பிரதாபன் காலமானார்

89

பிரித்தானிய தமிழ் விளையாட்டு சபையின் (British Tamil Sports Council) தலைவரும், யாழ் இந்துகல்லூரி பழைய மாணவர்சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் முக்கிய உறுப்பினாராகச் செயற்பட்டுவந்தவருமான திரு. லோகசிங்கம் பிரதாபன் இன்று, மே 2ம் திகதி காலமானார். கொரோனா தொற்றினால் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் London, Barnet  மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப்பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் காலை 10.20 க்கு அவர் சாவடைந்தார். அவருக்கு வயது 52.

வர்த்தகரான திரு. பிரதாபன் விளையாட்டுத் துறையில் தமிழ் இளையவர்களை சாதிக்க வைக்கவேண்டும் என்பதனைத் தனது இலட்சியமகாக் கொண்டு அதற்காக அயராது உழைத்துவந்தார். பிரித்தானிய தமிழ் விளையாட்டு சபையினால் வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் வியைாட்டுப் போட்டிகளினை ஏற்பாடுசெய்வதில் அவரது பங்கு அளப்பரியது.

விளையாட்டுத்து துறை தவிர்ந்து தமிழச் சமூகத்திற்கான நற்பணிகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன் பல்வேறு செயற்திட்டங்களுக்கு நிதிப் பங்களிப்பினையும் வழங்கி வந்தார்.

தமிழ்த் தேசியப்பற்றாளரான திரு. பிரதாபனின் இழப்பு தமிழ்ச்சமுகத்திற்கு பேரிழப்பாக அமைகிறது.