ஏற்றுக் கொண்டபடியால் பிரித்தனியப் பாராளமன்றத்தின் சம்மதம் பெறாமல் பிரித்தானியாவால் சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய முடியும்.மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்புக்கான செலவுகளையும் உளவுச் செலவுகளையும் அதிகாரிக்கவேண்டியிருக்கும். இத்துடன் போர் மூளக்கூடய அபாயமும் அதிகரித்திருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிப்படையும். பங்கு விலை வீழ்ச்சி, நாணயங்கள் மதிப்பிழத்தல், தங்கம் விலை ஏறுவது போன்றவை நடக்கலாம்.

ஐ எஸ்ஸின் முடிவின் ஆரம்பமா?

சிரிய அரசு, அமெரிக்கா உட்பட்ட 28 நேட்டோ நாடுகள், இரசியா, ஈரான், ஹ்ஸ்புல்லா அமைப்பு, குர்திஷ் போராளிகள், யதீஷியர்கள் இப்படி பலதரப்பட்ட எதிரிகள் மத்தியில் ஐ.எஸ் போராளிகளால் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்? எனலாம்.

Photo Courtesy – BBC.CO.UK