பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 854 மரணங்கள்

144

பிரித்தானியாவிவில் கடந்த 24 மணி நேரத்தில் (07/04/2020) கொரோனா வைரஸ் தாக்கி 854 மரணங்கள் பதிவாகியுள்ளதாக NHS தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து பிரித்தானியாவின் மொத்த இறப்புகள் 6,227 ஆக அதிகரித்துள்ளது. அறிவிக்கப்பட்ட 854 மரணங்களில் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 96 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (06/04/2020) அறிவிக்கப்பட்ட 437 பேரின் இறப்பு எண்ணிக்கையில் இருந்து கிட்டத்தட்ட இன்றைய எண்ணிக்கை இரு மடங்காகும். எதிர் வரும் வாரங்களில் பரவுகையும், மரணங்களும் உச்சமடையலாம் எனவும்,குறிப்பாக ஈஸ்டரை அண்மித்த ஏழு நாட்கள் உச்சமாக இருக்கும் எனவும் மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர்.